Tuesday, July 29, 2014

சதுரங்க வேட்டை என் பார்வையில்

எங்களுக்கு ஓட்டு போடுங்க தமிழ்நாட்டை சிங்கப்பூர் போல மாத்தி காட்றோம்ன்னு சொல்றாங்க ஆனா அஞ்சு வருஷம் கழிச்சி தமிழ்நாடு அப்படியே தான் இருக்கு. அதுக்காக அவங்கள ஏமாத்திட்டாங்க சொல்லி அர்ரெஸ்ட் பண்ண முடியுமா. நான் ஏமாற தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன் அவ்வளவு தான். இப்போல்லாம் அப்பா அம்மா தங்கச்சி செண்டிமெண்டுன்னு படம் எடுத்தா கிளிஷேன்னு சொல்றாங்க ஆனா பணம் என்னிக்கும் கிளிஷே ஆகாது. 

மேலே படித்தது  ஒரு மக்களை ஏமாற்ற தெரிந்தவனின் வசனங்களின் ஒரு பகுதி இது சதுரங்க வேட்டை திரைபடத்தின் ஒரு பார்வை.



நாம கண்டிப்பா எதோ ஒரு விஷயத்துல ஏமாந்துட்டு தான் இருக்கோம். படத்துக்கு படம் trailer என்னமோ நல்லா இருக்கும் ஆனா படத்துல அத தவிர வேற எதுவும் நல்லா இருக்காது இதுவும் ஒரு வகையில் ஏமாற்றம் தான். இந்த படத்துல எப்படி எல்லாம் ஏமாத்துறான் ஒருத்தன் என்பதின் ஆறு பகுதி கதையின் திரைஆடல் தான் இந்த படம். பல புண் முறுவலோடு நாம ஏமாந்திருக்கோம் என்பதை பார்க்கும் போது வார்த்தைகள் வந்து விளையாடி விட்டு செல்கிறது முதல் பாராவை போல.

நட்ராஜ் ஒரு நடிகனா நாளை படத்திற்கு பின் இந்த படத்துல வாழ்ந்திருக்கிரார்ன்னு தான் சொல்லணும். நான் ஒரு கட்டத்துல நான் அவன் இல்லை ஜீவன் இந்த படத்த செஞ்சிருந்தா எப்படி இருக்கும்னு யோசிக்கும் போதே இத இவர தவிர இந்த modulation ல பேசி நடிக்க முடியாதுன்னு நிருபிக்கிறார்.

இசை சியன் ரோல்டன் சும்மா ஒவ்வொரு தடவையும் சில "டிஊஊஉம்" ஓசைகள் நம்ம நாடி துடிப்ப சோதிச்சு பாக்கும். இவர் தான் வாயை மூடி பேசவும் படத்துக்கும் இசை அமைச்சிருக்கார் அதுல ரெண்டாவது பகுதி இசை தான் பேசிச்சி இங்க மொத்த படத்துலயும் பெடல் எடுத்தாச்சி ஆனா பாடல்கள் ஹிட் ஆகல.

புது combination k.g.venkatesh மற்றும் raja sethupathi ஒளிப்பதிவும் அதை ஒட்டிய எடிட்டரும் வேகத்தை கொஞ்சம் கூட குறைக்க வில்லை. வாழ்த்துக்கள் .

கடைசியாய் வினோத் எழுத்தும் இயக்கமும் கனகச்சிதம். எத்தனை புத்திசாலி தனமான திரைகதை மற்றும் அதை தாங்கிய வசனங்களும். கிளைமாக்ஸ் மட்டும் இன்னும் சிறப்பாய் இருந்திருந்தால் மேலும் பேச பட்டிருக்கும். இருந்தாலும் இப்படி பட்ட படங்கள் வருவதே அரிது அதிலும் மற்ற முன்னணி நடிகர்கள் படம் வந்தால் theatre கூட கிடைக்காது. இந்த வாரத்திற்கு பின் ஆன்லைனில் தேடினால் கூட பகல் காட்சிகளாய் மாற்ற பட்டிருக்கலாம். முயற்சித்து பாருங்கள் திரைஅரங்கில் பார்ப்பதற்கு.

கதையோ காரணமோ ஏதோ ஒண்ணு உங்கள படம் பாக்க வச்சா அது தான் ஒரு இயக்குனரோட வெற்றி. வாழ்த்துக்கள் வினோத் 

என்றும் அன்புடன்,
ரசல் 

Tuesday, July 8, 2014

அறிமாநம்பி என் பார்வையில்

முதலில் அரிமா:

சிங்கத்தின் குணம் கொண்ட ஆண் மகன் தான் இந்த அரிமா. அதைவிட எளிதாய் கதையின் கருவை கூற வேண்டுமானால் ரவுடிகளுக்கு கத்தியை காட்டியும் துப்பாக்கியை காட்டியும் தான் மிரட்ட தெரியும், ஆனால் சண்டையிட தெரியாது என்ற ஒற்றைவரி வசனத்தின் ஓட்டம் தான் கதைக்களம். படம் ஆரம்பித்த உடன் பாடல்,பாடல் முடிந்தவுடன் காதல்,காதல் ஆரம்பித்த உடன் பிரச்சனை, இதன் பின் திரைக்கதை எடுக்கும் வேகம் இடைவேளை வரும் வரை நம்மை கண் சிமிட்ட விடாமல் செய்கிறது. இடையில் வந்த எம்.எஸ்.பாஸ்கர் கதாபாத்திரம் கைதட்டல்கள் அள்ளிய பாத்திரம் அது. டெக்னாலஜியின் உபயோகம் கதையோடு பொருந்தியே போகிறது.

பின் நம்பி:
இடைவேளையில் அடுத்து என்ன என்று யோசிக்க வைத்து அதை நம்பி படம் பார்க்க சென்றால் தொய்வை நோக்கி செல்கிறது மீதி கதை. வழக்கமான கதையின் ஓட்டம் சற்றே அலுப்படைய செய்து யூகிக்க முடிந்த கிளைமாக்ஸ் மேலும் சலிப்படைய செய்யலாம்.



மொத்தத்தில் அறிமாநம்பி:
ஆர்.டீ.ராஜசேகர் மூலம் இந்த படத்தின் வண்ணம் மொத்தத்தில் மேலோங்கியே நிற்கிறது. ஒளிபதிவில் ராஜசேகர் போன்ற ஆட்கள் இருப்பதால் தான் இன்றும் சில படங்கள் நம் மனதிலயே நிற்கிறது. 

அடுத்து டிரெம்ஸ் மணியின் இசையில் பாடல்கள் கேட்கவில்லை ஆனால் ஏதோ பாடலிலும் புதுமை உள்ளது. பின்னணி இசைதான் ருத்தரதாண்டவம் ஆடியது என்றே சொல்லலாம். 

எடிட்டர் அந்தோனி கட் என்று நினைத்த இடத்தில் நான் தோற்று போனேன் எடிட்டர் பெயர் புவன் என்று கண்டு. படத்தின் இன்னொரு தூண் எடிட்டிங் தான். இவ்வளவு வேகத்தை நீண்ட நாள் பின் கண்ட திருப்தி இருந்தது.

ஆனந்த் சங்கரின் இந்த அறிமாநம்பி நன்று என்பதிர்க்கும் மேல் சூப்பர் எனபதிற்க்கும் கீழ். வாழ்த்துக்கள் ஆனந்த் சங்கர்.

என்றும் அன்புடன்,
ரசல்