Monday, December 31, 2012

புத்தாண்டே பொலிவ்வாண்டே ரெண்டாயிரத்து பதிமூணாம் ஆண்டே!


புத்தாண்டே பொலிவ்வாண்டே ரெண்டாயிரத்து பதிமூணாம் ஆண்டே!

முதல் தவறு:
நல்ல வேலை நான் பள்ளியில் படிக்கவில்லை இல்லையென்றால் 
இன்னும் ஒரு மாதம் 2012 என்றே எழுதி,திருத்தி  2013 எழுதவேண்டும்.. 
ஆனால் காசோலை பூர்த்தி செய்யும் போது தவறானால் 
ஒரு காசோலை நஷ்டமெனக்கு....

முதல் சந்தோஷம்:
கோவிலுக்கு போய் திருநீறும் குங்குமமும் எடுத்து வர 
2012 தின நாள்காட்டிக்கு பஞ்சம் இருக்காது..
மத்த நாட்களில் கோவில் தூன்களில்யே கொட்டி விட்டு 
வரவேண்டியதாய் இருக்கும்..

முதல் முயற்சி:
போன வருஷம் செய்ய நெனச்சதை இந்த வருஷம் 
செய்ய நினைப்போம் இல்லாட்டி?? 
அதுக்கும் முன்னாடி வருஷம் செய்ய நெனச்சதயாவது 
செஞ்சு முடிப்போம் எப்புடியும் அது முதல் முயற்சிதான்!!

முதல் எதிர்பார்ப்பு:
போன வருஷம் 8 சதவிகிதம் 
இந்த வருஷம் ஒரு 16 சதவிகிதமா? இல்ல அதே 8? இல்ல 4?
ஹ்ம்ம் எது வருதோ அத வச்சி இந்த கம்பனியில் இருக்கலாமா வேணாமான்னு 
முடிவு பண்ண வேண்டியது தான்...

இப்படி கொஞ்சமும் போன ஆண்டை மறக்க முடியா முதல் விஷயங்கள்!

2012 நினைவிலே 2013 ஆண்டு நம் வாழ்விலே!
எடுத்துவைப்போம் வருவன எதிர்த்து நிற்ப்போம் நம் காலடியை!
சண்டை இல்லா? சச்சரவு இல்லா? 
உணர்வுகள் களங்கமில்லா? 
துயரங்கள் நூலில்லா? 
தூரங்கள் கணக்கில்லா? 
தீண்டாமை வன்கொடுமையில்லா?
பெண் கொடுமை செயல்களில்லா?
நட்பில் துரோகமில்லா?
காதலில் தோல்வியில்லா?

புதியதொரு ஆண்டு மகிழ்ச்சியுடன் மலரட்டும்!!!

வாழ்த்துக்களுடன்,
ரசல் 

Monday, December 17, 2012

மாற்றான்

இரண்டு மூன்று காட்சிகள் முடிந்த பின் மாற்றான் படத்தினை சூரியாவிர்க்காக பார்க்கணும், KV Anand technical treatment க்காக பார்க்கணும், ஒளிபதிவிர்க்காக பார்க்கணும்,இசை தான் சுமாராக இருக்கிறது,இரண்டாம் பாதி இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம், என விமர்சனங்களை கேட்டு உள்ளே போய் அமர்ந்தேன்.
First Half:
முதல் பதினைந்து நிமிடத்திற்குள் என் இரண்டு வரிசைகள் காலியாக இருந்தது,பிறகு ஒரு பெரிய குடும்பம் அந்த இருக்கைகளில் அமர்ந்தனர். ஒரு குழ்ந்தை சிணுங்கியது உடனே,அங்க பார்.. அங்க பார்... சூர்யா பார்... அந்த குழந்தையும் அமைதி காத்தது. சரி நான் என்ன செய்தேனா? முதல் பாதி என்னை எழுந்திருக்க விடவில்லை.. அத்தனை சுவாரசியம்.. அத்தனை மிகை படுத்தாத சூர்யாவின் நடிப்பு...அத்தனை கோணங்களில் ஒளிப்பதிவு..கதையின் மூலக்கரு.. உண்மையில் சூர்யா தன்னுடைய நான்கு தோள்பட்டையில் படத்தை தாங்கி நிற்கிறார்.
Interval:
ஒருவன்: என்ன மச்சி இப்படி ஆயிடிச்சி.. செம சீன் இல்ல அந்த roller coaster fight... இப்போ என்ன ஆகும் சொல்லு 
இன்னொருவன்: இப்போ கொஞ்சம் கொஞ்சமா எது உண்மைன்னு இந்த சூர்யா கண்டு பிடிப்பாரு.. 
டீ காரர்: டீ வேணுங்கிறவங்க இங்க வாங்க.. டீ சார்... டீ சார்..
(நான்:அவசரப்பட்டு கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிட்டனோ.. டீ வாங்கி இருக்கலாம்)
Second Half:
என் இருக்கை நன்றாக தான் இருந்தது.. ஆனால் இரண்டாம் பாதி ஆரம்பித்ததில் இருந்து, ஏதோ சரிக்கி கொண்டே போய் கொண்டிருந்தது. நான் எவ்ளோ நிமிர்ந்து உட்கார்ந்து இருந்தேனோ?படத்தில் இருந்த அணைத்து சுவாரசியமும் இழந்து... ஒரு வித சலிப்பு தன்மை வந்தது.. சரி ஆனது ஆச்சி கிளைமாக்ஸ் வரை பார்த்திட்டு போகலாம் என்று மேலும் சறுக்கி விளையாடும் விளையாட்டை விளையாடியே படத்தை கவனித்தேன். வாங்கி வந்த கூல் ட்ரிங்க்ஸ் குளிர்ச்சி தந்தது நல்ல வேலை டீ வாங்கல? ஒரு பாட்டு வந்திச்சி "கால் முளைத்து" அப்பாஆஆஆஆஆ ரஷ்யன் பாடல்....அட அட அட ஹரிஸ் ஜெயராஜ் சரக்கு தீந்து போச்சு போல..செதுக்கிட்டார், பாடல் முடிவில் சண்டை எதிர் பார்த்தது தான். அடுத்தது பர பர கிளைமாக்ஸ் படம் முடிந்தது. 
மக்கள் செய்தி:
தம்பி சூர்யா நல்லா நடிச்சிருந்திச்சி.. ஆனா போன படம் மாறி பாட்டெல்லாம் அவ்ளோ நல்லா இல்லை. சூர்யா காமெடி பண்ணவே இல்ல. எல்லாமே சூரியான்னு ஆனதுக்கு காரணம் ஒன்னே ஒன்னு சூர்யா ஒரு நல்ல கலைஞன் என்று பெயர் பெற்று விட்டதால்.இது வரிசையாய் மூன்றாவது படம் என்பது நினைவிருக்கட்டும்.

ரசல்: முடிவா என்ன சொல்ல?
படத்தில் வரும் இரண்டு சூர்யாக்களை வெட்டி எடுக்க தெரிந்த இயக்குனர்,இரண்டாம் பாதியை வெட்டி எடுக்க மறந்து விட்டார். 

பில்லா

பில்லா முதல் பாகத்தில் ராஜ்கண்ணன் எழுதிய வரிகளில் ஆரம்பிக்கிறது பில்லா இரண்டாம் பாகம். 
"டேய் என் வாழ்க்கையல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கனுதுடா..."
முதல் பாகத்திருக்கு எந்தவகையிலும் பங்கம் விளைவிக்காத இரண்டாம் பாகம் என்றே சொல்லலாம். இயக்குனர் சக்ரி மற்றும் உதவி கதை ஆசிரியர் எரிக் எழுதிய முழுக்க முழுக்க தமிழில் எடுக்க பட்ட ஆங்கில திரைக்கதை. படத்தில் லாஜிக் பார்த்தால் நான் தல ரசிகன் இல்லை. ஆனால் ஒரு ஆங்கில படமென்று பார்க்கும் போது முக்கால் வாசி இப்படி நடந்திருக்கும் என்று நினைப்போம் ,அதே பக்கத்தில் அமரும் நண்பர்கள் "டேய் அவனுக்கு என்ன டா ஆச்சி" என கேட்க்கும் போது "அவன காலி பண்ணிட்டான் டா" அப்படி நமக்கு புரிந்ததை சொல்லுவோம். இங்கும் அதே தான் நிகழ்வு தான். நீண்ட நாட்கள் பிறகு ஒரு முறையாவது படத்தின் வசனகர்த்தா ஈரா முருகன் மற்றும் ஜாபர் முருகன் வசனத்திற்காக பார்க்க வேண்டிய படம்.
"அகதிங்க தான அனாதைகள் இல்லையே"
"மத்தவங்க பயம் நமக்கு பலம்"
"கீழ ஒக்கந்திருபவனுக்கு தெரியாது எறங்கி வேல செய்றவனுக்கு தான் தெரியும்"
மற்ற வசனங்கள் முன்னோட்டதிலயே பார்த்துட்டு இருக்கோம். வில்லன் அறிமுக சடுன்ட் மிரள வைக்குது.  இப்போ வர படத்தில எதுல கதை இருக்கு ஒரு வரி கதையை எப்படி படமா எடுக்கிறாங்க என்பதை தான் தலை படத்தில் தலையை முன்னிறுத்தி 129 நிமிட படம். பாட்டெல்லாம் மூணு நிமிஷத்தில முடிஞ்சிருது. முக்கியமா பெயர் போடும் போது கூட வெறும் நிழற்படத்திலயே பில்லா ஏன் முரண் பாடனவன் என்று கூறியதை எத்தனை பேர் உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருந்தது ஆனால் அடுத்த காட்சிக்கு ஒட்டவில்லை என்ற குறை தான் மற்றவர்களுக்கு ஏனோ மொக்கை என்று தோனுகிறது என்று நினைக்கிறேன்.
என்னை பொறுத்த வரை தலை ரசிகனை தலைக்கு தலை வணங்குகிறேன் ஏன் என்றால் மிகவும் அழுத்தமான வசனங்களை அதற்கேற்ற உணர்ச்சியோடும் உச்சரிபோடும் பேசியதற்க்கு. மற்ற ரசிகர்கள் என்ன கூறினாலும் இந்த படமும் தலைக்கு மகுடம் தான்.

ரசிகனாய்
--
Yours,
Rasal

துப்பாக்கி விமர்சனம்

துப்பாக்கி விமர்சனம்

தீபாவளி சிறப்பு செய்திகள்:

ஏரியா முழுசா விடாம சரவெடி சத்தம்
அங்க ஒன்னு இங்க ஒண்ணுன்னு யானை வெடி சத்தம் 
அது வெடி சத்தமா இல்ல விசில் சத்தமான்னு தெரியல ஓயின்னு சத்தம்
இப்படி சத்தத்துக்கு நடுவுல...

திரை அரங்கம் இருக்கும் சாலைகளில் வீரிட்டு பறக்கும் வண்டி சத்தம்..... அட துப்பாக்கி படம் ஓடுற திரை அரங்கம் பக்கங்க...
கூட்ட நெரிசலை தடுக்க, ஆங்காங்கே காவல்துறை சிறப்பு முன்னேற்பாடுகளை செய்துள்ளனர்..

இனி என் சரவெடி:

இளைய தளபதி, டாக்டர் இன்னும் பல செல்ல பெயர்கள் இருந்தாலும், விஜய் என்னும் ஒருவரை சினிமாத்துறை ஒரு வளர்ந்த நடிகராய் தான் பார்க்க வேண்டும் என்று, இந்த வருடத்தில் இரண்டாவது படத்தை பதிவு செய்திருப்பதன் மூலம் மீண்டும் வெற்றி கண்டுள்ளார். ஆர்பாட்டம் இல்லாத தன்னுடைய இயல்பான நடிப்பில் என்னை போல் அஜித் ரசிகர்களையும் கவர வைக்கும் ஒரு கதாபாத்திரமா இல்லை கனவுப்பாத்திரமா என்பதை விஜய் தான் சொல்லவேண்டும். 52 படங்களில் இல்லாத ஒரு புதிய விஜய் திரை அரங்கம் சென்று பார்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

விஜயை ஆங்கிலம் ஹிந்தி தமிழ் மூன்று மொழிகளில் பேசுவதன் மூலமும், உடம்பை முறுக்கேற்றி காட்டுவது மட்டும் இல்லாமல், larger than life hero வாக காட்டாமல், intelligent wing army man என்று சாதாரணமாய் ஒரே காட்சியில் இந்த படம் வேற மாறி என்று ஆச்சரிய படுத்தி உள்ளார்  AR MURGADASS. ஏழாம் அறிவில் சொதப்பிய திரைகதையை இந்த துப்பாக்கியில் (ARM Reloaded) ஒவ்வொரு குண்டாய் படம் பார்பவர்களை சுடுகிறார். அதுக்காக படத்தில் இப்படி தான் துப்பாக்கி எடுத்துட்டு சுடுவாரான்னு கேட்டா? அதுவும் இல்ல!!! முழுக்க முழுக்க ஹீரோ என்பவர் மற்றவர்கள் இல்லாமல் ஜொலிக்க முடியாது  அவர்கள் உதவியுடன் தான் படத்தின் இறுதியில் வெல்கிறார். இதுக்காக டைரக்டர் க்கு பாராட்டுகள்.

இந்த படத்தின் ரியல் ஹீரோ திரைக்கு பின்னால் நமக்காக ஒளிபதிவு செய்த சந்தோஷ் சிவன். இந்த படத்த DVD ல பாக்கறதா இருந்தா கூட தயவு செஞ்சு ஒரிஜினல் சிடி வந்தப்புறம் பாருங்க. இந்த அளவுக்கு எந்த ஒரு மசாலா(CLASS) படத்தோட originality பார்க்க முடியாது.பாடல்கள் எடுத்த விதம் இல்ல முழு படத்த எடுத்த விதமும் நம் தமிழ்க்கு புதுசு. (One Standing Ovation for Santhosh Sivan)

படத்துல இன்னொரு முக்கிய நபர் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். சும்மா மாஸ் ரசிகர்களுக்கு தேவையான அத்தனை ஓட்டிங் அண்ட் கட்டிங். சபாஷ் ஸ்ரீகர் பிரசாத்.

சில புஸ் ஆன வெடிகள்:
* ஹரிஸ் ஜெயராஜ் வீட்ல சீக்கிரமே ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து கல் அடிக்க போவாங்கன்னு நெனக்கிறேன். அந்த அளவுக்கு trailer ல வந்த மியூசிக் மட்டும் வச்சிக்கிட்டு வண்டி ஓட்டலம்ன்னு பார்கறார். 

* பாட்டு போன படத்தோட இந்த படத்துல  நல்லா இருந்துச்சி, ஆனா படத்தோட சுவாரசியத்த கெடுக்கறதும் அதுதான். டைரக்டர்!!! பாட்டு இல்லாம படம் கொடுக்கற trend வந்திருச்சி கொஞ்சம் நீங்களும் திருந்துங்க.

* காஜல் அகர்வால் ஸ்வீட் தான் ஆனா என்னவோ சுகமா இல்ல.

புதுசா ஒரு வெடி:
* வெண்ணிலவை பாட்டு மொத்தம் அஞ்சு நிமிஷம் ஆனா படத்துல ஒன்ற நிமிஷம் அந்த அளவுக்கு சிறப்பான எடிட்டிங். அந்த பாட்டு தேவையே இல்ல இருந்தாலும் சந்தோஷ் சிவனுக்காக பாட்ட சுருக்க சொன்ன டைரக்டர்க்கு பாராட்டுகள்.


அப்புறம் இந்த தீபாவளி எப்படி போச்சு?
ஆக மொத்தம் படம் நல்லா இருந்துச்சி கொஞ்சம் புஸ்சான வெடிகளை தவிர்த்து. லாஜிக் பாக்கறவங்க கொஞ்சம் தள்ளி நின்னு வெடியை வேடிக்க பாருங்க. சில நேரம் தூரத்துல வெடிக்கற அவுட் மாறி அழகா இருக்கும்.

சாட்டை

சாட்டை 
பிரபு சாலமன் தயாரிப்பில் எம்.அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனியின் நடிப்பில் வசனம் எனும் சாட்டையால் அரசு பள்ளிகளின் ஆசிரியர்களை அடி விளாசி இருக்கும் படைப்பு. 
பராசக்திக்கு பின் மிக நீண்ட வசனமான 
"கடைகோடியில இருக்குற ஆதிவாசி மகன்ல  இருந்து பணக்கார பசங்க வரைக்கும் ஏற்ற தாழ்வு இருக்க கூடாதுன்னு schools la uniform கொடுத்திருக்காங்க அவங்கள rank படி ஒக்கராம பிடிச்ச இடத்துல உக்கார சொன்னேன் அது தப்பா...
வீட்டுக்குள் ஒரு பள்ளி வேணும் பள்ளிக்குள் ஒரு வீடு வேனும்னுன்றதுக்காக வாத்தியார் வர வர வரைக்கும் நிக்க வேணாம் ஒக்கார சொன்னேன்...
கடவுள் மனுஷனுக்கு கொடுத்த வாரம் பேச்சு பேசாம இருந்தா கெட்டு போயடுவீங்கன்னு பசங்களும் பொண்ணுகளும் பேசுங்கன்னு சொன்னேன் ஏன் அத விட jail பெருசுன்னு நெனக்க கூடாதுன்னு..."
அது ஒரு ரெண்டு நிமிஷ வசனம் அதுக்கே இயக்குனரை ஆற தழுவி வாழ்த்தனும். இப்படி படம் நெடுக்க கைதட்டல் வசனங்கள் திரை அரங்கில். கடைசியாய் "ஏணியை கூரை மீது போடாதீர்கள் வானத்தை நோக்கி போடுங்கள்" என்று முடியும் போது சமீப காலங்களில் சண்டை காட்சிகளில் வராத மயிர் கூச்செறியும் சம்பவமும் நடந்தது. 
சினிமாத்தனம் இல்லாமல் படத்தை ரெண்டு மணிநேரம் கொண்டு போக முடியாது அதற்க்கு இந்த படமும் விதி விலக்கல்ல. ஆனால் அதையும் மீறி படத்தை ஒரு மாணவனாய் பார்த்தால் ஒரு ரகம் ஆசிரியராய் பார்த்தால் பல ரகம். சமுத்திரகனி தயாளன் ஆசிரியராய் வாழ்ந்து என் பல முன் மாதிரி ஆசிரியர்களை நினைவு கூர்ந்தார். 
அன்பழகன் நீங்க நல்லா வளரனும்....ஆல் தி பெஸ்ட்.....

ரொட்டி!! (ஒரு திகில் கதை)


ரொட்டி!! (ஒரு திகில் கதை)
இதை நான் ஒரு திகிலுடன் தான் எழுதுகிறேன்.
இரு சிறுவர்கள் பேசி கொண்டிருந்தார்கள்! அதில் ஒருவன் மட்டுமே அந்த சம்பவத்தை விவரிக்க! இன்னொருவன் உற்று கேட்டு கொண்டிருந்தான். அதாவது முந்தைய நாள்.....................................................................................

தன் தந்தையுடன் அருகில் இருக்கும் ரொட்டி கடைக்கு சென்றிருந்தான்.அங்கு வித விதமான ரொட்டிகளின் வடிவங்களை பார்த்த அவனுக்கு ஒரு ரொட்டி தோற்றம் சற்று வித்தியாசமாக இருந்திருக்கிறது.அதை வாங்குமாறு தந்தையிடமும், கடைக்காரனிடம் எடுத்து தருமாறு கேட்டான். அப்போது அந்த கடைகாருக்கு வேர்த்திருக்கிறது சற்றும் பதறிய வார்த்தைகளோடு உளற ஆரம்பித்திருக்கிறான். தன் தந்தை தன்னை அங்கு இருக்கும் உட்காரும் இடத்தில அமர்ந்திருக்குமாறு சொல்லி இருக்கிறார்...........................

தன் தந்தையும் அந்த கடைகாரரும் கடைக்கு வெளியில் சென்று பேசி இருக்கிறார்கள். அதை பார்த்தால் அது ஒரு ஏதோ  குலைநடுங்கும் சம்பவம் போல பேசிகொண்டிருந்தார்கள். சற்று நேரம் கழித்து உள்ளே வந்த அவன் தந்தை, அவனை வேக வேகமாய் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். தன்னிடமும் அவன் தாயிடமும் இனி அந்த கடைக்கு போக வேண்டாம் என்றார். அவனுக்குள் இருந்த அச்சம் களைந்து அவன் தந்தையிடம் ஏன் என்று வினவி இருக்கிறான். அதற்க்கு அவன் தந்தையும் சற்று குழம்பிய வார்த்தைகளோடு...................

அங்கு பேய் இருக்கிறது நீ பார்த்த அந்த ரொட்டி, அந்த வடிவில் இல்லை போலும் செய்யும் போது . ஆனால் அது தினமும் ஒவ்வொரு இடத்தில கடித்து வைக்க பட்டது போல் காட்சி அளிக்கிறது. அதனால் தான் அந்த கடைக்காரர் தனியே என்னை வெளியே கொண்டு சென்று விளக்கினார். நாம் இனிமே அந்த கடைக்கு போக கூடாது  சரியா என்று கூறி இருக்கிறார்..............................

அடுத்த நாள் ஸ்கூல் பஸ் போகும் வழியில் கடையை எட்டி பார்த்திருக்கிறான் அங்கு கடை மூட பட்டிருக்கிறது. வெளியே மந்திரித்து கட்டிய எலுமிச்சை பச்சை மிளகாய் தெரிந்தது என்று அந்த சிறுவன் கூறி முடித்தான். அந்த இன்னொரு சிறுவன் உண்மையாவா டா!! டேய் பயமா இருக்கு டா..............

PIZZA(A thrilling Food without need of seasoning(Brand Actors) and appetizers(Brand Producers & Distributors))
மேலே கூறியவையும்  இந்த pizza படத்திற்கும் ஒரே ஒரு சம்மந்தம் உண்டு அது திகில்!! திகில்!! திகில்!!  திகில்லை தவிர்த்து வேர் எதுவும் இல்லை.  இதில் முக்கிய பாராட்டுக்கள் cameraman  தோளில் தன்னுடைய கனவுகளை திரைக்கதை எனும்  திறனால் ஒரு இரண்டு மணி நேர திகிலை ஏற்படுத்திய கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தின் இரண்டாம் நாயகன் இசை,திகில்லிர்க்கு தேவையான அத்தனை நுண்ணிய பயமுர்த்தும் இசை அது.முதல் முறையாக காட்சிகளையும் வசனத்தையும் தெரிவிக்காமல் எழுத வேண்டிய விமர்சனம் இது. அப்படி எழுதி விட்டால் அதுவே படத்திற்கு spoils-pot ஆகி விடும். அதனால் இந்த படத்தில் தெரிவிக்க மறந்த ஒரு  கருத்தை மட்டும் எழுதுகிறேன் "தயவு செய்து இந்த படத்தின் முடிவை யாரிடமும் கூற வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்"

Climax of ரொட்டி(ஒரு திகில் கதை)
மனைவி : ஏங்க பையன் கிட்ட சொன்னீங்க? அவனுக்கு என்ன புரியும்.
கணவன்: நான் அவனிடம் உண்மையை கூறவில்லை. அங்கு பேய் இருப்பதாய் அவனை மிரட்டி இருக்கிறேன். அதனால் அவனாக அங்கு செல்ல மாட்டான். அதனால் தான் எலி கடித்த அந்த ரொட்டியை வேண்டும் என்று அடம் பிடிக்கவில்லை. நாளை அந்த கடை சீல் வைக்க பட்டிருக்கும் சுகாதார துறையால்.
மனைவி: நல்ல வேலை என்கிட்ட  நீங்க சொல்லல அந்த கதையை!!! இல்லாவிட்டால் இந்த ஏரியாவே அந்த கடைக்கு போகும் போது பயந்திருக்கும். நான் ஒரு ஓட்ட வாய் பாருங்க.....

Sunday, December 16, 2012

நீதானே என் பொன்வசந்தம் - முதல் முறை பார்த்த ஞாபகம்!

நீதானே என் பொன்வசந்தம் -  முதல் முறை பார்த்த ஞாபகம்!



An Ilayaraja Musical
இளையராஜாவுக்கு காதல் கதைகள் என்றால் இளமை ஊஞ்சல் ஆட வைக்கும். பாடல்களில் இருந்த முதுமை இசை படத்தில் இல்லை. அவ்வபோது மௌனமே இசையாய் கொடுத்ததில் மட்டுமே ராஜா சார்.மற்ற இடத்தில guitar கொண்டு பூர்த்தி செய்திருக்கிறார். எங்கே அவரின் வயலின் இசை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. படத்தின் கோர்வையில் வரும் பாடல்கள் இதம், இடையில் பேசும் வசனங்கள் இங்கீதம். 

A Gautam Vasudev Menon Film
மின்னலேவும் விண்ணை தாண்டி வருவாயவும் ஏற்படுத்திய தூக்கம் இழந்த பொழுதுகள் இல்லை. காதலும் நெருடலும் சொல்லிருந்தாலும், அதை மூன்று பருவமாய் பிரிதிருந்தாலும், அதை படமாக இரண்டரை மணிநேரம் தேவையில்லை. பாடல்களிலும் கதை சொல்லும்போது தேவை இல்லாத சில பல பேசிக்கொள்ளும் காட்சிகள், கேள்விகளுக்கு விடை அளித்தாலும் நீதானே என் பொன்வசந்தம் வெறும் வசந்தம் மட்டும் தான். கண்டிப்பாக அடுத்த படத்தில் நீக்க பட வேண்டிய வார்த்தைகள்
1. காலி 
2. செம்ம feeling
3. அவ்ளோ அழகு 

இன்னைக்கும் கவுதம் அளவுக்கு காதலின் ஆழத்தை கூறியவர்கள் இல்லை மணிரத்தினத்தின் அலைபாயுதே மட்டும் விதிவிலக்கு. காதல் என்றும் ஆரம்பிக்கும் போதும், வெற்றி அடையும் போதும், சந்தோசம் மட்டும் தான் தெரியும்! அதை வெற்றியடைய போராடிய இரண்டு இதயங்களின் போராட்டங்கள் வலிச்சா மட்டும் தான் தெரியும். விண்ணை தாண்டி வருவாயா ஒரு ஆணின் மனதின் ரணத்தை காட்டியது, நீதானே என் பொன்வசந்தம் ஒரு பெண்ணின் காதல் வலிகளை பகுதியாய் காட்டியதிற்கு பாராட்டுகள். ஆனால் எல்லா பெண்களும் ஒரே மாதிரி இல்லை அதனால் சிலர்க்கு பிடித்து பலருக்கு பிடிக்காமலும் போகலாம். This could be your love story tag போட்டுட்டு கூடவே இதையும் போட்டிருக்கலாம் and not everyone's story.

Jeeva & Samantha in
ஜீவா சரியான பொருத்தம் இல்லை ரொம்வவும் matured அஹ இருக்குற இமேஜ். வார்த்தைகளின் உணர்ச்சியில் பேசக்கூடிய வசனங்கள் உணர்ச்சியே இல்லமல் பேசப்படுவது ரசிகர்களை கத்தி இல்லாமல் கொள்வதற்கு சமம். இதுக்கு மேல ஜீவா நடிப்பை பத்தி பேச ஒன்னும் இல்ல.

சமந்தா நித்யாவாய் வாழ்ந்திருக்கிறார். ஸ்கூல் டிரஸ் ஆகட்டும், 20 வயசு பெண்ணாகட்டும் , 24 வயசு பெண்ணாகட்டும்! அவ்ளோ இயல்பும் இளமையும். எதற்காக அழுகிறோம் என்பதை அனுபவித்து நடித்தால்! அந்த காட்சி பிரமாதமாய் வரும் அப்படிதான் பல இடத்தில நடித்திருக்கிறார். ஜெசியை விட நித்தியா நேர்மையானவள்! அழகானவள்! ஆழமானவள்!. கவுதம் இந்த படத்தை சமந்தாவிர்க்காக எடுத்திருக்கிறார். காதலில் பெண்களின் வலிகளை நேர்த்தியாய் நடித்திருக்கிறார். Dependent person என்று ஜீவா சொல்லும் இடத்தில,சமந்தா ஏன் dependent என்று விளக்கிய விதம் நிறைய பேருக்கு புரியவில்லை.ஆனால் போறத்துக்கு முன்னாடி என்ன கட்டிபிடிச்சி இருந்தா? நான் கோவபட்டிருக்க மாட்டேன்! கண்டிப்பா அவன் கூட தான் இருந்திருப்பேன்! என்ற இடத்தில சமந்தாவின் காதலை புரிந்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை. பாராட்டுகள் பாராட்டுகள் பாராட்டுகள் சமந்தாவிருக்கு. I love samantha என்று சொல்வதற்கு நான் அச்சப்படவில்லை.

Santhanam comedies
சந்தானம்! சந்தானம்! தான் ஒரு வரி காமெடியன் அப்படின்னே கூப்பிடலாம். படத்தில சமந்தாவிர்க்கு பிறகு, சந்தானத்தோட காமெடி ஒரே ஆறுதல்.Chill out Chill out.

MS Prabhu & Om Prakash Cinematography And Antony Editing:
சொதப்பல் பா! இன்னும் கூட அழகை அழகாய் காட்ட முடியும் ஆனால் வெறும் காட்சியை ரொம்ப நேரம் காட்ட முடியாது. ஒரு சபாஷ் இருக்கு இண்டர்வல் முன்னாடி பத்து நிமிஷம் சீன் ஒரே Shot, ஒரு பறக்கும் காத்தாடியில் இருந்து பார்க்கும் அளவிற்கு எடுத்திருந்தாலும் நாயகனும் நாயகியின் expressions ய் எடுக்க மறந்து விட்டார்கள். எடிடிங்க்க்கு வேலை இல்லாத படம்.

வழங்கும் 
"நீ தானே என் பொன்வசந்தம்"
முதல் முறை பார்த்த ஞாபகம்....
மழை வரும் மாலை நேரம் 
மனதினில் வந்து போகிறாய் 
விழியினில் ஏனோ ஒரு ஈரம்.

சிலர் மட்டுமே இது மாதிரி பெண்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களின் வலிகளை புரிந்தவர்களுக்கான படம் நல்லா இருக்கு, இன்னும் நல்ல குணங்களுடன் இருக்கும் பெண்களை விரும்புவர்களுக்கு சுமார்.காதலே தெரியாதவர்களுக்கு மொக்க. Strictly for Dependent Girls who loves thier man deeply....


என்றும் காதலுடன்,
ரசல்

Wednesday, December 12, 2012

முரசு பாடலும் நானும்!


மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் நினைவோடு 
கவியின் முரசு பாடலும் நானும்!


நான்:
உனக்கென்ன பாரதி நீ எழுதி விட்டாய்..
நீ பிறந்த தமிழகத்திலே 
சாதி வன்கொடுமைகள்?
பார்ப்பனாய் பிறந்து 
சாதி ஒழிப்பு பாடல்கள் 
உன் சினங்கெழ தோலுரித்தாய்! தொகுபுரைத்தாய்!

சாதி வளர்க்க இங்கே தமிழன்
கட்சி வளர்க்கிறான் 
சாதி இல்லை என்று சொல்லி 
ஒருவன் சாதி வளர்பவனுக்கு 
தண்ணீர் ஊற்றுகிறான்!

இது புரியா ஒரு கும்பல் 
குடிசைகளை தீக்கு இறையாக்கிறான்
குடும்பங்களை நாசமாக்கிறான்!
கேள்வி கேட்டால் கட்டி உதைக்கிறான்
எட்டி மிதிக்கிறான்!

பாரதி தமிழ் பற்றி படிப்பவர்கள் கூட 
பாரதத்தில் வாழும் தமிழனை கண்டுகொள்ளவில்லை 
ஏளனம் செய்தான்!
மீன் பிடித்து வாழும் தமிழனை கொன்றாலென்ன 
சிறை பிடித்து சென்றாலென்ன?
வாய் வார்த்தை போராட்டம் மட்டும் தான் 
மறத்தமிழனின் உடன் பிறப்பா?

நீயோ அன்று கொட்டு முரசே என்று பாடி விட்டாய்!!
நீ இன்றிருந்தால் உன் கொட்டு முரசை 
"மீன் பிடி மீனவனும் 
விவசாயம் செய்யும் உழவனும்  
பணம் தேடி அலையும் எந்த ஒரு உயிரும் 
ஒன்றென இப்பூவுலகில் காணீர்"
என்றிருப்பாயோ?

என்றும் அன்புடன்,
ரசல்