Saturday, June 22, 2013

கோபகுமாரின் "அகவிழி"

கோபகுமாரின் அகவிழியில் தோற்று போன என் கனவுகள்.கனவுகள் காணும் ஒவ்வொரு கனவும் ஒன்றோடு ஒன்று ஒன்றிபோவதில்லை என்ற என் நிலைபாடு இந்த குறும்படத்தோடு முடிந்து போகட்டும். காட்சிகள் ஒன்றாகலாம் ஆனால் நம் கனவுக்கு நாம் தான் என்றுமே கதாநாயகன். அப்படி மூவரின் கனவுகளுடன் ஒரு குறும்படம் இது புரிவதற்க்கு கண்டிப்பாக சில நேரம் ஆகலாம்.

இன்செப்ஷன் பார்த்துவிட்டு கனவுகளில் ஒன்றன் பின் ஒன்றாய் அடுக்கி கனவு கண்டிருக்கிறேன். அதில் என் கேள்விகளுடன் விளையாடி இருக்கிறேன். அகவிழி பார்த்து விட்டு இப்போது மீண்டும் கனவில் வாழ மற்றுமொரு வாய்ப்பு. ஒரு முறை அல்ல பல முறை பார்த்து விட்டேன் இன்னும் கூட ஒவ்வொரு முறையும் ஒரு பதில்கள் எனக்குள் என் அகவிழியில்.

முதலில் இந்த குறும்படத்தை pay per view ல் தந்தமைக்கு நன்றி. அதிலும் அறுபது ரூபாய்க்கு ஐந்து நாள் என் ஆராய்ச்சிக்கு கொடுத்தமைக்கு பல கோடி நன்றிகள். இப்படியான புது முயற்சிகள் வளரும் பல குறும்பட இயக்குனர்களுக்கு உதவியாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

கோபகுமார் அபிலாஷ் திரைக்கதை தான் படத்தின் பெரும் பலம். படம் முடிந்து விட்டதா என்ற கேள்வியுடன் தொடங்கும் end credits இசை அபாரம். ஒளிப்பதிவை பற்றி கண்டிப்பாக கூறவேண்டும் அவ்வளவு நேர்த்தியான frameகள். என் இன்டர்நெட் மெதுவாய் ஸ்ட்ரீம் ஆனதில் சில காட்சிகள் அப்படியே நின்றதில் கதாநாயகியின் காதல் விழிகள் தெரிந்ததில் இருந்தே தெரிகிறது கோபகுமார் படத்தில் நடிக்கவில்லை வாழ்கிறார்கள் என்று.

எப்படியோ இந்த வாரம் இன்னும் பல கனவுகள் சந்திக்க நேரிடும். அது வரை இரு விழிகளுக்கு ஓய்வு கொடுபோம்.

வாழ்த்துக்களுடன்,
ரசல்

To View the film
Go to

a) You pay once and its valid for 5 days of online view
b) You won't be able to download the film
c) Streaming of the video will entirely depend on your net connection (bandwidth)
d) Video is available within India & for world-wide audience (so can be shared with friends anywhere :)

Wednesday, June 19, 2013

தொழிற்சாலை

ஒரு கொத்தடிமைகளின் தொழிற்சாலை
முக்கால்வாசி தொழிலாளர்கள் சிகப்பு உடையில் 
மீதம் உள்ளவர்கள் வெள்ளை,பச்சை,மஞ்சள் என பகுதிவாரியாக 
வேலைக்கேற்ப உடை!



தொழிற்சாலையின் ஒவ்வொரு பகுதியும் 
அனைத்து நாள் அனைத்து நேரங்களிலும் 
இயங்கி கொண்டே இருக்க வேண்டும் 
சிலர் தூங்கும் நேரம் பலர் முழித்திருப்பர்!

தொழிற்சாலையின் ஒரு பகுதி காற்று சுத்திகரிப்பு நிலையம் 
வெள்ளை உடை அணிந்த அடிமைகள் மாசுபடர்ந்த காற்றில் இருந்து 
தூய்மையான உபயோகமுள்ள காற்றை மட்டும் 
பிரித்தெடுத்து மாசு காற்றை வெளியேற்ற வேண்டும்!

இன்னொரு பகுதி உணவு கட்டுப்பாடு மற்றும் மேம்பாடு 
சிகப்பு நிற அடிமைகள் வருகின்ற சரக்கில் இருந்து 
பிரித்தெடுத்து ஒவ்வொரு ஊட்டச்சத்தையும் கணக்கெடுத்து 
அதன் பின் ஏற்றுமதி செய்ய வேண்டும்!

சரக்குகள் ஒவ்வொரு நாளும் பல விதம் வந்தடையும்
ஏன் சில நாள் வராமலே போகலாம் 
வருவெதென்ன போவெதென்ன கணக்கிட்டு 
ஒவ்வொரு நாளும் ஓடிவிடும்!

தினம் உயரும் வியாபாரம் அதற்கேற்றார் போல் 
விஸ்தரிக்க படும் தொழிற்சாலை இது
பல அடிமைகள் மாண்டு போய் 
அதே இடத்தில் சமாதிகள் ஆன கதைகள் ஏராளம்!

நிர்வாகத்தின் பொறுப்பின்மை அள்ள அள்ள குறையாமல் 
கிடைத்த வருவாய்கள் போதாமல் 
நாளுக்கு நாள் குன்றி போக 
ஒரு நாள் சரக்குகளின் வரவு நின்று போனது!

சளைக்காத தொழிலாளர்கள் மீதம் உள்ளதை 
உட்கொண்டு மேலும் பல நாள் நிர்வாகத்தை 
நம்பிக்கையுடன் செயல் பட வைத்தாலும் 
அடிமைகளின் உயிர் பறிபோய் கொண்டேயிருந்தது!

இந்நிலையில் காற்று தொழிற்ச்சாலையில் 
புதிதாய் வந்த ஒரு கிருமி தாக்கி 
ஒட்டுமொத்த அடிமைகளையும் உயிர் வாங்க 
நிர்வாகமும் சேர்ந்தே மாண்டு போனது! 

நம் உடலின் பெரும்பகுதியே இந்த தொழிற்ச்சாலை 
கண்ணுக்கு தெரியாத அடிமைகளின் உணர்வுகள் இவை..
சிகப்பு நிற அடிமைகள் நம் ரத்த குழாய்களின் மூலம் ரத்தத்தை ஓட செய்து 
வெள்ளை நிற அடிமைகள் மூச்சுக்காற்றின் மாசு தீர்த்து 
தினம் உன்னை வாழ வைக்கும் மனித நிர்வாகமே!

இயற்கையின் மாசுபாட்டால் ஒரு நாள் உயிர் இழக்கும் நம் சமுகமே!

என்றும் அன்புடன்,
ரசல்