Wednesday, September 23, 2009

கனவுகள் என் முன்னே கானல் நீராய்!!

ஒரு மஞ்சள் வெயில் ஆளம் விழும் மரத்தடியில்!
இளைப்பாற நின்றிருந்தேன் ஒரு பூங்குயில் குரல் கேட்டது!
தேடினேன்.... கனவை கலைத்து.... தேடினேன்.....
அது என் கைபேசியின் அழைப்பு இசை என்று சற்றுனர்தேன்!

குரலெடுத்து பேசுவதற்குள் வந்தது தேனிசை இல்லை?
உறவானவளின்...
இதழ் மடிப்பில் என் பெயர் உச்சரிப்பை அலை வரிசை தாண்டி வந்ததென்ன இதழிசை தானே!

பேசும் வார்த்தைகள் உதட்டளவில் பிம்பங்கள் மனதலையில்!
உறங்கிய போதும் சிலிர்ப்படையும் நுண்ணுயிர்கள்!
தடுமாறியும் வார்த்தைகள் அழகானது உன் கேள்விக்கு பதிலானது!

விடியலாய் இருந்தால் அதிகாலை தேநீர் என்றிர்க்கலாம்!!
மின்மினி பூச்சும் உறங்கிடும் நாம் உறங்கவில்லையே!!
அழைப்பை துண்டித்த பின்!

புரண்டேன் பின்பங்கள் மீண்டும் மனதில் கணவாய்!
குழந்தையாய் சிரித்தே உறங்கினேன்!
விடியலுக்காக.. காத்திருந்தேன்...

தேனிர்க்காக அல்ல உனக்கு விடியல் வணக்கம் கூற மீண்டும் கனவு காண!அதிகாலை கனவும் பலிக்குமே அன்று உன்னை சந்தித்தால்!!

கனவுகள் என் முன்னே கானல் நீராய்!!
வெகுதொலைவில் நீயும் நானும்....
அழைப்பு மணியை எதிர் பார்த்தே இன்னும் சில காலம்!
சந்திப்போம் இன்னும் சில மாதங்களில் என்ற நம்பிக்கையில்!
நாட்பொழுதை கடக்கும் காதலனாய்!
நொடிபொழுதை கடக்கும் காதலியாய்!
வென்றிடுவோம் நம் காதலை!