Sunday, November 15, 2009

இயற்கை அன்னை


இயற்கை அன்னை என்னை அழைக்கிறாள் தன்னுடனே இருந்து விடவே!
என்ன ஒரு சுயநலம் அவளுக்கு!
என்னை யாரும் அழைக்கவும் கூடாது என்று!!
என் கைபேசி அலைவரிசையை துண்டித்து விட்டால்!!
ஆனால் என்னக்காக என் உறவுகள் காத்திருக்கின்றனர்!
உன்னோடு ஒரு நாள் இருந்த நினைவுகள் புகைப்படங்களாய் என்னிடத்தில்!
அதை என் உறவுகளும் ரசித்திடுவர் நீயோ சுயநலவாதி!
நான் நினைத்து பார்க்க முடியாத அழகை எனகளித்து!!
வீடு திரும்பும் போது அவர்கள் அழைத்தாள் உன்னை மறந்திடுவேன்
என் கைபேசி அலைவரிசை கிடைத்த உடன்!!

முடிவு என்றுமே சுபமே


எழுத்துக்கள் தோரணம் கட்டின
உன் மனம் தேறும் என்றே!!

சுற்றம் நம்மை இகழ்திடுமோ உன் செயல் என்னை
பாதித்திடுமோ இன்றுன்னை தந்தை இகழ்ந்தாலும்....
சேர்ந்திடுவோம் நாமே பல இன்னல்களை கடந்து.....

பாச போராட்டம் நாளும் உனக்குள்ளே
நேசம் பெருகிடும் நமக்குள்ளே
இந்த இன்னலிலே....

கணம் பெருகிடும் உன் கண்ணீர் துளியும் உரமானது
என் நெஞ்சும் சற்றே ஈரமானது!!

உளம் நிறைய ஆசைகள் பெருக்கி தொண்டை குழியில்
சிக்கி தவிக்கும் வார்த்தைகள் கூட தண்ணீர் மறுக்கும்
நீ என்னை ஏங்கி அழுதாளே!!

கவலை நிறைந்த வாழ்க்கை இல்லை என்றும்
ஆவலை கூட்டிய சூழ்நிலைகள் தான் இன்றும்
உனக்குள்ளே நீ பூட்டிய வார்த்தைகள் சிலிர்படையும்
என்னிடம் பகிர்ந்தாலே!!

தட்டுதடுமாறி முடிவுகள் எடுப்பவர்கள் இல்லை நாம்
விட்டு போகும் என்றும் நாம் ஆரம்பிக்கவில்லை
சேர்ந்து வாழ்வோம் என்ற உணர்வை மட்டும் நம்பி
நம் காதலில் முதற் படி தாண்டினோம்!!

நடந்தவை யாவும் ஆரம்பமே நினைவுகொள் நாளும்
முடிவு என்றுமே சுபமே!!

Wednesday, September 23, 2009

கனவுகள் என் முன்னே கானல் நீராய்!!

ஒரு மஞ்சள் வெயில் ஆளம் விழும் மரத்தடியில்!
இளைப்பாற நின்றிருந்தேன் ஒரு பூங்குயில் குரல் கேட்டது!
தேடினேன்.... கனவை கலைத்து.... தேடினேன்.....
அது என் கைபேசியின் அழைப்பு இசை என்று சற்றுனர்தேன்!

குரலெடுத்து பேசுவதற்குள் வந்தது தேனிசை இல்லை?
உறவானவளின்...
இதழ் மடிப்பில் என் பெயர் உச்சரிப்பை அலை வரிசை தாண்டி வந்ததென்ன இதழிசை தானே!

பேசும் வார்த்தைகள் உதட்டளவில் பிம்பங்கள் மனதலையில்!
உறங்கிய போதும் சிலிர்ப்படையும் நுண்ணுயிர்கள்!
தடுமாறியும் வார்த்தைகள் அழகானது உன் கேள்விக்கு பதிலானது!

விடியலாய் இருந்தால் அதிகாலை தேநீர் என்றிர்க்கலாம்!!
மின்மினி பூச்சும் உறங்கிடும் நாம் உறங்கவில்லையே!!
அழைப்பை துண்டித்த பின்!

புரண்டேன் பின்பங்கள் மீண்டும் மனதில் கணவாய்!
குழந்தையாய் சிரித்தே உறங்கினேன்!
விடியலுக்காக.. காத்திருந்தேன்...

தேனிர்க்காக அல்ல உனக்கு விடியல் வணக்கம் கூற மீண்டும் கனவு காண!அதிகாலை கனவும் பலிக்குமே அன்று உன்னை சந்தித்தால்!!

கனவுகள் என் முன்னே கானல் நீராய்!!
வெகுதொலைவில் நீயும் நானும்....
அழைப்பு மணியை எதிர் பார்த்தே இன்னும் சில காலம்!
சந்திப்போம் இன்னும் சில மாதங்களில் என்ற நம்பிக்கையில்!
நாட்பொழுதை கடக்கும் காதலனாய்!
நொடிபொழுதை கடக்கும் காதலியாய்!
வென்றிடுவோம் நம் காதலை!

Monday, May 18, 2009

சுதந்திரமே எழுந்து வா முள்வேலிக்குள் இருந்து!!!

நாட்களை எண்ணி பயன் என்ன உன் நலமரியா வினாடிகள் எத்தனை?

முள்வேலிக்குள் அமர்ந்து சுற்றி வரும் செய்தி அறியாமல் உன் கால் படும் நாள் எண்ணி நிலமும் அழதொடுங்கும்!

உள்ளுணர்வு உனக்காக தான் வாடுகிறது உன் ஆர்வமான பேச்சை கேட்க!

என் செய் சந்தர்ப்ப சூழல்களே இறையாண்மை வெற்றி பெரும் ஜனநாயகம் தோல்வி யுறும்!

தமிழுணர்வு பணத்திற்கு வாக்களிக்க அங்கே ஒரு தமிழன் அழிகிறான்!

சுதந்திரமே எழுந்து வா முள்வேலிக்குள் இருந்து!

உணர்வுள்ள கடைசி தமிழன் இருக்கும் வரை பொறுத்திருந்தால்!

பண நாயக இந்தியாவில் நீ வகுப்பு பாடமாய் அதிலும் தேர்வுக்கு கேட்கப்படாத கேள்வியாய் உனக்கான போராட்டங்கள்!!

Monday, April 27, 2009

கனவாகிய பொழுதுகள் உறவாடிய நெஞ்சங்கள்

கனவாகிய பொழுதுகள் உறவாடிய நெஞ்சங்கள் !
உணர்வுகள் ஒன்றுபட உரிமைகள் பறிக்கப்பட்டனவே!
புரட்சிகள் வெடித்எழவே சுதந்திரம் அருகாமையில்!
இனவெறிகள் பற்றி எழவே துப்பாக்கிகுண்டுகள் தீ அனைதனவே!
பேச்சுவார்த்தைகள் சுமுக தீர்வு கானல் முயற்சிகள் தோல்வி பெற!
இனபோராளிகள் துரோகியாக நயவஞ்சகர்கள் கூடதிள்ளே கொல்லப்பட்டும் தேதி அறியா ஆடுகளாய்!
மொழிபோர் வேந்தர்கள் அரசியலுக்கு தீனியிட்டு பல அரசாங்கத்தின் கூட்டு முயற்சியில் சிதையும் தமிழீழமே?
குடும்ப அரசியலில் பக்சே கலைஞர் மற்றும் காந்தி வெற்றி பெரும் போது!
சார்லஸ் அண்டோநீயின் சீற்றதிர்காக காத்திரும் உலகமே!!!!
அபாய மணிகள் உங்களால் அடிக்கப்பட்டது அழிவுகள் இனி உங்களுக்கே!
அன்று கனவாகிய பொழுதுகள் நனவாகி உறவாடிய நெஞ்சங்கள் கண்ணீர் துடைக்கப்படும்!!

வெல்க தமிழீழம்!!!

தமிழீமும் தமிழினம்

இலங்கை தமிழ் கேட்டு பாரும் சிறுத்தைகளும் சீறி பாயும்!

சீர்திருத்தம் எழுதிய தமிழனே இன்று தடுமாறுகிறான் உனக்கு தோல் கொடுக்க!

பங்குசந்தையின் விழ்ச்சியை உற்று நோக்குகிறான் கிளிநொச்சியின் குண்டு விழ்ச்சியை ஏளனம் செய்கிறான்!

உன் இடத்தில் படையெடுப்பிற்கு இங்கு தமிழன் போராட்டம் நடுத்துகிறான் எல்லாம் கண்தொடைப்பா?

கட்சிகள் பல இருந்தும் ஆட்சி நம் கையில் இருந்தும் நம்மால் தான் அப்பாவி தமிழனின் உயிரிழைப்பை தடுக்க முடிந்ததா!

திராவிடனே உன் உள்ளத்தில் இருக்கும் எழுச்சி என்று வெளிப்படுமோ?

அன்று தமிழீமமும் தமிழினம் ஆகுமடா!

Thursday, April 16, 2009

நட்பு பாராட்டுவோம்

சக்கரை பாகில் கலம் பிரிக்க ஊற்றப்பெற்ற பாலாய்!
பாலில் நீர் பிரித்த அன்னப்பறவையாய்!
என்னோடு நகையாடியவர்களை தரம் பிரிக்கிறேன்!
வீட்டுப்பாடம் முடிக்க உதவிய நன்பனை!
முட்டிபோட்டும் வலியை கூட எள்ளி நகைத்தவன்!
தேர்வு மதிபென்னை கூட்டி போட்டு வெற்றி பெற செய்தவன்!
மனப்பாட செய்யுளையும் பின்னால் இருந்து எடுத்துக் கொடுத்தவன்!
பள்ளி முடிந்தும் வீடு வரை பேசியே தூரம் அகலவைத்தவன்!
கல்லூரி பேரூந்து நிறுத்தத்தில் என் வருகைக்காகவும் காத்திருந்தவன்!
அமரும் இருக்கையில் தன் பையை போட்டு இடம் பிடித்தவன்!
வகுப்பறையில் காலை வணக்கம் கூறி புத்துணர்வு ஊட்டியவன்!
ஆசிரியர் இருந்தும் என் மதிய உணவை சுவைத்தவன்!
சில சமயம் கல்யாண தரகர் போல்!
பல நேரம் கல்வி கண் திறந்தவரை போல் !
அழ வைத்தாலும் என்னை புரிந்தவர்கள்!
ஏங்கி பிரிந்தாலும் இவர்கள் ஆழ பதிந்தவர்கள்!
இதில் குறிப்பிட்ட அவன் நட்பாம் அவர்கள் இங்கே நண்பர்களாம்
பள்ளியில் கல்லூரியில்!

நிமிர்ந்து நில் துணிந்து செல்

நிமிர்ந்து நில் துணிந்து செல்

நானும் ஒரு போராளி இந்த உலகத்தில் எதிலும் வெற்றியை மட்டும் குறிக்கோள் இல்லாமல் தோல்வியும் ஒரு படிகல்லாய் என்னும் ஒரு இளைஞன். Sinthitha velaiyil yethayum seidhu vida mudiyathu சுற்றத்தில் இருக்கும் ஒவ்வொரு கருத்தையும் எடுத்து கொள்ள வேண்டும் மீறி செய்தால் கரணம் தப்பினால் மரணம் என்று கூட koora mudiyum. அனால் மாற்றங்கள் வந்தால் தான் உன்னை நீ வேறு படுத்தி காட்ட முடியும் yenbathil yellalalvum santhaegam irunthathillai.
முரண்பாடுகளுக்கு அப்பார் பட்டவன் mundiyadithu vetri peruvathil muthalvanaen sila காலம்.
Vetrikku பின்னல் ஓய்வு எடுக்காமல் அடுத்த வெற்றியை தேடி போகும
முயற்சியில் இறங்கும் நான் பேருக்காக அல்ல வேலை தொடர்வதால்.
தூங்கும் எண்ணம் வந்தால் கூட கால்களை neeti உறங்க முடியாது ஏனென்றால் thookkathillum சிந்தனை ஓடிகொண்டிருக்கும் அடுத்து என்ன செய்யல்லாம் என்று!! எனக்கு வாரம் நாள் கணக்கு தெரியாது விடியும் வரை தூக்கம் கிடையாது தொலைபேசி கண்டுபிடித்தவன் கூட கடந்த ஏழு மாதத்தில் 128:44(HR:Min) recieved calls இருக்காது. இது போதாதென்று நான் அழைத்த calls மட்டும் இப்போது 92 Hrs. உழைப்பு பிழைப்பு என்று இந்த IT துறை ஆன பிறகு பொழுது போக்குகளுக்கு வழியனுப்பி விட்டேன். இனி வரும் காலம் இளைஞர் காலம் என்று கவிஞன் எழுதினான் அனால் இளைஞர்கள் இன்று அவதி பட்டு மட்டும் illamal thiyagangalaiyum seigiraan.
சற்று மாறுபட்ட விஷயங்களை யோசித்தேன் என்றால் அது நான் எழுதிய கவிதைகள் தான். என்னுடைய பொழுதுபோக்கு மற்றும் ஆறுதல் எல்லாம் நான் எழுதும் கவிதைகள் தான். முதன் முதலில் ஒரு அலுவல் தொடர்பான ஒன்று கூடலில் இதை எழுதினேன் காரணம் இல்லாமல்

கண்ணிமை தேயும் உன் கடை கண் பார்வையில்
நாட்பொழுது ஓடி போகும் என் நாட்குறிப்பிலே!
உதட்டு சாயம் உறைந்து போகும் உன் புன்சிரிப்பிலே
நுண்ணுயிரும் உன் சுவாசம் பட்டால் மன்னுயருமடி!
காதணியும் நியூட்டன் விதி கூறும் அதன் அசைவிலே
ஒட்டு பொட்டும் உயிர் வாங்கும் வடிவத்திலே!
சுருண்ட முடியும் கிழ் விழ்ந்தால் சுகாதாரம் தானே
முக்கிருக்கும் மூக்குத்தியும் மூச்சிரைக்கும்
என் காதல் மட்டும் என்ன கன்னி வெடியா
உன் கால் பட்டு வெடிப்பதற்கு!
நாட்பொழுது ஓடி போகும் என் நாட்குறிப்பிலே!

என்னுடைய எழுத்துக்களுக்கு நான் உருவம் கொடுத்தது முதன் முதலில் அன்று இங்கே அலுவலகம் ஓராண்டு நிறைவு விழாவில் நான் சந்தித்த அவளை தான் உருவகப்படுத்தினேன். என்றுமே சிரித்த முகம் பார்த்ததுண்டா அது அவள் தான் சிரிப்பிற்கு மகுடம் வைத்தார் போல் சிங்கப்பல் தெரிவதே அதற்கு சாட்சி. எனக்கும் அவளுக்கும் அறிமுகம் ஏற்படும் முன்னே என்னை பற்றி அவளுக்கு முன்னதாகவே தெரிந்திருக்க வேண்டும் ஏனென்றால் நான் இங்கே புதிதாய் முளைத்தவன் அங்கும் இங்கும் என் பேர் பரவி கொண்டிருந்தது. அறிமுகம் ஆன நாட்களில் எனக்கும் அவளுக்கும் இருந்த ஒரு பேரில்லா உறவை தான் காதல் என்று சுற்றி இருந்த நண்பர்கள் உசுபேத்தி விட அன்று எழுதிய கவிதையே எனக்குள் காதலா என்று எனக்கு நானே வினவி கொண்டது

எனக்குள் காதலா யார் சொன்னது?
விடியலை நோக்கி அரை தூக்கத்தில் உன் முகம் வந்து போகும்!
என் கைபேசியும் அழகாய் தெரியும் உன் புகை படம் அதில் பார்த்தால்!
ஒலி ஓசையில் காதல் பாட்டும் பேருந்து நிறுத்தத்தில் ஏதோ ஒரு காதலர்களை பார்த்தால் மனதிலும் உதட்டிலும் சிறு சந்தோஷம்!
என் வருகை பதிவேட்டை பார்க்கும் முன் உன் வருகையை என் கைகள் பக்கம் புரட்ட என் கண்கள் உன் பெயரை தேட!
காலை வணக்கமும் மதிய வணக்கமும் சேர்த்து கூறுவாய் அக்கணமே என் விடியல் பிறக்குது!
உன்னை பற்றி நினைத்தாலே சுற்றி நிற்பவர்கள் ஊமைகள் ஆனார்கள்!
நீ பேசும்போதும் சிரிக்கும்போதும் என் கண் ஏனோ அதில் சிங்கப்பல் தேட உன் கை வளையல் சினுங்கலே காதில் கேட்க!
நம் கண்கள் நான்கும் ஏதோ பேச என் நிலை அறிந்தேன் உன் வெட்கத்தில் நிலை குலைதேன்!
என்னடா இவன் மற்றவரை போல தான் என்று எண்ணி இருந்தால் அது தவறான ஒரு கூற்று. இந்த சந்தோஷம் வெறும் பகல் கணுவு தான் என்று பலருக்கு மற்றும் எனக்கும் ஆகஸ்ட் 25 தெரியவந்தது. அது அவளுக்கு அன்று 26 ஆம் பிறந்தநாள் என்று. நீங்கள் யோசிக்கலாம் இதில் என்ன என்று, எனக்கு 24 வயசு தான ஆவுது. ஆதலால் எண்ணங்கள் தவிடுபொடி. அவளை நினைத்து எழுதிய கவிதை தான்

கண் திறந்து கனவு கண்டேன் பிறை நிலா வானில் முழு நிலவாய் நீ என் மனதில்!
மனம் திறந்து பேச துடிக்கிறேன் என் நாள்பொழுது ரகசியத்தை உன் நொடி பார்வையின் அவசியத்தை!
உன் நினைவலைகள் கடல் அலை போல எவ்வேலையின் தொடக்கமும் நீ முடிவும் நீ!
என் பேச்சாற்றல் நீ எதிரில் வந்தால் தடம்மாருது தடுமாறுது!
என்று உன் உள்ளபார்வையில் நான் விழ்வேனோ அக்கணமே நீ அறிவாய் நீ நீயில்லை நான் நானில்லை நாமாவோம் என்று!

இந்த கதைக்கும் ஒரு சுவாரசியம் வேண்டும் இல்லையா அதையே நீங்கள் மேல படித்தது.

அதுவரை இந்த அலுவலகத்தில் எனக்கு என்று உறுதியான நம்பிக்கை என்னுடைய மேனேஜர் க்கு இருந்ததில்லை. முதல் வெற்றி தந்த அந்த புதிய முயற்சி நம்பிக்கை ஊட்டியது மேலும் பல உக்திகள் செய்ய ஆயுத்தம் ஆனேன். சனி நாயிறு தொடர்ந்து இரண்டு நாள் போராடி ஒரு பெரும் இழப்பில் இருந்து வெற்றி பெற்றேன் ஆனால் அதையும் என்னை ஏளனப்படுத்தியது இந்த சுற்றம். பெரும் முயற்சியில் தோல்வி உற்ற நான் முதன் முதலில் பணிக்கு விடுப்பு எடுத்தேன்.
உண்மையில் நான் வெற்றி பெரும் காலம் தூரம் இல்லை என்று அடுத்த கட்ட பயணம் மேற் கொண்டேன் சறுக்கல்கள் இல்லை சாதனைகள் தொடர்ந்தன ஆனால் வாரம் நாள் மாதம் எதுவும் கணக்கு இல்லாமல் வீட்டுக்கு சென்றால் கூட நான் யோசிப்பது அடுத்து என்ன செய்யலாம் என்று தான். ஏன் நான் இப்படி மாறினேன் என்றால் காரணம் மிக சிறியது நல்ல ஆடுகளம் கிடைத்தால் ஹர்பாஜன் சிங்க் கூட சிக்ஸ் அடிப்பார் அதையும் நாம் பார்த்து கை தட்டுவோம், அது போல் தான் யாருக்கும் கிடைக்க சுதந்திரம் நான் என்ற அகம்பாவத்தோடு செய்ய தொடங்கினேன் செய்கிறேன் ஒரே ஒரு கைதட்டல்களுக்காக.
கை தட்டல் கேட்டது என் நண்பர்கள் வார்த்தையில். சோர்ந்து போன போதும் தட்டி கொடுத்த என் தோழமைகள் எண்ணில் அடங்காதவை. வெயில் மழை நடந்து வந்த தூரம் ஏதும் கணக்கில் இல்லை தோல்வி வெற்றி எதும் சுகமாய் இருந்தததிலை ஆனால் படிபிணைகள் ஏராளம். இன்று இந்த பணி மாற்றம் மட்டும் என்னை அடக்க போகிறதா என்ன?

நான் ஒரு போராளி வெற்றி தோல்வி முக்கியமில்லை என் பங்களிப்பும் என் பெயரும் நான் இருந்த இடத்தில் நினவுக்கூரும் ஏன் என்றாள் நான் நிமிர்ந்து நின்றேன் துணிந்து சென்றேன் என் பாதையில் இருக்கும் கற்களை கடந்து!!!

ஆயிரம் முறை தோற்றவர்க்கு பலம் அதிகம்!!!

நிமிர்ந்து நில் துணிந்து செல்

MY SEVEN MONTH TRAVEL IN AGILITY LOGISTICS

THE END