Thursday, February 23, 2012

எனக்கும் காதலா! பகுதி 4



டிசம்பர் 22,2011:

காலை 7:30:
ராஜேஷ் வீட்டுக்கு வந்த உடனே ஹரி சண்ட போட ஆரம்பிச்சிட்டான். ஹரிஷ் கூட சமாதான படுத்த பாத்தான், இருந்தாலும் சூடா பேசிட்டு இருந்தனுங்க.

ஹரி : டேய் எதுக்கு டா? அந்த basket ball எடுத்துட்டு போன?
ராஜேஷ்: தோ இருக்கு மச்சி! ஆபீஸ் ல வெளையாட எடுத்துட்டு போனேன் டா!
ஹரி : சொல்லிட்டு போயிருக்கலாம் இல்ல...
ராஜேஷ் : அதுனால என்ன டா.. ரூம்ல எல்லாரும் சொல்லிட்டு தான் எடுத்துட்டு போவாங்களா என்ன..
ஹரி: ஆமா டா சொல்லிட்டு தான் எடுத்துட்டு போகணும். அது என்னிது இல்ல
ஹரிஷ் : ஹரி ஓவரா பேசுற... ரூம் டா எல்லாரும் எல்லாம் ஷேர் பண்ணி தான இருக்கோம்..
ஹரி : நீ சொல்லுவ... உன் பொருள எடுத்துட்டு போனா தெரியும்...
ஹரிஷ்: அப்போ நான் இப்படி கத்த மாட்டேன்.. ராஜேஷ் தான் எடுத்துட்டு போனான்னு விட்ருவேன்..
ராஜேஷ் : மச்சி சரி டா! அதுக்கு ஏன் இவ்ளோ சீரியஸ் அஹ பேசுற..
ஹரி : முடியாது டா.. நீ எதுக்கு எடுத்து போன அத சொல்லு... நான் அத நீ எடுத்துட்டு வரமாட்டேன் நெனச்சேன்... ஆனா எடுத்துட்டு வந்ததனால தப்பிச்ச.
(ராஜேஷ் விளக்கி சொல்ல...)
ஹரிஷ் : ராஜேஷ் சரி விடு... ஹரி நீ சொல்லு பா.. நீ என்ன அத வச்சி பிளான் பண்ண?
ஹரி : உனக்கு தெரியாது டா!  டெய்லி காலைல அத வச்சி வெளையாடுன தொப்ப கொறையும் ஒரே மாசத்துல ஒடம்ப கொரசிடுவேன்...
ஹரிஷ் : ha ha ha ha....  நாயே இதுக்கு தான் நீ இவ்ளோ சீன் போட்ட... உனக்கு ஒடம்பு குறையனும்னா.. தெருவுல ஓடு இல்ல காலைல என் கூட வா IIT campus சுத்தி வருவோம்..
ராஜேஷ்: மச்சி இவனுக்கு அக்கு பஞ்சர் தான் தேவ படும்... மச்சி ஊசி இருக்குல காத்து எறகிற மாறி.. எரகிடலாம்... வரியா...
ஹரி: போடா... ############ நீ பொண்ண மடக்க எனக்கு ஓசில கெடச்சத தூக்கினு போவ! நான் ஒடம்பு கொறைக்க use பண்ண கூடாதா...
ஹரிஷ் : அவுனுக்கு தெறம இருக்கு... துரும்பு கூட அவனுக்கு பல் குத்த உதவும்... உனக்கு அந்த துரும்பு.... #####################
ஹரி : #############################################################################################################
ராஜேஷ் : போடா வெண்ணை... எதுக்கு இப்போ அசிங்கமா பேசுற....
ஹரிஷ் : ##########################################################################################################

(# - Cencored due to local language இறையாண்மை)
(இப்படி தான் ஒன்னும் இல்லாத விசயத்துக்கு, சத்தம் போடாம சத்தம் போட்டு ஒருத்தன ஒருத்தன் திட்டி இவனுங்களே இவனுங்க கலாய்ச்சிக்குவாங்க)

(கீர்த்தி சாயல் கொஞ்சம் நார்த் இந்தியன் மாறி.அவ பூர்விகம் அது ஆனா ரொம்ப நாள் முன்னாடி சென்னை ல செட்டில் ஆயிட்டாங்க. புரசைவாக்கம் ஏரியால தமிழும் ஹிந்தியும் கலந்து பேசுற பொண்ணு. சலவையும் white அந்த பொண்ணும் white. நெறைய நண்பர்கள் ஆண் பெண் என்று பேதமில்லாமல். புனே ல ஒரு கம்பெனி ல வேலை செஞ்சு அப்புறம் ராஜேஷ் கம்பெனிக்கு வேலைக்கு வந்து மூணு மாசம் தான் ஆகுது. ஒரு தலையணை இல்ல ரெண்டு மூணு தலையணை கட்டி கிட்டு தூங்கற பொண்ணு. ஆனா அவள் கனவுல ஹ்ரிதிக் ரோஷன் தான் வருவாரு, ஏன்னா இவ தவிர ரசிகை அவருக்கு மொபைல் wallpaper தீம் எல்லாம் அவருதான். அந்த டைரி மில்க் கவர் அஹ அழகா பொம்மையை போல் மடிச்சி வச்சிட்டு, தூங்க போறதுக்கு முன்னாடி ஒரு கிளாஸ் பால் குடிச்சிட்டு போனாள்)

(ராஜேஷும் தூங்கிட்டு தான் இருந்தான், ஆனா சுத்தி ஹரிஷ் ஓட குரல் கேட்டுட்டே இருந்துச்சி. ஏதோ வேலையா இருக்கான் போலன்னு தூங்கிட்டே இருந்தான். தூங்கும் போது சுத்தி நடக்குற விஷயம் கேக்குற விஷயம் கனவா வரும், இப்படி தான் ஹரிஷ் ஏதோ பறக்கும் ரயில் ரூட் சொல்ல சொல்ல இவனுக்கு கனவு முழுக்க ரயில்ல பயணம் செய்யுற மாறி ஒரு கனவு, அதுல கீர்த்தி ஏறினாள்! ரயில் தண்டவாளம் மாறிச்சி! இவனுக்கு பசி எடுத்து எழுந்திருக்கும் போது யாருமே இல்ல. சரி சாப்டு படுக்கலாம்னு பார்த்தா மணி நாலு. இதுக்கு மேல என்ன சாப்பிட என்று மீண்டும் குட்டி தூக்கத்தை போட்டான்)

மாலை 5:30:
வண்டி டிரைவர் போன் போட்டார்,  மணி அப்பவே ஐந்தரை. வண்டிய கெளம்ப சொல்லிட்டு வேலைக்கு கெளம்பினான். போற வழில ஒரு கடைல எதை எதையோ வாங்கிட்டு போனான். இதுக்கு தான் இவன் வண்டி கெளம்ப சொன்னது இப்போ தான் தெரியுது. அவன் மொபைல் சிணுங்கியது சாயின் தவற விட்ட அழைப்பு மற்றும் ஒரு மெசேஜ்.

ஹரிஷ் அலுவல் மெசேஜ்:
உன்னோட சிரிப்புக்கும் என்னோட சிரிப்புக்கும் என்ன வித்தியாசம்?
நீ சந்தோஷமா இருந்தா சிரிப்ப, நான் நீ சந்தோஷமா இருந்தா சிரிப்பேன்.

ஆபீஸ் குள்ள நுழைந்த உடன், 

இவன் கண்கள் இவனை துரத்துது!
தேடி எங்கும் அலைபாயுது!
நாடி எல்லாம் துடிபாகுது!
கூடி வரும் பெண்டியரில் அவள் ஒருத்தியா என்று!

ச்சீ ஒன்னு கூட நல்லாவே இல்ல.. கொஞ்சமா எட்டி பாத்தா தெரியுது அவள் அமரும் இடம்,பிரகாசம் இவன் முகம். 
இடையில் ஒரு மொபைல் ரிங் டோன். வடிவேல் காமெடி ரிங் டோன்: என்னா பீலிங்கு...... சிரித்து கொண்டே சென்றான் அவன் இருக்கைக்கு.

முருகன் இவன் அழைப்பிற்கு முன்னாடியே வந்துட்டான். 

முருகன்: சார் என்ன இன்னைக்கி நீங்க வர லேட் ஆயிடுச்சி...
ராஜேஷ்: ஏன்டா... நீ வேற.. நானே கூப்புட போறேன் வேணும்னா..
முருகன்: சார்.. அவுங்க உங்கள கேட்டாங்க. எங்க இன்னும் ஒன்னுமே சொல்லலையா என்னன்னு?
ராஜேஷ்:(உள்ளுக்குள் பூரிப்பு) அப்புறம் என்ன சொன்னாங்க?
முருகன்: நீங்க யாருன்னு கேட்டாங்க.. அப்புறம் நாளைக்கு உங்கள பாக்க ஆர்வமா இருக்கறதா சொன்னாங்க..
ராஜேஷ்: சரி இந்தா!! இத கொண்டு போய் கொடு!

முருகன் கீர்த்தியிடம் ராஜேஷ் கொடுத்த பையினை கொடுத்துட்டு போனான். கீர்த்தி கொஞ்சம் கொழம்பி போய் அந்த பையில் என்னவென்று பார்த்தாள். உள்ளே முழுவதும் decoration items அப்புறம் ஒரு நோட் கூட..

"கீர்த்தி நீங்க என்ன பாக்கணும் இல்ல? அதுனால இநத பையில் இருக்கும் அணைத்து decoration items வச்சி உங்க இடத்த அழகா மாத்திக்குங்க. நாளைக்கு உங்கள கடைசி கிப்ட் கொடுத்து பாக்க வரேன் like a Chirstmas thatha(handsome). "

கீர்த்தி தன்னுடைய இடத்தை முழுவதும் அழகாக ஜோடித்தாள். அப்படியே தன்னுடைய கணிணீயில் ஏதோ எழுதி print out போட்டு வந்து தன்னுடைய இடத்தில ஒட்டி வைத்தாள்.

நுழைவு வாயிலில் "Welcome to my Chirst Maa"
சுற்றி முழுவதும் "Chirst Maa u are great", "U are so nice Chirst Maa" ,"U r not Chist maa u r Choclate Maa", "Merry Christmas for my new Friend(Chirst Maa)" இப்படி பல எழுத பட்ட காகிதங்கள். முருகன் கூடவே உதவி புரிந்தான். அங்கே சுற்றி இருப்பவர்கள் எல்லாம் கண்ணு வச்சிட்டாங்க.

ராஜேஷ் கொஞ்ச நேரம் பேசாம இன்னைக்கே சொல்லிடம்னு நினைத்தான். சாயிடம் அதை பற்றி கேட்டான்.

சாய்: டேய் வேணாம் டா... இதுவரைக்கும் ஒரு த்ரில் இருக்கு இல்ல.. அத அப்படியே maintain பண்ணு.. பொண்ணுங்கள எப்பவுமே சுத்த விட சான்ஸ் கிடைக்காது டா...
ராஜேஷ்: இல்ல சும்மா decoration items வாங்கி கொடுத்து அலங்காரம் பண்ண சொன்னேன், அதுக்கு கூட அவ தனியா போஸ்டர் போட்டு வச்சிருக்கா.. கொஞ்சம் பீலிங்கா இருந்துச்சு..
சாய்: இது தாண்டா பசங்க பிரச்சனையே.. பொண்ணு உன்ன பத்தி நினைக்கிறா ன்னு தெரிஞ்சா போதுமே! உடனே அலுப்புவீங்கலே..
ராஜேஷ்: அப்படி இல்லடா! எனக்கு தோனுச்சு உன்கிட்ட கேட்டேன்.. சரி இன்னைக்கு என்ன ஒன்னும் பண்ணலையா?
சாய்: அந்த கடன்காரன் தான!  இன்னைக்கு எதாவது ஒரு தமிழ் பாட்டை மாத்தி பாட சொல்லி இருக்கான்.
ராஜேஷ்: உன்னோட christ maa  அநேகமா ஒரு சினிமா பைத்தியமா இருக்கணும், அதுனால டெய்லி இப்படி சினிமா பத்தியே செய்ய சொல்றாங்க. சரி என்ன பாட்டு அப்போ.
சாய்: தெரியலைங்க இப்போ தான் யோசிச்சிட்டு இருக்கேன். மைக் செட்ட யார்கிட்டயும் கொடுக்க வேணாம்னு HR Order போல. Security வரும் போதே சொன்னாரு.
ராஜேஷ்: என்ன சொல்றது!! நம்ம HR உன் மேல அவ்ளோ பாசமா இருக்காங்க!

சாய் சென்டர்ல போய் நின்னு கத்தி பாடினான். அவன் வந்த உடனே எல்லாரும் அவுங்க வேலைய விட்டுட்டு பார்த்தாங்க, அவ்ளோ பிரபலம் ஆயிட்டான் அவன்!!!

சாய்: இப்போ நான் மங்காத்தா படத்தில இருந்து open the bottle பாடலை மாத்தி எழுதி இருக்கேன்.
Disclaimer : இது முழுவதும் கற்பனையே யாரையும் பழிவாங்கும் நோக்கோடு செய்ய வில்லை.
மச்சி  open the dooruuuuu.....
இது  அதட்டல்  பரம்பர  
அஞ்சாறு  manager வேற  
அன்றாடம்  ஒப்பாரி  தான்  
நாம  கொட்டு  நு  ஒருமுர 
சொன்னாக்க  பலமுற 
கொட்டு  கொட்டுன்னு  கொட்டுவாங்கதான்..  
நாம  முறிக்கினு  போயடாக்க
எங்க  போவாங்க  இவுங்க  வீட்டுக்கா ...


இப்போ  ஒம்போது  offler  letter ஒன்னாக  இருக்கு 
ஓஹ ஹோ ன்னு  நம்  ஜாதகம் ..


ஆடி ஆடியே சோந்தோமடா  
நம்மேனி  வாடியே செத்தோமடா
ஓடி  ஓடி  ஏ  அலுதோம்டா  
சும்மாவே  ஒக்கண்ட்தே பல இழந்தோமடா..

மொத்த பேரும் கைதட்டி மீண்டும் ஒருமுறை பாட சொல்லி கேட்டனர். மேனேஜர் அவன்கிட்ட வந்து பாராட்டிட்டு போனாரு. இருந்தாலும் அவர பத்தி பாடும் போது சொல்லி இருக்கலாம்ல என்று கேட்டு சென்றார்.

ராஜேஷ் சாயிடம் HI 5 தட்டினான். அப்போ ஒரு பொண்ணு பேய் முகமுடி போட்டு கிட்டு ஓடிவந்து ராஜேஷ் கிட்ட
"ஓதல வா ஓதல வா நேனு சந்தரமுகி... ன்னு சொல்லிச்சி"
அதுக்கு சாய் "அழகு பொம்மாயி" என்று சொன்னான்.அந்த பொண்ணு முகமுடி கலட்டன அப்புறம் தான் தெரிஞ்சிச்சி அது நம்ம கழுத பொண்ணு...

முகம் தேடி அவள் காத்திருக்க 
நகம் கடித்து காத்திருந்தான் 
நாளை வருகைக்கு....

Wednesday, February 8, 2012

எனக்கும் காதலா! பகுதி 3




டிசம்பர் 21,2011:
இந்த வார activity க்கு document work  முடிச்சி manager  approval க்கு mail அனுப்பி விட்டு கெளம்பும்போது தான் ஞாபகம் வந்தது, அன்றைய daily checklist அனுப்பவில்லை என்று. சற்று நேரத்தில் அதனையும் முடித்து கிளம்பிய போது நேரம் காலை 6:50. நேரத்திற்கு நாம் போகிறோமோ இல்லையோ cab போய்விடும். அடுத்த வண்டி 7:30 க்கு தான். சரி நாம் செய்த தவறுக்கு அவுங்க என்ன செய்ய முடியும்,அதே போல் ராஜேஷும் பொதுவாக யாரையும் கடிந்து கொள்வதில்லை,ஆனா சாய் இந்த மாறி எதாவது நடந்தா? காட்டு கத்து கத்துவான்! உடனே Transport Manager போன் போட்டு அவர்கிட்ட புகார் கொடுத்துட்டு, என்ன செய்வான்?... அதே 7:30 cab ஏறி போவான். 

சரி அதுவரை facebook மொபைலில் பார்த்துகிட்டு இருந்தான். நேத்து அடித்த status message க்கு ஒரு like நாலு comment. 

"Harish Lakshminarayan likes this"
Harish Lakshminarayan: மாமா வெளையாட்டு புள்ள டா நீ!
Hariharan Tamilmani: வேளை நேரத்துல வேளை செய்யாம? என்ன விளையாட்டு ராஸ்கல் :P
Saai Chandran: ராஜேஷ் நீங்க ரொம்ப கில்லாடிங்க சூப்பரா காய் நகர்துறீங்க
Harish Lakshminarayan: டேய் விளையாட்டுன்னு தான சொன்ன? Saai Chandran: ராஜேஷை நோட் பண்ணுங்க நீங்க முன்னேறலாம்.

யார் என்ன கமெண்ட் போட்டாலும் ஒரு அசட்டு சிரிப்பு வரத்தான் செய்யும்.அதுக்கு அவனும் விதிவிலக்கில்லை, அவனும் ஒரு கமெண்ட் போட்டான்.
Rajesh Kumar: Harish,Hari,Saai உங்க விளையாட்டு எங்களுக்கு தெரியாதா. public public!!

ஹரிஷ் ராஜேஷை போனில் அழைத்தான் அதற்க்குள் cab ready ன்னு அவனை கூப்பிட்டார்கள். ஹரிஷ் அழைப்பை துண்டித்து விட்டு cab ஏறினான். ஹரிஷ்க்கு மெசேஜ் type பண்ணிட்டு இருந்தான் அதற்க்குள் ஹரிஷ் மீண்டும் அழைத்தான். 

ஹரிஷ்: டேய் எங்கடா இருக்க? 
ராஜேஷ்: இல்லடா கொஞ்சம் வேலை இருந்தது, அதனால வண்டிய விட்டுடேன்!! இப்போ தான் கிளம்பினேன்.
ஹரிஷ்: சரி நான் ஒரு friend ஐ பாக்க போறேன் அப்படியே office க்கு போய்டுவேன்.
ராஜேஷ்: ரைட் மாப்ள நாளைக்கு பாக்கலாம்.

இவனுங்க ரெண்டு பேருமே CUG la இருக்காங்க. ரெண்டு பேருமே மொதல்ல ஒரே company ல வேளை செஞ்சதுனால, இன்னைக்கும் இவங்க அழைப்புகளுக்கு இலவசமே. பாதி தூரம் கடந்திருக்கும் cab driver  ராஜேஷை "சார்! சார்! ஒரு அஞ்சு நிமிஷம் டீஸல் போடுக்குரேன்" சொல்லி அவன் அரை தூக்கத்தை எழுப்பி விட்டான். 

ஹரிஷ் அலுவல் message:
Cute lover message:
"எல்லா செங்கலளிலும் " i miss you" ன்னு எழுத போறேன், எதாவது ஒரு செங்கல் உன் தலைல விழணும்னு ஆச படுறேன்,அப்போ தான் உனக்கு என் வலி என்னன்னு தெரியும்."

வீடு வந்து சேரும் போது 8:15, ஹரி கிட்ட பேசிட்டு இருந்தவன் அப்படியே உறங்கினான். அவன் மொபைல் சிணுங்கள் அவனை எழுப்ப கூடாது என்று அதை ஹரி silent ல் போட்டு விட்டு, தொலைக்காட்சியையும் அணைத்து விட்டு Quantitive Aptitude book ஐ புரட்டி கொண்டு இருந்தான்.

மதியம் 1:30:
(ஹரி பாஸ்கட் ball கோர்ட்ல விளையாடிட்டு இருந்தான், அங்கே இன்னொரு ரூம் மேட் அப்பு சத்தம் டேய் தூக்கி போடுறா. அவன் பந்து எறிந்த இடத்தில இருந்து செங்கல் விழுந்தது. ராஜேஷ் ஒரு திகைப்புடன் எழுந்தான். அங்கே ஹரி Bournvitta Basket  தொங்கி கொண்டு இருந்தது அவன் விளையாடிட்டு இருந்தான். அப்போ தான் தெரிந்தது அது ஒரு கனவென்று.) 

ஹரி: சாரி மச்சி எழுப்பிட்டு விட்டுடனா?
ராஜேஷ்: இல்ல இல்ல! பசிச்சிச்சு அதான் எழுந்துட்டேன்!
ஹரி: நான் அப்பு கிட்ட ஆந்திரா meals வாங்கிட்டு வர சொல்லிருக்கேன்..
ராஜேஷ்: டேய் sodexho இருக்கு டா எடுத்துட்டு போக சொன்னியா?
ஹரி: இல்லடா எங்க இருக்குன்னு தெரியல? அதான் அவனையே வாங்கிட்டு வர சொன்னேன்!

(ஆந்திரா meals bachelor's க்கு எப்போவுமே வர பிரசாதம் 35 ருபாய் unlimited meals  அத ஒன்னு வாங்கி ரெண்டு பேர் சேந்து சாப்பிடுவாங்க. பப்பு சோர்ல ஆரம்பிச்சு தயிர்ல முடியும்.. கண்டிப்பா வயிர் நிறையும்! என்ன அதுல? சோடா மாவு கலப்பாங்க!! அதுனால ரெண்டு பேர் என்ன? மூணு பேர் கூட சாப்பிடலாம்.. இன்னும் ஒரு கூடுதல் தகவல்? ராஜேஷ் தான் முதலில் அந்த கடைக்கு போய் சாப்பிடுவான், அங்க owner ஓட பொண்ணு கல்லூரியில் படிக்குது !இவன்கிட்ட ஒரு நாள் பேசி இருக்கு,அதனால இப்போ அங்க இவுனுங்க எல்லாரும் regular customers.)

ஹரி: டேய் அப்பு என்ன ரூம்க்கு வந்துட்ட?
அப்பு: வேளச்சேரிக்கு collection வந்தேன் சரி அப்படியே சாப்பிட்டு போலாமேன்னு!!
ராஜேஷ்: அப்பு முன்னாடியே உன் குரல் கேட்டுச்சு?
அப்பு: இப்ப தாண்டா நான் வரேன்! ஹரிக்கிட்ட போன் பண்ணேன் அவ்ளோதான்!!
ராஜேஷ்: (ஓஹ! அது கனவு இல்ல)
ஹரி: டேய் தயிர் சாப்டுறியா அப்பு?
அப்பு: வேணாம் நீயே சாப்டு! 
(அப்போ ஒரு போன் அப்புவிற்கு "சார் நான் இப்போ கிண்டி ரயில்வே station ல இருக்கேன், நீங்க தாம்பரத்தில wait பண்ணுங்க வந்துடுறேன்" அப்பு எப்பவுமே இப்படி தான்? சமையல் அறையில் இருந்தா செங்கல்பட்டு,வரவேற்பறையில் இருந்தா தாம்பரம்,வீடு வெளிய இருந்தா கேளம்பாக்கம். இப்படி ஊரு ஊரா அலைந்து!!! சீட்டு தேஞ்சு போச்சு அவனுக்கு!!!)
அப்பு: டேய் மீதிய சாப்பிடு நான் கெளம்பறேன்!
ராஜேஷ்: சரி டா! கிண்டி ரயில்வே station ல போய் கை கழிவிக்கோ!! (ஹரியும் ராஜேஷும் வலது கையை தட்டி கொண்டனர்)
அப்பு: என்ன மாப்ள பண்றது? இப்படி சொன்னா தான் நம்புவானுங்க! போன் எடுத்த நச்சு நச்சு சொல்றானுங்க! இந்த executive பொழப்புக்கு தான் இப்படி அலைய வேண்டி இருக்கு... உங்கள மாறி எனக்கு ஏசி ரூம்ல வேலையா என்ன! விடு நான் கெளம்பறேன்...

(ராஜேஷ் ஹரி சாப்பிட்டு முடித்து விட்டு! எப்படி இந்த பாஸ்கட் பால் வந்துச்சுன்னு ஹரி கிட்ட கேட்டான். Bournvitta வாங்கனுதுக்கு ஓசியில வந்துச்சு சொன்னான். ஆனா ஹரி Bourvita வெறும் வாய்ல சாப்ட வாங்கி இருக்கான்.ஏற்கனவே வெறும் வாய்ல வடை சுடுவான் இதுல இது வேற . இருவரும் சற்று நேர உரையாடலுக்கு பிறகு உறங்கினர்)

மாலை 6:30:
வழக்கம் போல் அலுவலகத்திற்கு செல்லும் போது மொபைலை நோன்டியவ்னுக்கு, சில வார்த்தைகள் மின்னொளி என உதித்தது!!! அதை தட்டி சேர்த்தான்.. இயல்பாக அவனுடைய எண்ணங்கள் கவிதையாய் மாறின.. 

அவள் மிஸ் யு என்று செங்கலில் எழுதினாள்!
உறங்கிய போது கனவில் ஒன்று!
நடக்கும் போது பாதையில் ஒன்று!
அகல பார்த்த போது செம்மண்ணாய் ஒன்று!
முகர்ந்த போது தூசியாய் ஒன்று!
ஒன்றொன்றாய் தாக்கி!
உனை தீண்டிய வேதனை என்னையும் தீண்டியது!
மிஸ் யு செங்கலாய்!

(அதை தன்னுடன் பழகும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தான் குருந்தகவலாய். இன்று என்ன செய்ய வேண்டும் என்று முன்னரே தேர்வு செய்து விட்டான் அதற்கான ஏற்பாடுகளோடு வந்திறங்கினான். )

ஒரு கவிதை எழுதும் மாலை பொழுது! சுவாசிக்கும் காற்று புதிதாய் இருக்கும்! அதிலும் உன் கண்பட்ட கன்னியர் எல்லாம் புது கவிதையாய் தெரியும். இவன் கண்பட்ட கன்னியர்களில் முதல் ஆளாய் கீர்த்தி. இருவரும் ஒரே நேரம் வண்டியில் இருந்து இறங்கி காலார தங்கள் இருக்கைக்கு நகர்ந்து சென்றனர். அவள் கவியின் வார்த்தையாய் இருந்தது பார்த்தவர்களுக்கு தெரியாது இவன் ஓரக்கண் பார்வைக்கு தான் தெரியும்.

சுவாரிசயமான christ maa christ child விளையாட்டு! இன்னும் இரண்டே நாட்களில் முடியப்போகிறது. ஒவ்வொருவரும் தங்களை ஆட்டி படைக்கும் ஆள் யார் என்று தேடி கொண்டிருக்கிறார்கள்? அதில் பலரும் கண்டுபிடிக்கப்பட்டனர்! அதனால் பலரும் ஒதுங்கி விட்டனர். ராஜேஷை கண்டுபிடிக்கும் எண்ணம் கீர்த்திக்கு இல்லை! தனக்கு யாரோ பிடித்ததை எல்லாம் செய்கிறார்கள்! நான் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? வெள்ளி கிழமை அன்றே தெரிந்து கொள்கிறேன், என்று அமைதியாக விட்டு விட்டாள். ராஜேஷை ஆட்டி படைக்கும் நபர் யாரென்று தேடமலே சிக்கிவிட்டார்? அவர் இதுக்கு மேல என்ன செய்ய சொல்றதுன்னு தெரியலன்னு அவரே ஒத்துகிட்டார்? வேறு யாரும் இல்லை முருகனின் supervisor தான் அவர். இருந்தாலும் ராஜேஷ்க்கு அவர் வெள்ளி அன்று பரிசு கொடுப்பதாக வாக்களித்து சென்றார்.

வழக்கம் போல் முருகனிடம் தூது அனுப்பினான்: 
"இன்று உனக்கு refree வேலை,உனக்காக cafeteria மைதானமாக மாற்ற பட்டுள்ளது. அங்கே சிறுவர்கள் விளையாடும் ball உம் basket தொங்க விட பட்டுள்ளது. உனக்கு பிடித்த ஐவரை அழைத்து கொண்டு போய் ஆளுக்கு ரெண்டு முறை வாய்பளித்து அதில் ஒருமுறை சரியாக பந்தினை போடும் நபருக்கு ஒரு டைரி மில்க் பரிசளிக்க வேண்டும். டைரி மில்க்கள் அங்கே பந்துடன் வைக்க பட்டுள்ளது."

அவளின் அருகினில் இருக்கும் தோழிகளை அழைத்து கொண்டு போட்டிக்கு தயாரானாள். 
முதல் போட்டியாளர்: ரெண்டு பந்துகளையும் தவற விட்டாள்
இரண்டாம்,மூன்றாம்,நான்காம் மற்றும் ஐந்தாவது போட்டியாளர்கள்: கொடுக்க பட்ட வாய்ப்புகளில் சரியாக பந்தினை அந்த கூடைக்குள் செலுத்தினர்.
அங்கே ஒரே கூட்டம் கூடியது பெண்கள் ஆர்பரிக்க ஆண்கள் ஈ மொய்க்க அங்கே காட்சிகள் களோபரம் ஆனது.வெற்றியாளர்களுக்கு டைரி மில்க் கொடுத்தாள். முதல் போட்டியாலரிடமும் மீதம் இருந்த டைரி மில்கையும் கொடுத்தாள் அவள். இதை பார்த்த ராஜேஷ் முகம் வாடி போனது அவளுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லையே என்று!! அதோடு கீர்த்தி மேல் இருந்த ஓர பார்வை மேலும் அகல விரிந்தது. இருந்தாலும் அவளை பாராட்டியே ஆகவேண்டும் என்று முருகனிடம் பெரிய டைரி மில்க் வாங்கி வந்து அவளிடம் கொடுக்க சொன்னான்.

(டைரி மில்க் கல்லூரியில் படிக்கும் போதே அவனுக்கு பிடித்தவர்களுக்கு கொடுப்பது அவனது வழக்கம். இன்று அவளுக்கு கொடுக்க வேண்டும் என்று தான் சிறிய சாக்லேட்களை வாங்கினான் ஆனால் அது நடக்காமல் போகவே அவளுக்கு பெரிதாய் கொடுக்க ஆர்வபட்டான்)

கீர்த்தியிடம் முருகன் அந்த டைரி மில்கை கொடுத்த போது அவளுக்கு ஆச்சர்யம்! முகம் மலர்ந்தது! மற்றும் அவளுக்கு யார் என்று தெரிய வேண்டும் என்ற ஆவலும் எழுந்தது? முருகன் என்னோவோ சொல்லி தப்பித்து வந்து ராஜேஷிடம் தப்பித்த கதையை ஒப்பித்தான். அதற்குள் யாரோ ஆபீஸ் மைக் சிஸ்டத்தில் "mic testing one two three four" என்று அழைத்து கொண்டிருந்தார்கள். அது வேறு யாரும் இல்லை சாய் தான் பேசிகொண்டிருந்தான்.

சாயினை அணைத்து சினிமா நடிகர்களை போல் எதாவது ஒரு topic வைத்து கலை சேவை புரியமாறு அவனின் கிறிஸ்து தாயின் வேண்டுகோள்....

MGR குரலில்: ஐயோ அம்மா இன்று நான் என்ன செய்வேன், நீங்கள் ஆணையிட்டால் நான் உங்களுக்கு அடிபணிகிறேன். கும்பிட போன தெய்வம் குறுக்கே வரும் ஆனால் நான் குறுக்கே போனால் தாய்குலமே வராதம்மா.அண்ணா மீது ஆணை! அந்த பொண்ணை நான் கரெக்ட் பண்ணியே தீருவேன்! 

சிவாஜி குரலில்: அங்க ஒரு பொண்ணு..... என்ன பாத்து இளிச்சிச்சி.. நான் கை வீசம்மா கை வீசு டேடிங் போலாம் கை வீசுன்னு சொன்னேன்.. அதுக்கு அவ என் கன்னத்து மேலயே கை வச்சிட்டு போய்டாளே... (உக்கு உக்கு இருமல் சத்தம்)

ரஜினி குரலில்: ஜீன்ஸ் போட்டு சிட்டுங்கே கிட்ட மோதலாம் ஆனா சிங்கத்து கிட்டே மோதக்கூடாது... ஹா ஹா ஹா. ரெண்டு கை ரெண்டு கால் இல்லனாலும் அந்த figure ஐ கரெக்ட் பண்ணுவான் சார் இந்த காளி ரொம்ப கெட்ட பையன் சார் அவன்...

கமல் குரலில்: well u see... நான் என்ன சொன்ன வரேன்னா.. அங்க பொண்ணுகளுக்கு ஒண்ணுன்னா ஓடி போறான் பார்... அவன நிறுத்த சொல் நான் நிறுத்தறேன்..டெய்லி பஸ்ஸ்டாப் ல நின்னு கடலை போடுறான் பார்... அவன நிறுத்த சொல் நான் நிறுத்தறேன்.. ஒரு பைசா போன் க்கு கூட missed கால் கொடுக்கறா பார்.. அவளை நிறுத்த சொல் நான் நிறுத்தறேன் ... என்ன கடலை போடவேனம்ன்னு சொன்னா.... ஹாஆஅ ஹாஆ ஹா 

கடைசியாக Mr.ராகவன் குரலில்: நல்லத நாலு பேருக்கு சொல்ல ஷொல்லி என்ன கூப்பிடாங்க... என்ன சொல்ல பிள்ளைவாள்.. இவங்க எல்லாம் இப்படி தான்... நானும் ஒரு பொண்ணு கிட்ட போய் i love u ன்னு சொன்னேன்... அதுக்கு அவ என்ன காலம் போன வயசுல உனக்கு எதுக்கு இந்த பொழப்புன்னு கேட்டுட்டா.

ஆபீஸ் மொத்தமும் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். அனைவரும் சாயை வாழ்த்தி புகழ்ந்தனர். சாய் திக்கு முக்காடி நின்ற நேரம் HR கிட்டே இருந்து அழைப்பு வந்தது என்னனு போய் பார்த்தால் அங்கு அவனின் manager அமர்ந்திருதார். HR கண்டித்தார் மேனேஜர் கண்ணடித்தார். பெண்களை பத்தி பேசறது தப்புன்னு சொல்லி அவன அனுப்பிட்டாங்க. அவன் மேனேஜர் HR ஐ ஏதோ சொல்லி சமாளித்தார். அதற்குள் அந்த கழுதையை போல் கத்திய பெண் பக் பக் பக் என்று கோழி பிடிக்க நேராக ஓடி வந்து மேனேஜர் ஐ இடித்தாள். என்ன என்று வினவினால்? அவளுக்கு இன்று கோழி பிடிக்குமாறு உத்தரவாம். மேனேஜர் அதற்க்கு "அது சரி மா எந்த ஊர்ல கோழி நேர் கோட்டுல ஓடுச்சி.. கொஞ்சம் வளைஞ்சு நெளிஞ்சி போங்க" என்று கிண்டலளிதார்.

ராஜேஷ் இன்னும் சிரிப்பில் இருந்து மீளவில்லை அவன் சாயை கட்டி தழுவினான். அன்று மொத்த அலுவலகமும் சிரிப்பு வெடியில் இருந்து மீண்டு தங்கள் பணிக்கு செல்ல மிகுந்த நேரமானது. இந்த வார இறுதியில் நடக்கும் activity approve செய்யப்பட்டு, ஆயுத்த பணிகளுக்கு சாயுடன் கலந்துரையாடிய போது தான் தெரிந்தது? சாய் விடுமுறையில் செல்கிறான் என்று.அதனால் இந்த வாரம் சனி காலை ராஜேஷ் தான் செய்ய வேண்டும் என்று மேனேஜர் கூட மெயில் அனுப்பி இருந்தார். 

கீர்த்தி ராஜேஷ் அமரும் இடத்திருக்கு வந்தாள். என்னடா தெரிஞ்சி போச்சான்னு பார்த்தான்? ஆனால் அவள் சாயிடம் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்தாள்.. அதோடு பெரிய டைரி மில்கில் ஒரு சில அவனுக்கும் தந்து ராஜேஷிடமும் தந்து சென்றாள். அவள் மெல்ல நடந்து செல்ல... இவன் மனம் அவள் பின்னால்!

பகிர்ந்து உண்ணும் பழக்கம் அவளுக்கு!
உண்மை அறியா நிலை இவனுக்கு!
இன்று முதல் அவன் அரைதூக்கத்தில் வரும் முகம் அவளுடையது!

மேலும் சுவாரசியங்கள்...
அடுத்த சந்திப்பில்!