Tuesday, August 19, 2014

கதை திரைகதை வசனம் இயக்கம்

ஒரே ஒரு தியேட்டர்ல தான் எங்க ஊர்ல இந்த படம் ஓடுது. பாதி கூட்டம் அஞ்சான் படத்தை பார்க்கவும் மீதி உள்ள சிலர் கதை திரைகதை படத்துக்கு டிக்கெட் கொடுங்க என்று கூவிகொண்டிருக்க எனக்கு மட்டும் ஏதோ தோணியது அதனால் "பார்த்திபன் படத்துக்கு டிக்கெட் கொடுங்க" என்றேன்.
அதற்க்கான பதில் வரும் முன்பே மீண்டும் நான் "கதை திரைகதை வசனம் இயக்கம் படத்திற்கு டிக்கெட் கொடுங்கள்" என்றேன். படம் பெயர் நீளமாய் இருந்ததால் டிக்கெட் எடுக்கவும் நேரம் ஆகிறது. இப்போ படத்த பாப்போம்.



கதை:
அப்படி ஒன்னு இருந்தா அதோட முடிவு தெரியனும் அப்படி இல்லனா எதாவது கருத்து சொல்லணும். இல்லைங்க நாம அடுத்து என்ன நடக்க போகுதுன்னு சொல்லாமலே அத நகர்த்த போறோம் அதுன்னா அதாங்க கதை. ஆக ஒரு புத்திசாலித்தனமான ஒரு கதை களம். அதை எப்படி கையாண்டார்கள் அதுவே இந்த பின் பகுதி.

திரைக்கதை:
இந்த காலத்துல முதல் முறையாய் படம் பாக்க வரவங்ககிட்ட நாங்க இப்படி தான் எடுத்திருக்கோம். நீங்க எப்படி பட்ட பாக்க விரும்பிறீங்க என்பது போன்ற கேவிகள் தான் திரைகதையாய் இருக்கு. அதுக்கு கூட இணை இயக்குனர்களின் கதாபாத்திரங்கள் எப்படி பட்டவர்கள் என்பதை விளக்க நான்கு விதமான குட்டி கதை. ஐந்தாவதாய் டைரக்டரின் வாழ்வியலின் குடும்ப சண்டைகளும் காதலும் கனவும் என ஐந்தாவது கதை. இது கூட ரசிகன் ஒரு கதை சொல்றான், உண்மையா பட்டய கெளப்புற பார்த்திபன் டச் அதாவது இரட்டை அர்த்த கதை. எல்லாமே திரைகதையாய் அவ்வபோது பார்த்திபன் அடுத்து என்ன நடக்கும்னு சொல்லி உங்கள படத்த அடுத்து என்னனே தெரியாம காலி பண்றார்.

வசனம்:
முதல் வசனம் அதுவும் விஜய் சேதுபதி சொல்றாரு "பிரியாணி  நா இன்னிக்கி வெயிட் பண்ணா போதும் பழயதுக்கு நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணனும்" இப்படி பிரியாணிக்கும் பழயதிர்க்கும் உள்ள எதார்த்த வசனத்தில் ஆரம்பித்து "கொய்யா பழம் கொய்த பழம்" " இறுமாப்பு கொள்வேன் என்று பார்த்திபன் எழுதியதை தவறாய் படிக்கும் கதாநாயகனில் ஆரம்பித்து. அனைவருக்கும் வசனம் அருமையாய் இருக்கிறது. ஜொல்லுக்கென்று "நான் லிப்ஸ்டிக் யூஸ் பண்றதில்ல ஆனா இப்போ போட்டிருக்கேன் நீங்க அழிபீங்க நினைத்து" நக்கலுகென்று "சார் படம் எப்படி இருக்கு? நல்லா இருக்கு? அட என்னங்க செகண்ட் டைம் பாக்கலாம்ன்னு சொல்லுங்க.. இப்போல்லம் தியட்டர்லையே ஆளுங்க வைக்கிறாங்க சொல்றதாகட்டும். திரைப்பட உலகை கலாய்க்கும் வசனங்கள் ஆகட்டும் மீண்டும் ஒரு இன்னிங்க்ஸ் விளையாடிட்டார்.

இயக்கம்:
இதுமாறி கதைகலத்தில் மக்களக்கு புரியுற மாறி எடுக்கறது ரொம்ப கஷ்டம். ஆனா இத பார்த்திபன் மாதிரி ஒருத்தர் கையாண்டதால தான் இந்த படம் வேற மாறி இருக்கு. சுவாரசியம் குறையாம அதேபோல கதைக்கும் பார்வையாளர்களுக்கும் அவ்வபோது பேசி புரிய வைத்ததோடு அல்லாமல் காட்சிகளின் ஆழம் எதார்த்தத்தை ஒட்டியே இருந்தது. உதாரணம் கிளைமாக்ஸ். முற்றிலும் மாறுபட்ட சினிமாவில் இதுவும் ஒன்று.

மேலே கூறிவை அனைத்திற்கும் பார்த்திபனில் ஆரம்பித்து இதற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் பாரட்டுகள் மற்றும் நன்றி.

ரசிகனாய் நான்:
ஆரம்பமே உலகம் அழியுது,அடுத்து வீட்ல சாப்பாடு,இலங்கையின் இன்னொரு பெண்ணின் ஓலம்,பிரம்மாவின் வேலை அடுத்ததாய் இயக்குனரின் கதை தேடும் கதை. முதல் பாதி முற்றிலும் ரசிகனை கட்டி போடுகிறது. இரண்டாம் பாதியில் கிளைமாக்ஸ்க்கு முந்தைய பகுதி மெதுவாய் செல்கிறது. மற்றபடி நடிகர்களில் நாயகனும் நாயகியும் வாழ்ந்தார்கள் அவர்களை போல் நடித்த ஆர்யாவும் அமலாவும் அவர்களுக்கு நெருங்கிய நடிப்பை வெளிபடுத்தவில்லை. ஆனால்  தம்பி ராமையா மொத்த  கதையையும் தன்னுடைய குணசித்திர நடிப்பால் கவருகிறார். கண்டிப்பாக திரை அரங்கில் படத்தில் கடைசி பெயர் போடும் வரை பார்க்கவும். ஏனென்றால் இது ரசிகனுக்கு திரைபடத்திருக்கும் உள்ள படம்.

என்றும் அன்புடன்,
ப.ரசல்