Saturday, April 2, 2011

எதற்கு?????

விழிகளில் வழிந்தோடும் நீர் எதற்கு
இமைஎனும் தடை வந்தும் பெருக்கெதற்கு!

நெஞ்சம் எனும் புத்தகத்தில் முன்னரை எதற்கு
குருதி எடுத்து எழுதிய போதும் உணர்வெதர்க்கு!

சேருமிடம் சேர்ந்து வலிகள் தீர்ந்து களிபெதர்க்கு
உயிரில்லை உன்னிடம் என்ற விளிபெதர்க்கு!

தன்னிலை மறந்த உயிரெதற்கு
உன்னிலை அறியா இந்த வாழ்வெதற்கு!

எதற்கென்று தெரியாமல் இந்த காதல் எதற்கு!

காதல காதலிச்சு பாரு.....


என்னப்பா காதல் கேட்டா இப்படி தான்....
அது என்ன தானாதான் வருமா இல்ல தேடி தான் வருமா.. இல்லைங்க..
நீங்க தேட தேவல உங்கள அது தானா வந்து சேரும்...
என்னடான்னு யோசிக்காதீங்க.... நீங்க உண்மையிலே காதலிக்கணும் நெனச்சா??
நடக்கும் கண்டிப்பா உரசி போற காத்து இல்லைங்க அது
என்றும் நீங்க உணரும் பொருள்....
பெற்றவர்கள் பிள்ளைகள் மேல் வைக்கும் முதல் அன்பு.. உன் மனதில் படுமென்ன பாசம் தான்...
ஆனா உணர்பொருள் உன்னை ஏங்க வைக்கும் அவுங்க இல்லன்னா... அதுதான் காதலோட முதற்படி...
பாசம் எப்படி வைக்கறதுன்னு தெரிஞ்சிக்க...
சரி வீட்ட விட்டு வா... முதல் அனுபவம் பள்ளியில்... முதல் பார்வையில் டீச்சர் மேலயும் வரலாம்...
இல்லன்னா ஒரு சுட்டி பொண்ணு உன்கிட்ட பேசலாம் நீ என்ன பண்ணுவ... வீட்டுக்கு கெளம்பும் போது போயிட்டு வரன்னு சொல்லுவ..
ஏம்பா ஆசை தான? தினமும் பேசிட்டு இருக்கலாம்ன்னு அவ்ளோதான் ஆனா மனசு வெள்ளை சின்ன புள்ளைங்களுக்கு....
அப்படியே கொஞ்சமா வளரப்போ தொலைகாட்சில சினிமா மாசம் இல்லன்னா முழு ஆண்டு பரிச்சைக்கு ஒரு சினிமா பாப்போமா!!
போச்சு வெள்ளை மனசுக்குள்ள சின்ன சிரிப்பு வரும் காதல் காட்சில...
அப்புறமா தெரியும் ஓஹ்ஹோ காதல்னா இது தான் போல...
கொஞ்சமா சிறகு முளைச்ச தெய்ரியம் புள்ளைங்க ஸ்கூல் பக்கம் பசங்களோட போக...
உன் நேரம் நல்லா இருந்தா நீ டெய்லி ஒரே பொன்னையே பாத்துட்டு இருப்ப.. அந்த பொன்னும் பக்க ஆரம்பிச்சிட்டா..
காதல் வரும் பருவம் அது தான் உணர்ந்து மெய்யாக உண்மையாக உன் முதல் காதல் ஆரம்பித்து விடும்...
ஆனா அதற்க்கு நீ சரியானவன் இல்லன்னு இன்னும் கொஞ்சம் பத்தாவது பன்னிரெண்டாவது தேர்வு எழுதறதுக்குள்ள தெரிஞ்சிடும்...
சரி நான் பள்ளி படிக்கும் போது வெறும் பாடம் தான் படிச்சேன் இப்படில்லாம் பண்ணலன்னு சொல்ற சிலர் இருக்காங்க... அவுங்க அடுத்து...
கல்லூரி தந்த காதல் பலர் உண்மையான காதலோடு இன்றும் இருக்குறாங்க..
அதுல சில பேர் நான் மேல சொன்னதில இருந்தவுங்க தான்...
ஆனா கல்லூரி படிப்பு மதியம் உணவு வேலை மாலை வீட்டிக்கு செல்லும் வேலை யாருமே
உபயோக படுத்தி இருக்காம இருக்க மாட்டாங்க...
கடலைன்னு சொல்லி காதலா மாரரவுங்க சிலர் நண்பரா மாத்ரவுங்க சிலர்...
இதுலயும் நான் தப்பிச்சேன்னு வரவுங்க...
கொஞ்சம் நிதானமா வீட்டில கல்யாணம் பண்ணிவைப்பங்க சிலர் இன்னும் தேடிட்டு இருப்பாங்க
அது கண்டிப்பா உங்கள வந்து சேரும் நீ உண்மையா??
காதல காதலிச்சு பாரு...
அது உன் இருப்பிடம் அறியும் பிறப்பிடம் அறியும்
நினைவெல்லாம் உன்னை மறக்க வரும்..
காத்திரு ஒரு நாள்...
காதல் உன் மணவறையில்!!