Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Monday, March 4, 2024

#வேலன்

 உள்ளதொரு #வாழ்க்கை

நல்லதொரு நாளை
தேடி ஓடி தினமும்
வாடி ஒதுங்கும் நேரம்
துன்பம் மேலும் பெருகும்
இன்பம் தூரம் அகலும்
நம்பிக்கை விடும் நேரம்
தன்னம்பிக்கை தோல் கொடுக்கும்
நாளில்!
#வேலன் வருவான் தன்
வேலோடு!
வினைகள் எல்லாம் பொடிகள் ஆக்கி
நல்லவை எல்லாம் நம்மோடு மலர்ந்திடுமே.

Monday, March 23, 2015

வாழ்க்கைப் போர்! - கவிதை


எழுத துடிக்கும் கைகளுக்கும் 
வார்த்தைகளை தேடிகொண்டிருக்கும் புத்திக்கும் 
இடையே போர்!

முதல் போர்!
கடந்த காலம் தரும் நினைவுகளை சுமந்து..
சுவுடுகளை மறைக்கும் தவறுகளின் சீர்திருத்தம்!
காதலில்லை உலகிலென 
கண் துருத்தி பார்த்தால்! 
மடை திறந்தார் போல் ஊற்றுகிறது வீதிக்கோர் காதல் 
விளக்கதிற்கோர் காதல், போட்டிக்கொரு காதல் 
உணர்விர்க்கோர் காதல்... அது பச்சை பசேலென தழைத்திருந்தது..
நடக்கும் பாதையில் புத்துணர்வு பிறந்தது
ஆனால் வாடியவை கண்டு வெதும்பியது...

இரண்டாம் போர்!
நிகழ்காலம் தந்து கொண்டிருக்கும் சுவாரசியங்களில் 
கால மாற்றம் தரும் ஆச்சரியங்களின் சீர்திருத்தம்!
சுமையென கருதும் உலகில் 
கண் துருத்தி பார்த்தால்!
பணி சுமை, உடல் சுமை, தேடல் சுமை 
வாழ்க்கை சுமை, வாழ்வாதாரம் சுமை 
ஆனால் பாசமெனும் சுமை அனைத்தையும் கட்டிக்கொண்டது!
வாழ்க்கையில் தெளிவு இருந்தது இன்றைய நாள் போனதென்று.. 
ஆனால் இழந்தவை கண்டு வெம்பியது..

மூன்றாம் போர்
எதிர்காலம் புரியாமல் எதை நோக்கி என்றும் தெரியாமல்..
கடந்தவை மீண்டும் பெறமுடியாது என்று விளங்கியும்!
சேமிப்பு ஒன்றே வாழ்வாதாரம் எனும் உலகில் 
கண் துருத்தி பார்த்தால்
பண சேமிப்பு, இடம் சேமிப்பு, மருத்துவ சேமிப்பு 
கல்யாண சேமிப்பு, களிப்பு சேமிப்பு, வீடு சேமிப்பு 
ஆனால் அவை திட்டமிடலின் பரஸ்பரம் 
வருமானம் சேமிக்கலாம்.. வளமாகவும் இருக்கலாம்!
ஆனால் இரண்டாம் போர் கருதி ஏங்கியது!

http://www.chillzee.in/poems-link/207-p-rasal-kavithaigal/4177-vazhkkai-por

இப்படிக்கு,
ப.இரசல் 

Thursday, January 29, 2015

பிரிவில் காதல் - கவிதை



உன் பிறந்தநாளுக்கு நாம்...
காதலிக்கும் பொழுது
நீ ஓர் இடத்தில் நான் ஓர் இடத்தில்!
நினைத்தாலும் பார்க்க முடியாது?
பிரிந்த பின்
நினைத்தும் பார்க்க முடியாது..
நாம் ஓர் இடத்தில்..
இப்படிக்கு,
நீயும் நானும்

Thursday, July 18, 2013

கவிஞர் வாலிக்கு அஞ்சலி


கவிஞனின் காதல் வரிகளில்
காதல் வளர்க்கும் இளைய சமூகம்?
உன் எழுத்தினால் காதலிக்கவும்!
வெற்றிபெற்றால் கொண்டாடவும்!
இழந்தால் வலிக்கவும்!

இன்று!
இசையோடு வந்த உன் வரிகள் இல்லாமல்
திக்கு திசையின்றி மௌனமாய்
உன் காலடியில்!
கண்ணீர் அஞ்சலியில்!

என்றும் உன் வரிகளை அசைபோடும்
ரசல்

Wednesday, June 19, 2013

தொழிற்சாலை

ஒரு கொத்தடிமைகளின் தொழிற்சாலை
முக்கால்வாசி தொழிலாளர்கள் சிகப்பு உடையில் 
மீதம் உள்ளவர்கள் வெள்ளை,பச்சை,மஞ்சள் என பகுதிவாரியாக 
வேலைக்கேற்ப உடை!



தொழிற்சாலையின் ஒவ்வொரு பகுதியும் 
அனைத்து நாள் அனைத்து நேரங்களிலும் 
இயங்கி கொண்டே இருக்க வேண்டும் 
சிலர் தூங்கும் நேரம் பலர் முழித்திருப்பர்!

தொழிற்சாலையின் ஒரு பகுதி காற்று சுத்திகரிப்பு நிலையம் 
வெள்ளை உடை அணிந்த அடிமைகள் மாசுபடர்ந்த காற்றில் இருந்து 
தூய்மையான உபயோகமுள்ள காற்றை மட்டும் 
பிரித்தெடுத்து மாசு காற்றை வெளியேற்ற வேண்டும்!

இன்னொரு பகுதி உணவு கட்டுப்பாடு மற்றும் மேம்பாடு 
சிகப்பு நிற அடிமைகள் வருகின்ற சரக்கில் இருந்து 
பிரித்தெடுத்து ஒவ்வொரு ஊட்டச்சத்தையும் கணக்கெடுத்து 
அதன் பின் ஏற்றுமதி செய்ய வேண்டும்!

சரக்குகள் ஒவ்வொரு நாளும் பல விதம் வந்தடையும்
ஏன் சில நாள் வராமலே போகலாம் 
வருவெதென்ன போவெதென்ன கணக்கிட்டு 
ஒவ்வொரு நாளும் ஓடிவிடும்!

தினம் உயரும் வியாபாரம் அதற்கேற்றார் போல் 
விஸ்தரிக்க படும் தொழிற்சாலை இது
பல அடிமைகள் மாண்டு போய் 
அதே இடத்தில் சமாதிகள் ஆன கதைகள் ஏராளம்!

நிர்வாகத்தின் பொறுப்பின்மை அள்ள அள்ள குறையாமல் 
கிடைத்த வருவாய்கள் போதாமல் 
நாளுக்கு நாள் குன்றி போக 
ஒரு நாள் சரக்குகளின் வரவு நின்று போனது!

சளைக்காத தொழிலாளர்கள் மீதம் உள்ளதை 
உட்கொண்டு மேலும் பல நாள் நிர்வாகத்தை 
நம்பிக்கையுடன் செயல் பட வைத்தாலும் 
அடிமைகளின் உயிர் பறிபோய் கொண்டேயிருந்தது!

இந்நிலையில் காற்று தொழிற்ச்சாலையில் 
புதிதாய் வந்த ஒரு கிருமி தாக்கி 
ஒட்டுமொத்த அடிமைகளையும் உயிர் வாங்க 
நிர்வாகமும் சேர்ந்தே மாண்டு போனது! 

நம் உடலின் பெரும்பகுதியே இந்த தொழிற்ச்சாலை 
கண்ணுக்கு தெரியாத அடிமைகளின் உணர்வுகள் இவை..
சிகப்பு நிற அடிமைகள் நம் ரத்த குழாய்களின் மூலம் ரத்தத்தை ஓட செய்து 
வெள்ளை நிற அடிமைகள் மூச்சுக்காற்றின் மாசு தீர்த்து 
தினம் உன்னை வாழ வைக்கும் மனித நிர்வாகமே!

இயற்கையின் மாசுபாட்டால் ஒரு நாள் உயிர் இழக்கும் நம் சமுகமே!

என்றும் அன்புடன்,
ரசல் 

Thursday, March 7, 2013

ரத்த தான முகாம்!


ரத்த தான முகாம்!

அடிபட்டு வெளிப்படும் என் குருதி 
மற்றவர் பயன்படவே குழாயில் ஊசியிட்டு 
இன்று பதபடுத்த படுகிறது ரத்தம் சேமிப்பானில்!

நானென்னடா நான்கு முறை தான் 
வந்தவர் எல்லாம் பத்து பதினைந்து 
இருபதென்று கணக்கிட்டு கொண்டனர்!

குருதி பார்த்து மயங்கியவர் எல்லாம் 
கண்கள் மூடி வலியை எள்ளி 
நரம்பினில் வழியிட்டனர் தம்குருதிக்கு!

மூடிய கண்கள் திறந்தவர் தம் 
நண்பர்களை கண்டு புன்னைகையோடு 
மீண்டும் கண் மூடி ஆழ!

ஒலிப்பான் ஒலித்து நிரம்பியது என்றது 
வலியில்லை மீண்டும் ஊசி எடுக்கையில் 
ஒட்டு போட்டு அடைத்த ஓட்டை போல் 
கையிலே பிளாஸ்திரி!

வளைத்தே வலித்து கரங்கள் இறுகி
மனம் போன திசை தெரியாமல் 
அமைதிமட்டும் கண்களில் கையில் பழச்சாறுடன்!

என்றும் அன்புடன்,
ரசல் 

Wednesday, March 6, 2013

காதல் வர்த்தகம்


காதல் சில்லறை வர்த்தகமா இல்லை
கடல் கடந்து நடக்கும் வியாபாரமா
இரண்டிற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை
அங்கே திருமணங்கள் வியாபாரம் ஆக்கப்படும்போது
மனதினை கொன்று புதைக்கும் போது
வியாபாரம் செழிப்பாய் நடக்கிறது
வியாபாரிகள் பல நேரம் ஜாதியை பேரம் பேசுகிறார்கள்,
விலை போனவர்கள் தேதியை கணக்கிட்டு கொண்டிருக்கிறார்கள்
ஒரு பொருள் விலை தெரியாமல் வீதியிலே
மறுபொருள் எதற்காக விலை போனோம் என்று தெரியாமல்!

Wednesday, December 12, 2012

முரசு பாடலும் நானும்!


மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் நினைவோடு 
கவியின் முரசு பாடலும் நானும்!


நான்:
உனக்கென்ன பாரதி நீ எழுதி விட்டாய்..
நீ பிறந்த தமிழகத்திலே 
சாதி வன்கொடுமைகள்?
பார்ப்பனாய் பிறந்து 
சாதி ஒழிப்பு பாடல்கள் 
உன் சினங்கெழ தோலுரித்தாய்! தொகுபுரைத்தாய்!

சாதி வளர்க்க இங்கே தமிழன்
கட்சி வளர்க்கிறான் 
சாதி இல்லை என்று சொல்லி 
ஒருவன் சாதி வளர்பவனுக்கு 
தண்ணீர் ஊற்றுகிறான்!

இது புரியா ஒரு கும்பல் 
குடிசைகளை தீக்கு இறையாக்கிறான்
குடும்பங்களை நாசமாக்கிறான்!
கேள்வி கேட்டால் கட்டி உதைக்கிறான்
எட்டி மிதிக்கிறான்!

பாரதி தமிழ் பற்றி படிப்பவர்கள் கூட 
பாரதத்தில் வாழும் தமிழனை கண்டுகொள்ளவில்லை 
ஏளனம் செய்தான்!
மீன் பிடித்து வாழும் தமிழனை கொன்றாலென்ன 
சிறை பிடித்து சென்றாலென்ன?
வாய் வார்த்தை போராட்டம் மட்டும் தான் 
மறத்தமிழனின் உடன் பிறப்பா?

நீயோ அன்று கொட்டு முரசே என்று பாடி விட்டாய்!!
நீ இன்றிருந்தால் உன் கொட்டு முரசை 
"மீன் பிடி மீனவனும் 
விவசாயம் செய்யும் உழவனும்  
பணம் தேடி அலையும் எந்த ஒரு உயிரும் 
ஒன்றென இப்பூவுலகில் காணீர்"
என்றிருப்பாயோ?

என்றும் அன்புடன்,
ரசல் 

Tuesday, September 18, 2012

கசாப் கருணை மனு!

கொல்லும் போது உனக்கில்லாத கருணை 
உனை தூக்கில் இடும் போது எங்களுக்கு எதற்கு?
அதனால் தான் என்னவோ சாகும் வரை தூக்கில் இடும் தண்டனை உனக்கு...
இதையாவது செய்யுமா எங்கள் குடியரசு!!!

Monday, September 17, 2012

இந்த புறம்போக்கு அரசியலில் வீழ்வது மனிதமடா!


கேட்பாரற்று இருப்பதாலே வாழ்ந்து வரும் கொடியவன்
புத்த மத நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதிக்க வக்கில்லை?
என் தமிழர் வாழ்வாதாரம் சிதைந்து விட வாழ்ந்துவிட்டு...
எம் நாட்டில் குடித்த ரத்தம் பத்தாதென்று இங்குவந்து
உன்னால் நாங்கள் கருப்பு கொடி காட்டினால் அடி..
கூட்டம் சேர்ந்தால் கண்ணீர்புகை..
பேரணி நடத்தினால் துப்பாக்கி சூடு..
இந்த புறம்போக்கு அரசியலில் வீழ்வது மனிதமடா!

Monday, July 11, 2011

Truely Deeply Madly

உணர் பொருள் உணராதிருந்தேன் நேற்று வரை
கண்டு கொண்டேன் இன்றுடன் காலம் வரை!

உளம் கண்டு எண்ட்றுனறாய் நான் கொண்ட பாசம் இல்லை
என் பெற்றோரிரிடம்!
என் குணம் கண்டு என்னை விட்டு பிரியா காதல் என்னிடம்!
உன்னாளே!

உன் எண்ணம் என்னவென்று தெரியாமல் காதல் கொண்டேன் அன்று
உன்னிடம்!
என் உள்ளம் அறிந்து காதல் கொண்டாய் என்றும் மாறா
உணர்வும் கண்டேன் உன்னிடம்!

என்னிடம் பிடிக்கா செயல்களை கூட நீ மாற முற்பட்டாய்
இன்று உன்னை கண்டே காதல் செய்யா புறப்பட்டேன்!

சண்டை என்றே நான் கூச்சலிட்டாலும் என்றுன்னை காணுவேன்
என்றே அழுதேன்!

நித்தம் நூறு குறைகள் உன்னை கூறினாலும் என் தவறு என்றே
என்னை சமாதனம் செய்தாய்!

காதலில்லை என்று உன்னை இகழ்தாலும் காதலேன்றே என்னிடம்
மீண்டும் வந்து!

உள்ளம் உணகென்று ஆனபின் காதல் சொல்ல எனக்கு விளக்கம் தேவையில்லை என்றாய்!

உன்னை இகழ்ந்தாலும் கூறு போட்டு வார்த்தையால் கொன்றாலும்
என் காதல் உனக்கு என்றேன் காலம் எல்லாம்!!

காதலித்தேன் உன்னை!!! Truely,Deeply,Madly

Saturday, April 2, 2011

எதற்கு?????

விழிகளில் வழிந்தோடும் நீர் எதற்கு
இமைஎனும் தடை வந்தும் பெருக்கெதற்கு!

நெஞ்சம் எனும் புத்தகத்தில் முன்னரை எதற்கு
குருதி எடுத்து எழுதிய போதும் உணர்வெதர்க்கு!

சேருமிடம் சேர்ந்து வலிகள் தீர்ந்து களிபெதர்க்கு
உயிரில்லை உன்னிடம் என்ற விளிபெதர்க்கு!

தன்னிலை மறந்த உயிரெதற்கு
உன்னிலை அறியா இந்த வாழ்வெதற்கு!

எதற்கென்று தெரியாமல் இந்த காதல் எதற்கு!

Tuesday, March 29, 2011

இரவே கடந்திடுவாய்!

இரவே கடந்திடுவாய்!

உறங்க மறுக்கும் கண்களை!
உளற மறுக்கும் வார்த்தைகளோடு
கடத்த மறுக்கும் நேரங்களை
இரவே கடந்திடுவாய்!
உன்னை மீண்டும் நாளை சந்திக்கிறேன்!

Thursday, January 13, 2011

என்றும் சந்தோசம்!

யாரும் உயுரா உயரங்கள் இல்லை
இது தான் எல்லை என்று முடிவும் இல்லை
சறுக்கல்கள் கீறல்கள் இருந்தால் தான்
ரணம் ஆறும் முன் எண்ணம் உறுதிப்படும்

நடந்து வந்த பாதையில் குற்றம் கண்டால்
உறுதி கொண்ட இதயம் தான் உடைபடும்
தவறு செய்தததை போல் கூனி குருகும்
சற்றே நாம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்போம்!

சோகம் மட்டுமே வாழ்கை என்று இருந்ததில்லை
இன்பம் என்றும் சீராய் நிலைத்ததில்லை
இரண்டும் கலந்த நேரமும் நினைவில்லை
தடுக்கி விழுந்த நம்மை உற்சாக படுத்தி நடக்க வைத்த பெற்றோரை நினைவுகொள்!

முதல் தோல்வி உன் நடை பழக்கத்தில் தான்!
ஆனா ஆவன்னா பேச பழகி அம்மா அப்பா அழைத்து
மழலை சொல் கேட்டு பூரித்து போன நாட்கள் கடந்து
இன்று படித்து முடித்து உற்சாகம் இழந்தால் உள்ளம் நிறைய போவதில்லை!

போதுமென்ற மனம் வேண்டும் போதுமான அளவு பொருள் வேண்டும்
இறைவன் அருள் வேண்டும் படித்தவுடன் வேலை வேண்டும்
கரை ஓரம் வீடு வேண்டும் முக்கியமாக படுத்த உடன் உறக்கம் வேண்டும்
இது மொத்தம் ஒரு அடிப்படை உரிமையாய் அனைவருக்கும் வேண்டும்!

உள்ளம் தான் காரணம் மனம் பண்பட்டால் உன் தரம் உயரும்
பெற்றோர் சுற்றார் மனம் குளிரும்
நீ பார்க்கும் பார்வை தெளிவு பெரும்
நடந்த வந்த பாதையில் தவறில்லை நீ திருத்த வேண்டியது இனி போகும் பாதையே!

உற்சாகமாகு சந்தோசமாய் உன் பிறந்த நாளுக்கு அழைக்கதவர்களை நகை யாடு!
உடன் இருப்பவர்களுக்கு விருந்து கொடு பணம் விரயம் மனம் என்றும் சந்தோசம்!

Wednesday, November 24, 2010

சில்லுனு இருக்குதுப்பா

விடியல் வரும் முன்னே எழுந்த நான்...
சுற்றும் முற்றும் கண்களை விரல் விட்டு ஆட்டி விழிக்க முற்படுகிறேன்...
சோம்பல் என்னை முரிக்கவே நான் மீண்டும் உறக்கம் வந்து உறங்கிவிட்டேன்..

சற்று நேரம் கழித்து என்னை எழ சொல்லி காதருகே ஒரு குயில் கூவியது....
குயிலை முறைத்து கொண்டேன் அமைதியானது ஒன்பது நிமிடம் கழித்து..
குயில் மீண்டும் கூவியது.. என் மணிகூண்டு குயில்...
இந்த முறை ஓங்கி அறைதேன் அவ்ளோ தான் சுற்றும் அமைதி..

களைந்து விட்ட தூக்கம் அறிந்து குறுந்தகவல் புரட்டினால் இன்னும் ஐம்பது நிமிடம் தான் அதற்குள் பணிக்கு கிளம்ப வேண்டும்....
குனி நிமிரு குதி இவைதான் நான் அறிந்த உடற்பயிற்சி முன்னும் பின்னும் முரண் செய்து...

ஒருவேளையாக குழாய் திருகி தண்ணீரை தொட்டால் சில்லுனு இருக்குதுப்பா..
தண்ணிய சுட வச்சி பல் வெலக்கி குளிச்சு வெளிய வந்தா இருபது நிமிஷம் போச்சா...

தரையில் அமர்ந்து இஸ்திரி செஞ்சா தரையும் சில்லுனு இருக்குதுப்பா..
ஒரு வழியா டிரைவர் போன் பண்ணி அடுத்த பிக்குப் நீங்க தான் சொன்ன உடனே வெளிய போனா...

முடியல ரொம்ப சில்லுனு இருக்குதுப்பா....
ஆனா அந்த நேரம் காலை நேரம் வந்தாங்களே பாருங்க எங்க மக்கள் ... ejipura military parade பாக்கவே ரொம்ப சிலிர்க்க வச்சிடுச்சு..

அவங்க சுட தண்ணீர்ல குளிக்கல alarm வச்சி எழுந்திரிக்கல நாம IT மக்கள் என்ன பண்ணிட்டோம்.. பெருமையா சொல்லிக்க?????

தூக்கம் வந்துச்சி ஆபீஸ் டைம்ல் எழுதி புட்டேன்... எனக்கே என்ன நெனச்சா இப்போ சில்லுனு இருக்குதுப்பா...

Monday, November 8, 2010

எழுதலைகள் இக்கவிதையிலே உருவகம் உன் நினைப்பிலே!

உணர்வலைகள் தேடிவரும் உன் கைபேசி அலைவரிசை இல்லாத இடத்திலும்!!
கனவலைகள் உன் தூக்கத்திலே மனவலிகள் உன் துக்கத்தில்
நொடியலைகள் நிமிடத்திலே என் துடிபலைகள் உன் அழுகையிலே
விடியலை தேடி வரும் இரவலைகள் கடத்தி போகும் நம்முடைய துணிவிலே!

எழுதலைகள் இக்கவிதையிலே உருவகம் உன் நினைப்பிலே!

தீபஒளி வாழ்த்துக்கள்

கண்ணெல்லாம் பூத்திடுச்சு முன்பதிவு செய்த பேருந்திற்காக!

தீபஒளி கண்கவர் வான வேடிக்கை தொடர் இடி சரவெடிக்கு ஓடி ஒலியும்
சிறார்க்கு மத்தாப்பு இருந்தால் பொல்லாப்பு விலகிவிடும்!

காத்திருந்து வந்த பண்டிகையை சேர்த்து வைத்த சந்தோஷத்தை பகிரதானே இனிப்புகள்!

புது உடை வளம் வர நெடுநடை கடையை சுற்றி
எண்ணம் பிடித்த உடை எடுத்து பிம்பம் சரி பார்த்தே தேர்வு செய்து
உலா வரும் நண்பர்களே!

விழாகோலம் கொள்ளும் நேரம் தொலைக்காட்சி பாராமல்
பகிர்ந்திடு இந்த உணர்வை உன் நா சுவையோடு!

தீபஒளி வாழ்த்துக்கள்

Monday, January 11, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்! கண்மணியே!

திக்கு திசை மாறி காற்றில் பறந்து வந்த வண்ணத்துபூச்சி நீ
உன்னுடய வண்ணங்கள் தான் எத்தனை
வண்ணங்கள் யாவும் உன்னுடைய எண்ணங்கள் தானே
திசை மாறி வந்தாலும் உன் இருப்பிடம் நோக்கி தானே வந்தாய்!

நானும் ஒரு வண்ணத்துபூச்சி தான் நிறம் ஒன்று தான்
எண்ணங்கள் வேறு காற்றோடும் திசையில் எதிர் நோக்கி பயணங்கள்
கிடைக்கும் மரங்களில் இளைப்பாறி என் குறிக்கோளை நோக்கி
என் குறிகோளும் நீ இருக்கும் இடத்தை தேடி தான்!

திக்கு முக்காடி போனேன் உன் இடம் அடைந்த பின்
உன் குரல் மட்டும் அறிந்து உன்னை காணாமல்
நீ தான் என் தேடல் என்றும் உணராமல்
மரக்கிளையில் இருக்கும் வேறு வன்னதுபூச்சியை கண்டு!

உன் என்னனங்கள் உன் குரலில் பிரதிபலித்திட
உன் வண்ணங்கள் யாதென்று உணர்ந்தேன்
என் எண்ணங்களோடு உன் குரல் வண்ணங்களில் இணைந்தேன்
தேடல் நீஎன்றும் உணர்ந்தேன்!

சிறகடிக்கும் உன்னோடு ஒரு நாள் சந்திப்பு
மனம் துடிக்கும் அதை இன்றும் நினைத்து.........

வினா கேட்கும் உன் குரலை கேட்டு
கண்டேன் கனவுகள் உன் குழலை தொட்டு!

குரலும் இனிமையானது என் கவிதையும் அழகானது
நீயே பொருளான போது!
உன் பிறந்த நாளை கொண்டாட நானில்லை உன்னோடு இன்று
ஆனால் என் எண்ணங்கள் உன் கருத்தோடு
உயிர் பொருளாய் நான் இல்லை உன்னருகில் ஆனால் உணர்பொருளாய் உன்னுள்ளே!!

உயிர் கொடு இந்த கவிதைக்கு
நீ முத்தமிட்டால் உணர்ச்சிபெரும்!
அரவணைத்தால் உயிர்பெறும் கண்மணியே!!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Sunday, November 15, 2009

இயற்கை அன்னை


இயற்கை அன்னை என்னை அழைக்கிறாள் தன்னுடனே இருந்து விடவே!
என்ன ஒரு சுயநலம் அவளுக்கு!
என்னை யாரும் அழைக்கவும் கூடாது என்று!!
என் கைபேசி அலைவரிசையை துண்டித்து விட்டால்!!
ஆனால் என்னக்காக என் உறவுகள் காத்திருக்கின்றனர்!
உன்னோடு ஒரு நாள் இருந்த நினைவுகள் புகைப்படங்களாய் என்னிடத்தில்!
அதை என் உறவுகளும் ரசித்திடுவர் நீயோ சுயநலவாதி!
நான் நினைத்து பார்க்க முடியாத அழகை எனகளித்து!!
வீடு திரும்பும் போது அவர்கள் அழைத்தாள் உன்னை மறந்திடுவேன்
என் கைபேசி அலைவரிசை கிடைத்த உடன்!!

முடிவு என்றுமே சுபமே


எழுத்துக்கள் தோரணம் கட்டின
உன் மனம் தேறும் என்றே!!

சுற்றம் நம்மை இகழ்திடுமோ உன் செயல் என்னை
பாதித்திடுமோ இன்றுன்னை தந்தை இகழ்ந்தாலும்....
சேர்ந்திடுவோம் நாமே பல இன்னல்களை கடந்து.....

பாச போராட்டம் நாளும் உனக்குள்ளே
நேசம் பெருகிடும் நமக்குள்ளே
இந்த இன்னலிலே....

கணம் பெருகிடும் உன் கண்ணீர் துளியும் உரமானது
என் நெஞ்சும் சற்றே ஈரமானது!!

உளம் நிறைய ஆசைகள் பெருக்கி தொண்டை குழியில்
சிக்கி தவிக்கும் வார்த்தைகள் கூட தண்ணீர் மறுக்கும்
நீ என்னை ஏங்கி அழுதாளே!!

கவலை நிறைந்த வாழ்க்கை இல்லை என்றும்
ஆவலை கூட்டிய சூழ்நிலைகள் தான் இன்றும்
உனக்குள்ளே நீ பூட்டிய வார்த்தைகள் சிலிர்படையும்
என்னிடம் பகிர்ந்தாலே!!

தட்டுதடுமாறி முடிவுகள் எடுப்பவர்கள் இல்லை நாம்
விட்டு போகும் என்றும் நாம் ஆரம்பிக்கவில்லை
சேர்ந்து வாழ்வோம் என்ற உணர்வை மட்டும் நம்பி
நம் காதலில் முதற் படி தாண்டினோம்!!

நடந்தவை யாவும் ஆரம்பமே நினைவுகொள் நாளும்
முடிவு என்றுமே சுபமே!!