Thursday, January 26, 2012

எனக்கும் காதலா! பகுதி 2

டிசம்பர் 20,2011:
ராஜேஷ் காலை 6:30 shift முடிந்து தூக்கம் கலையாமல் வீடு சேரும் போது மணி 7:30. உள்ளே நுழையும் போதே ஹரிஷ் யாரோடோ தன் கைபேசியில் உரையாடி கொண்டிருந்தான். அவர்கள் ரூமில் மற்ற ஐந்து பேரில் வீரா குளித்து விட்டு அடுத்து கோழி @ அருணை எழுப்பி கொண்டிருந்தான் மீதம் மூன்று பேர் உறங்கி கொண்டிருந்தார்கள். ஆனா!! என்ன அவர்களுக்குள் என்று தெரியாது? ராஜேஷ் இருந்தா மட்டும்... அவர்களுக்குள் கலகலப்புக்கு குறைவே கிடையாது.

ஹரிஷ் தன்னுடைய உரையாடலை(அதுக்கு பெயர் அதிகாலை கடலை) துண்டித்து விட்டு உள்ளே நுழைந்தான்.

ஹரிஷ்: என்ன ராஜேஷ் தூங்க போறீயா? சாப்டு தூங்கலாம்ல? இரு நான் நாயர் கடைல tiffen வாங்கிட்டு வரேன்...
ராஜேஷ்: சரி டா! பொங்கல் வடை கெட்டி சட்னி வாங்கிட்டு வா.. 
ஹரிஷ்: டேய் மாமா தூங்கிடாத வரேன்..(கண்டிப்புடன்)

(நாயர் கடைல அஞ்சு நாளைக்கு முன்னாடியே கெட்டி சட்னி செஞ்சு fridgela வச்சிருப்பாரு. இருந்தாலும் வேளச்சேரி TCS பின்னாடி இருக்குற நாயர் அவ்ளோ famous. அதே போல இவங்களுக்கு ரூம் பாத்து கொடுத்தவரும் அவர் தான் நைட் ரெண்டு மணி வரைக்கும் கடையை ஓபன் பண்ணி வச்சிருப்பாரு. எவ்ளோ late ah போனாலும் பாசமா சாப்பாடு போடுவாரு but digestion problem வந்ததில்ல)

(ஹரிஷ் வண்டி சத்தம் பீறிட்டது காலைலயே வண்டிய வாசல்ல விட்டுட்டு அவங்க வீட்டு மாடில இருக்குற சுரேஷ் அண்ணா பக்கத்துக்கு வீட்டு குடிகாரன் கிட்ட பேசிட்டு இருந்தாரு. அவர பத்தி அதிகமா சொல்லிக்க ஒன்னும் இல்ல but அவருக்கு இவங்க ரூம்ல தெரிஞ்ச ஒரே பேரு ஹரிஷ், அவருக்கு ஹரிஷ் எப்பவோ உதவி பண்ணிருக்கான் அதனால அவன மட்டும் ஞாபகம் வச்சிருக்காரு)

அவன் உள்ளே நுழையும் போதே.. வீரா,அருண் வேலைக்கு கெளம்பி போனாங்க. ஆனா சும்மா போகல ராஜேஷ கலாச்சிட்டு போறானுங்க. யாருக்குமே ராஜேஷை கிண்டல் பண்ணனும் தோணும், ஆனா அவன் யாரையும் திட்ட கூட மாட்டான், அவனுக்கு தெரிஞ்ச அதிக பட்ச கெட்ட வார்த்த "போடா வெண்ணை! சரி நீ மூடு".

ராஜேஷ் facebookla status message update பண்ணிட்டு இருந்தான். "Yesterday was a excellent day, in office we are playing Chirst Maa Christ Child and we are entertained much. Laugh riots everywhere"

ஹரிஷ்: டேய் ராஜேஷ் மொபைல் நோண்டாம சாப்டு தூங்கு 

ராஜேஷ்: அது ஒன்னும் இல்ல மச்சி நேத்தி ஆபீஸ்ல நடந்த கூத்த facebookla update பண்ணிட்டு இருந்தேன்.
(நைட் நடந்தத ஹரிஷ் கிட்ட விவரிச்சான்)

ஹரிஷ்: அது என்னமோ போடா உனக்கு மட்டும் office cabla figure வருது,எங்க! நாம எல்லாரும் ஒண்ணா போனாகூட உன்ன தாண்ட பாக்குறாங்க!

ராஜேஷ்: நிறுத்துரா வெண்ணை! நீ மட்டும் காலைலயே கடலை போடலையா..

ஹரிஷ்: டேய் அது friend da! எங்கள யாரு பார்த்தாலும் friend ah தான பாக்குறாங்க.. உங்கள அப்படியா!

ராஜேஷ்: சரி நீ மூடு..

(tiffen சாப்டும் போதே ஹரி(இன்னொரு roommate) எழுந்து ராஜேஷ் பொங்கல்ல கைய வச்சான். பல் வெலகாம சாப்டறது அவனுக்கு மட்டும் இல்ல இந்த gang க்கே உரித்தான ஒன்னு ஒரு தடவ யாரோ foriegn சாக்லேட் கொண்டு வந்தாங்க அதுவும் காலைல நாலு மணி.. அஞ்சு மணிக்கெல்லாம் கூட்டா சேந்து முடிச்சு புட்டானுங்க)

மாலை ஆறு மணி:
ராஜேஷ் மொபைல் மெசேஜ்:(அது ஒரு forward message ஹரிஷ் அலுவளிடம் இருந்து)
"ஒரு அழகான பொண்ணுகிட்ட எந்த மாறி பையன் வேணும் லவ் பண்றதுக்குன்னு கேட்டா 
அவன் ஒரு சிறந்த போட்டியாலரா இருக்கணும் என்னோட காதல விட  அவனோட காதல காட்றதுக்கு"
ராஜேஷ் replies "நானும் அந்த மாறி பொண்ண தான் தேடிட்டு இருக்கேன்"

(cab la வரும் போது இன்னைக்கு கீர்த்தி கிட்ட என்ன செய்ய சொல்லலாம்னு யோசிச்சிட்டு வந்தான். உதித்தது புது ஐடியா! வண்டியை விட்டு ஆபீஸ் வெளியிலேயே இறங்கினான், நேற்று சென்ற அதே fancy shop ல் அவன் நினைத்ததை வாங்கி கொண்டு ஆபீஸ் க்கு சென்றான்)

அவன் வருவதற்கு முன்னாலே அவனுக்கு செய்ய வேண்டிய task வந்துவிட்டது. saai கூட வந்துட்டான் அவன் cab இன்னிக்கி சீக்கிரம் போல.

ராஜேஷ்: saai whats up dude? என்ன இது என் deskboard ல யாரோ எழுதி இருக்காங்க? 
"You are a good child. Please wear this kitchen cap from 7 to 8PM and invite them to our cafeteria 'வாங்க சாப்பிடலாம் வாங்கன்னு' சொல்லுங்க. Urs Christ Ma"
ha ha ha... டேய் kitchen cap முடி கொட்டாம சாப்பாடு போட use பண்ணுவாங்களே அதான! ஹ்ம்ம் எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாங்களோ!

Saai: அட அந்த கொடுமைய விட இத பாருங்க என் desk la?

"Mr.Saai இத நடிகர் சூர்யா குரலில் படிக்கவும்(நிச்சியமா இது பெருமை பட கூடிய விஷயம்). சரி இன்னைக்கு நீங்க முழுக்க விஜயகாந்த் டோன்லயே பேசணும். எங்களுக்கு தெரியும் நீங்க நல்லா மிமிக்ரி பண்ணுவீங்கன்னு. நம்ம HR கிட்ட போய் 'ஆத்தா எனக்கு மட்டும் சம்பளம் ஜாஸ்தியா கொடுங்க.. எனக்கு உங்ககிட்ட பிடிக்காத வார்த்த  appraisal' nu சொல்லுங்க. உங்கள் கிறிஸ்து தாய்"

ராஜேஷ்: பரவாலைங்க உங்களுக்கு வராததையா சொல்லிருக்காங்க! பண்ணுங்க. ஆனா HR வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி சொல்லிடுங்க. ஆத்தா ன்னு சொல்லும் போது கண்ணுல தண்ணி வச்சிக்கனும்ங்க!! 

Saai: சரி இன்னைக்கு என்ன ஸ்பெஷல் உங்கள் கீர்த்திக்கு! 

ராஜேஷ்: சொல்றேன் வாங்க! இது chirstmas flag. இன்னைக்கு கொடி ஏத்தி சாக்லேட் கொடுக்க சொல்ல போறேன். வாங்க நம்ம முருகன(ICARE boy) போய் பாப்போம். . எல்லாரும் பாக்குற மாறி இருக்கணும்.
(walking towards cafeteria)

முருகன்: சார் என்ன இன்னைக்கு! 

ராஜேஷ்: (விவரித்தான் என்ன செய்ய வேண்டுமென) சரி இதுக்கு ஒரு நல்லா இடம் வேணும் அதே போல இதுல இந்த eclairs சாக்லேட் போட்டு முடிச்சிடு!
கயுற இழுத்தா சாக்லேட் கொட்டனும்! 

முருகன்: விடுங்க சார் நான் பாத்துக்குறேன்! நம்ம reception ல இருந்து உள்ள வந்த உடனே தான் கலர் கலரா கொடி தொங்க விட்டுருக்காங்களே!

ராஜேஷ்: சபாஷ் டா முருகா! சரி நான் போய் அந்த receptionist கீட்ட சொல்லிடறேன்!  
(ராஜேஷ் receptionist மற்றும் security கிட்ட சொல்லிட்டு அப்படியே கீர்த்தி desk call பண்ணி வரசொல்ல சொன்னான். வந்தவுடன் இந்த சீட்டை கொடுத்திருங்க. நான் யார்ன்னு சொல்ல கூடாது என்று கூறிவிட்டு சென்றான்)

Note to Kirti from ur chirst ma
"எத்தனையோ சந்தோஷங்கள் அதில் கொடி ஏற்றும் போது நமக்கு சாக்லேட் கெடைக்குமான்னு தான் நாம அண்ணாந்து பார்த்தது உண்டு!! ஆனால் நாம் கொடி எற்றுவோமா என்று நமக்கு தெரியாது? இன்று நீ கொடியேற்றி உனக்கு கிடைக்கும் சாக்லேட் ஐ உன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்"

கீர்த்தி இன்று சிகப்பு வெள்ளை நிற சுடிதார். பெண்கள் என்றுமே சிகப்பு வெள்ளை ஆடையில் அழகுதான்!! அவளும் விதி விலக்கல்ல. அவள் புன்னகை,நடை,பாவனை எல்லா அழகான பெண்களை போல் தான். கொஞ்சம் maintenance charges ஜாஸ்தி ஆகும் போலன்னு ராஜேஷ் நினைத்து கொண்டான்.

கீர்த்திக்கு receptionla இருந்து அழைப்பு வந்தது. அங்கே அவர்கள் கொடுத்த சீட்டினை வாங்கினாள். அவளை அக்கணம் பார்த்தவனுக்கு தோன்றும் சில வார்த்தை கோர்வைகள் இங்கே....

பூரிக்கும் பெண்கள் ஆயிரம் மின்னலுக்கு சமமா! 
என்ன அவளும் சாதாரண பெண் தானே!
அவள் வெட்கமும் புருவ படபடப்புகளும்
கொஞ்சல் சிரிப்பும் கெஞ்சல் கேள்வியும்!
அடடா யாரையும் சிலிர்படையுமோ!

அவள் கொடி ஏற்றத்திற்கு தயார் ஆனால். சற்று விழி பிதுங்கி நின்றாள்! எங்கே அந்த கொடி என்று?. முருகன் உதவி புரிந்தான். மேடம் அங்கே உள்ளதென்று அப்படியே அனைவரையும் கூவி அழைத்தான் கொடி ஏற்றத்திற்கு தயார் ஆகுங்கள் என்று. ராஜேஷ் ஒரு ஓரத்தில் Kitchen Cap அணிந்து கொண்டு நின்றிந்தான். கீர்த்தி கொடி ஏற்ற ராஜேஷ் முதல் ஆளாய் கை தட்டி அனைவரையும் தட்ட வைத்தான். 

ஐயோ!! ஒரு இழுவையில் கொடி ஏற்ற படவில்லை.. ராஜேஷ் முருகனை முறைத்தான். முருகன் உடனே முதல்வருக்கு உதவி செய்யும் காவல் அதிகாரி போல் அவள் கயுரை தொட இவன் ஏற்றினான். சாக்லேட் மழை பொழிந்தது. அவள் ரசித்து முடித்து ஒவ்வொரு சாக்லேட் ஐ எடுத்து அருகில் இருந்தவர்களுடன் பகிர்ந்தாள். அப்பொழுது saai விஜயகாந்த் குரலில் "ஹே புள்ள எங்களுக்கு சாக்லேட் கெடையாதா!" என்றான்.அனைவரும் நகை ஆடினர். கீர்த்தி ஒரு சாக்லேட் சாய்க்கும் கொடுத்தாள் ராஜேஷை பார்த்து இளித்து விட்டு போனாள். ஏன் என்றால்? சாக்லேட் அவனுக்கு கொடுக்கலயே!!!(அது ஒரு விஷயமே இல்ல அவனுக்கு! ஆனா அவனுக்கு ஒரு சந்தேகம் ஒரு வேலை kitchen cap போட்டதுனால சிரிச்சி இருப்பாளோ!! பொண்ணுங்க எதுக்கு சிரிக்கிரங்கன்னு தெரியுமா என்ன????)

சில பல சிரிப்பு சத்தங்களுக்கு பிறகு அனைவரும் மீண்டும் தங்கள் பணியினை தொடர்ந்தனர்!! 

(சாய் ராஜேஷ் கிட்ட விஜயகாந்த் குரலில் "நமக்கு இன்னைக்கு வந்த டிக்கெட் கவுன்ட் ஆறு அதுல நான் பார்த்தது ரெண்டு நீ நாலு" என்றான். அப்படியே HR கிட்ட போய் அப்பரைசல் பத்தியும் பேசிட்டு வந்தான் வரவழில நேத்து கழுதையா கத்துன பொண்ணு இன்னைக்கு "யார் தச்ச சட்ட தாத்தா தச்ச சட்டன்னு" அவுங்க டீம்ல இருகரவுங்க கிட்ட தொடர்ச்சியா சொல்லி "யார் தத்த தட்ட தாத்தா சட்ச சட்டன்னு" ஒளரிட்டு இருந்துச்சு)

என்றும் போல் அவனின் வேலை சற்று அதிகமாய் இருந்தது. இதில் இந்த வாரம் சனி அன்று ஒரு நியூ installation அதற்க்கு தேவையான document preparation ல் ஈடுபட்டான்.

உறங்க மறுக்கும் கண்களை!
உளற மறுக்கும் வார்த்தைகளோடு
இரவே கடந்திடுவாய்!
உன்னை மீண்டும் நாளை சந்திக்கிறேன்!

தொடரும்....

Thursday, January 19, 2012

எனக்கும் காதலா! பகுதி 1

ராஜேஷ் காதலை காதலிக்கும் சங்க உறப்பினர் yet single . ஹரிஷ் காதலை சுவாசமாய் உணர்ந்தவன் but single . நல்ல நண்பர்கள் உணர்வையும் இடத்தையும் பகிர்ந்தவர்கள் அவர்களுடன் மேலும் ஏழு பேர். காலம் போன போக்கில் அனைவரும் நடை பயணிகள் என்றாவது நாமும் நமக்கென ஆனவர்கள் வருகையை எதிர் கொண்டிருக்கும் ஒரு நல்ல gang .

ஆனால் காதலை காதலிபவர்களை தேடி 2012 ஆம் வருகை புரிந்தது அதன் தொகுப்பே எனக்கும் காதலா!.  
   
19th December 2011:
ராஜேஷ்க்கு நைட் shift வேலை, ஹரிஷ் இரண்டாம் shift வேலை. ராஜேஷ் வழக்கம் போல் shift cab ஏறி சென்றான், 
Mobile message (a smart phone holder)
"Hi, +91 9566548114 this is my new official number. Please msg/call only on emergency -Harish"
தன்னுடைய கை பேசியில் ஹரிஷ் எண்ணை அலுவல் என்று பதிவு செய்தான்.  

இரவு வேலைக்கு விளக்கம் தேவையில்லை அதாவது இப்பொழுது தான் விடிந்தது அமெரிக்காவில். நாமும் பகலில் தூங்கி இரவில் வேர்வை இல்லாமல் உழைக்க வேண்டும் வீட்டிற்க்கே வண்டி வந்து கூட்டி செல்லும் விடிந்தபின் தூக்கத்தை தேடி காத்திருந்து மீண்டும் வண்டி ஏறி தெரு வாசலில் இறங்கி வீடு சேருவோம். இது அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. 

அனைவரையும் ஹாய் சொல்லி அமர்ந்து தன்னுடைய அஞ்சல்(email) அனைத்தையும் ஒன்றொன்றாக பார்த்தவனுக்கு பின்னால் சக நண்பர் "come lets go for coffee" என்றார். just a min saai!!!.இது ஒன்னும் புதிதல்ல ஷிப்ட்க்கு வந்தவுடன் காபி குடிக்க செல்வது அவர்கள் வழக்கம்.

Rajesh : அப்புறம் saai என்ன இன்னைக்கு ரொம்ப கடுப்பா இருக்கீங்க. 
Saai: அட போங்க boss எவனோ ஒரு கடன்காரன் என்னை இன்னைக்கு எல்லாருக்கும் அதாவது நம்ம குரூப் மெயில் id க்கு "Happy Christ Maa Christ Child for all participants. As a child i obey my maa. I trust my mom ஏழாம் அறிவு movie broken avatar collections. Please trust my mom." இப்படின்னு  mail அனுப்ப சொல்லிருக்கான்.

(Christ Maa Christ Child game: சும்மா ஆபீஸ்ல கிறிஸ்துமஸ் கொண்டாட இந்த game ஒரு team இல்ல ரெண்டு team சேந்து respective name and cubicle no குலுக்கல் முறையில் எடுத்து அவர்களுக்கு வந்த சீட்டினில் யார் பெயர் உள்ளதோ அவர்களுக்கு தெரியாமல் தினமும் எதாவது ஒரு interesting task செய்ய செய்து gift அளிப்பது. கடைசி நாளில் யார் என்பது தெரியபடுத்தனும்.)

Rajesh: Oh! மச்சி நான் சுத்தமா மறந்துட்டேன் வெள்ளி கிழமை சீட் எடுக்க சொன்னாங்க தான... I got Kirti Vardhan 3602 cubicle. நான் check பண்ணவே இல்ல. சரி lets see the desk first who it is then i will decide what should i give. சரி எனக்கு என்ன வந்துருக்கு தெரியலயே!
Saai: சரி tea சாப்டுங்க செக் பண்ணுவோம்... என்ன பண்ண சொன்னவன் எப்புடியும் என்ன நல்லா தெரிஞ்ச பையன் தான் பொண்ண இருந்தா இப்படி பண்ண சொல்ல மாட்டங்க.. 

(In Desk)
Rajesh seen his laptop has a note
"Get a orange juice from Vending Machine hand it to a Cleaning(ICARE) guys-Yours Christ Maa"
Rajesh: Hey Saai இங்க பாருங்க எனக்கும் ஒரு சீட்டு வந்துருக்கு clean பண்ற ஒரு பையனுக்கு vending Machine ல இருந்து Orange juice வாங்கி கொடுக்க சொல்லிருக்கு. Hmmm.... Interesting... நான் பண்ண போறேன்... ஏதோ சொல்லி மெயில் அனுப்பறதுக்கு இது எவ்ளோவோ பராவால!
Saai: Ok i am also going to do it.. since its looks funny to send mail to our group... lets wait for the replies.. ராஜேஷ் common lets see who is ur child... 
Rajesh: ஏங்க அந்த பேர பாத்தாலே தெரியல... ஏதோ ஒரு பையன் தான்... நம்ம cubicle number பாத்தீங்களா 2532 அது 3602 கடைசியா இருக்கும்ன்னு நெனைக்கிறேன் இல்லன்னா நம்ம notice பண்ணி இருக்க மாட்டோமா!!

(Kirti Vardhan - அட பொண்ணுதாங்க!!! புதுசு போல!!! அதான் நம்ம கழுகு கண்ணு ராஜேஷ் கண்ணுல மாட்டல.. அதுக்கு எல்லாம் ராஜேஷ் மாதரி கொடுத்து வச்சிருக்கணும் yet single dont forget)

Rajesh: சரி saai பொண்ணுதான் தெரிஞ்சிபோச்சு just take care of the calls for 30 Min. நான் வெளிய போயிட்டு வரேன்.

ராஜேஷ் ஒரு fancy shop க்கு போய் 5 baloon ஒரு Cadbury's Gem வாங்கி கொண்டுவந்தான். Vending machine la ஒரு orange Juice எடுத்தான். ஒரு பையன் usually ah அவனுக்கு நைட் ஷிப்ட்ல எதாவது வேணும்னா வாங்கிட்டு வருவான். அவன கூப்பிட்டு orange juice ah கொடுத்துட்டு. இந்த balloon எல்லாத்தையும் ஊதி அதுல ரெண்டு பலூன்ல gems போட்டு 3602 cubicle கிட்ட கட்ட சொன்னான். அந்த பையன்கிட்ட ஒரு note கொடுத்து அந்த Kirti Vardhan கிட்ட கொடுக்க சொன்னான்.

Note to Kirti Vardhan:
Burst the empty baloons which tied near ur desk.. and get the Cadbury Gems waiting inside other two baloons - Urs Christ Maa

Rajesh calls Saai... "Machi come near to 3602" 

(saai walks towards the bay of 3602 seen Kirti vardhan is bursting the baloons, இத saai மட்டும் பார்க்கவில்லை ஒட்டு மொத்த floor வேடிக்கை பார்த்தது. அங்கே ஒரு பொண்ணு comment எனக்கும் ஒரு christ maa இருக்கே கழுத மாதரி எட்டு மணிக்கு சட்டுன்னு கத்துன்னு சொல்லிருக்கு... laugh of Kirti(இனிமேல் முழு பேர் சொல்லமாட்டேன் so understand) filled the place when she took the gems without bursting the balloon by just releasing the air... பொண்ணும் கில்லாடி தான் பா)

Saai: சூப்பர் ராஜேஷ்.. ரசிகன் டா நீ. we got some p3 tickets... come lets go... 


இருவரும் தங்களது பணியினை தொடங்கினர்... வேலை ஜாஸ்தி தான் இருந்தாலும் christ maa christ child கலாட்டாக்கள் அன்று அனைவரையும் சிரிப்புடனே இருக்க செய்தது..

(saai அனுப்பிய மெயில் ஏழாம் அறிவு oscar க்கு nominate ஆகி இருக்கறதா இன்னைய போர்டு meeting la discuss பண்ணுவதாக manager மெயில் reply அனுப்பி இருந்தார். ஒரு பொண்ணு கழுதை போல் கத்தியவுடன் ஒரு cubicle லில் ஆட்டு குட்டி முட்டையிட்டு பாடல் sound ah போட பட்டது வேர் ஒரு காமெடி. நம்ம ராஜேஷ் செய்ததை நினைத்து பூரிப்புடன் அன்றைய வேலையை கழித்தான்)

தொடரும்......