Saturday, April 27, 2013

மாயச்சிறகு குறும்பட பாதிப்புகள்


ஒரு படம் எப்பொழுது பாதிப்பு ஏற்படுத்துகிறது. அதில் உள்ள கருத்துக்கள் மற்றும் இயக்குனரின் சிந்தனைகளை தாண்டி அதில் நடித்து வாழ்ந்த கதாபாத்திரங்கள் நமக்கு உரைக்கும் பொழுது.

மாயச்சிறகு எளிமையாய் விந்து தானத்தை பற்றி அறிமுக வசனங்களிலே முகத்தில் அறைந்து அடுத்த 28 நிமிடம் நம்மை உக்காரவைக்கிறது பொறுமையாய் சென்றாலும். 

ஒரே குறும் படத்தில் விந்து தானம், single mother, single father, feminism, இப்படி பல விஷயங்களை கூறும் உண்மையான கதாபாத்திரங்கள். கடவுள்களுக்கு எல்லாம் அப்பா அம்மா யார் என்று தெரியாது அதுக்காக அவர்களை bas***d என்று கூறுகிறோமா என்ற கேள்வி மீண்டும் மீண்டும் மனதில் ஓடியது.

நெருடல்கள் பல இருந்தாலும் உண்மைகளை உரைக்க ரொம்பவும் தைரியமாக இந்த படம் மற்ற குறும்படங்களின் வரைமுறைகளை தாண்டி நிற்கிறது என்பது தான் ஆணித்தரமான உண்மை.

இந்த படம் ஓடிகொண்டிருக்கையில் நண்பர் சுந்தர் சுகிசிவம் கூறியதை பகிர்ந்தார். அதாவது கல்யாணம் ஆகி ரொம்பநாளாய் குழந்தை இல்லாதவர்களிடம் "என்னங்க குழந்தை இல்லையா?" என்று கேட்போரிடம் இல்லை என்று நமட்டு காரணம் கூறுவதை விட "இனிமேல் தான்" என்று கூறுவது உன்னதமானது என்றார். அடடா இது நல்லா இருக்கே என்று தோன்றியது.

படத்தின் இறுதி நாமாக நல்லது எதுவோ அதை எடுத்து கொள்ள வேண்டும். அழகாய் ரசித்தால் பெண்ணின் முடிவுகளுக்கு எல்லாம் ஒரே காரணம் அவள் தந்தை வளர்த்த வளர்ப்பு முறையே தவிர வேறேதும் இல்லை என்பதை உணர்த்த தான் இறுதி காட்சியும். இதை இங்கே நியாய படுத்த விரும்பவில்லை ஆனால் ரசித்தால் பகிர்வது என் பழக்கம்.

பார்த்தேன் ரசித்தேன் இந்த வாரம் இந்த குறும்படம் "மாயச்சிறகு". 


என்றும் அன்புடன்,
ரசல்

Tuesday, April 9, 2013

கங்க்னம் ஸ்டைல்

எங்கள் வீட்டிலும் ஒரு psy உள்ளார்
அவர் ஒன்றரை வயதே ஆன நடன குழந்தை
ஓட்டம் பிடிக்கும் அவர் கால்கள் நின்றதில்லை
அவன் தாய் தந்தை தாத்தா பாட்டி சித்தப்பா யாவரும்
அவனை சுற்றியும் சோர்ந்தது இல்லை.

வார்த்தைகளின் கலவையில் மழலை பேச்சு
ஜொல்லென ஒழுகும் எச்சில் அமிர்தம்
கல கல சிரிப்பு பூரிப்பு என அலங்கரிப்பு
ததக்கான் புதாகான் நடையில்

எங்கள் வீட்டு psy இன் நடனம் இப்போது youtube இல்.