Tuesday, July 8, 2014

அறிமாநம்பி என் பார்வையில்

முதலில் அரிமா:

சிங்கத்தின் குணம் கொண்ட ஆண் மகன் தான் இந்த அரிமா. அதைவிட எளிதாய் கதையின் கருவை கூற வேண்டுமானால் ரவுடிகளுக்கு கத்தியை காட்டியும் துப்பாக்கியை காட்டியும் தான் மிரட்ட தெரியும், ஆனால் சண்டையிட தெரியாது என்ற ஒற்றைவரி வசனத்தின் ஓட்டம் தான் கதைக்களம். படம் ஆரம்பித்த உடன் பாடல்,பாடல் முடிந்தவுடன் காதல்,காதல் ஆரம்பித்த உடன் பிரச்சனை, இதன் பின் திரைக்கதை எடுக்கும் வேகம் இடைவேளை வரும் வரை நம்மை கண் சிமிட்ட விடாமல் செய்கிறது. இடையில் வந்த எம்.எஸ்.பாஸ்கர் கதாபாத்திரம் கைதட்டல்கள் அள்ளிய பாத்திரம் அது. டெக்னாலஜியின் உபயோகம் கதையோடு பொருந்தியே போகிறது.

பின் நம்பி:
இடைவேளையில் அடுத்து என்ன என்று யோசிக்க வைத்து அதை நம்பி படம் பார்க்க சென்றால் தொய்வை நோக்கி செல்கிறது மீதி கதை. வழக்கமான கதையின் ஓட்டம் சற்றே அலுப்படைய செய்து யூகிக்க முடிந்த கிளைமாக்ஸ் மேலும் சலிப்படைய செய்யலாம்.



மொத்தத்தில் அறிமாநம்பி:
ஆர்.டீ.ராஜசேகர் மூலம் இந்த படத்தின் வண்ணம் மொத்தத்தில் மேலோங்கியே நிற்கிறது. ஒளிபதிவில் ராஜசேகர் போன்ற ஆட்கள் இருப்பதால் தான் இன்றும் சில படங்கள் நம் மனதிலயே நிற்கிறது. 

அடுத்து டிரெம்ஸ் மணியின் இசையில் பாடல்கள் கேட்கவில்லை ஆனால் ஏதோ பாடலிலும் புதுமை உள்ளது. பின்னணி இசைதான் ருத்தரதாண்டவம் ஆடியது என்றே சொல்லலாம். 

எடிட்டர் அந்தோனி கட் என்று நினைத்த இடத்தில் நான் தோற்று போனேன் எடிட்டர் பெயர் புவன் என்று கண்டு. படத்தின் இன்னொரு தூண் எடிட்டிங் தான். இவ்வளவு வேகத்தை நீண்ட நாள் பின் கண்ட திருப்தி இருந்தது.

ஆனந்த் சங்கரின் இந்த அறிமாநம்பி நன்று என்பதிர்க்கும் மேல் சூப்பர் எனபதிற்க்கும் கீழ். வாழ்த்துக்கள் ஆனந்த் சங்கர்.

என்றும் அன்புடன்,
ரசல் 

No comments:

Post a Comment