Thursday, January 26, 2012

எனக்கும் காதலா! பகுதி 2

டிசம்பர் 20,2011:
ராஜேஷ் காலை 6:30 shift முடிந்து தூக்கம் கலையாமல் வீடு சேரும் போது மணி 7:30. உள்ளே நுழையும் போதே ஹரிஷ் யாரோடோ தன் கைபேசியில் உரையாடி கொண்டிருந்தான். அவர்கள் ரூமில் மற்ற ஐந்து பேரில் வீரா குளித்து விட்டு அடுத்து கோழி @ அருணை எழுப்பி கொண்டிருந்தான் மீதம் மூன்று பேர் உறங்கி கொண்டிருந்தார்கள். ஆனா!! என்ன அவர்களுக்குள் என்று தெரியாது? ராஜேஷ் இருந்தா மட்டும்... அவர்களுக்குள் கலகலப்புக்கு குறைவே கிடையாது.

ஹரிஷ் தன்னுடைய உரையாடலை(அதுக்கு பெயர் அதிகாலை கடலை) துண்டித்து விட்டு உள்ளே நுழைந்தான்.

ஹரிஷ்: என்ன ராஜேஷ் தூங்க போறீயா? சாப்டு தூங்கலாம்ல? இரு நான் நாயர் கடைல tiffen வாங்கிட்டு வரேன்...
ராஜேஷ்: சரி டா! பொங்கல் வடை கெட்டி சட்னி வாங்கிட்டு வா.. 
ஹரிஷ்: டேய் மாமா தூங்கிடாத வரேன்..(கண்டிப்புடன்)

(நாயர் கடைல அஞ்சு நாளைக்கு முன்னாடியே கெட்டி சட்னி செஞ்சு fridgela வச்சிருப்பாரு. இருந்தாலும் வேளச்சேரி TCS பின்னாடி இருக்குற நாயர் அவ்ளோ famous. அதே போல இவங்களுக்கு ரூம் பாத்து கொடுத்தவரும் அவர் தான் நைட் ரெண்டு மணி வரைக்கும் கடையை ஓபன் பண்ணி வச்சிருப்பாரு. எவ்ளோ late ah போனாலும் பாசமா சாப்பாடு போடுவாரு but digestion problem வந்ததில்ல)

(ஹரிஷ் வண்டி சத்தம் பீறிட்டது காலைலயே வண்டிய வாசல்ல விட்டுட்டு அவங்க வீட்டு மாடில இருக்குற சுரேஷ் அண்ணா பக்கத்துக்கு வீட்டு குடிகாரன் கிட்ட பேசிட்டு இருந்தாரு. அவர பத்தி அதிகமா சொல்லிக்க ஒன்னும் இல்ல but அவருக்கு இவங்க ரூம்ல தெரிஞ்ச ஒரே பேரு ஹரிஷ், அவருக்கு ஹரிஷ் எப்பவோ உதவி பண்ணிருக்கான் அதனால அவன மட்டும் ஞாபகம் வச்சிருக்காரு)

அவன் உள்ளே நுழையும் போதே.. வீரா,அருண் வேலைக்கு கெளம்பி போனாங்க. ஆனா சும்மா போகல ராஜேஷ கலாச்சிட்டு போறானுங்க. யாருக்குமே ராஜேஷை கிண்டல் பண்ணனும் தோணும், ஆனா அவன் யாரையும் திட்ட கூட மாட்டான், அவனுக்கு தெரிஞ்ச அதிக பட்ச கெட்ட வார்த்த "போடா வெண்ணை! சரி நீ மூடு".

ராஜேஷ் facebookla status message update பண்ணிட்டு இருந்தான். "Yesterday was a excellent day, in office we are playing Chirst Maa Christ Child and we are entertained much. Laugh riots everywhere"

ஹரிஷ்: டேய் ராஜேஷ் மொபைல் நோண்டாம சாப்டு தூங்கு 

ராஜேஷ்: அது ஒன்னும் இல்ல மச்சி நேத்தி ஆபீஸ்ல நடந்த கூத்த facebookla update பண்ணிட்டு இருந்தேன்.
(நைட் நடந்தத ஹரிஷ் கிட்ட விவரிச்சான்)

ஹரிஷ்: அது என்னமோ போடா உனக்கு மட்டும் office cabla figure வருது,எங்க! நாம எல்லாரும் ஒண்ணா போனாகூட உன்ன தாண்ட பாக்குறாங்க!

ராஜேஷ்: நிறுத்துரா வெண்ணை! நீ மட்டும் காலைலயே கடலை போடலையா..

ஹரிஷ்: டேய் அது friend da! எங்கள யாரு பார்த்தாலும் friend ah தான பாக்குறாங்க.. உங்கள அப்படியா!

ராஜேஷ்: சரி நீ மூடு..

(tiffen சாப்டும் போதே ஹரி(இன்னொரு roommate) எழுந்து ராஜேஷ் பொங்கல்ல கைய வச்சான். பல் வெலகாம சாப்டறது அவனுக்கு மட்டும் இல்ல இந்த gang க்கே உரித்தான ஒன்னு ஒரு தடவ யாரோ foriegn சாக்லேட் கொண்டு வந்தாங்க அதுவும் காலைல நாலு மணி.. அஞ்சு மணிக்கெல்லாம் கூட்டா சேந்து முடிச்சு புட்டானுங்க)

மாலை ஆறு மணி:
ராஜேஷ் மொபைல் மெசேஜ்:(அது ஒரு forward message ஹரிஷ் அலுவளிடம் இருந்து)
"ஒரு அழகான பொண்ணுகிட்ட எந்த மாறி பையன் வேணும் லவ் பண்றதுக்குன்னு கேட்டா 
அவன் ஒரு சிறந்த போட்டியாலரா இருக்கணும் என்னோட காதல விட  அவனோட காதல காட்றதுக்கு"
ராஜேஷ் replies "நானும் அந்த மாறி பொண்ண தான் தேடிட்டு இருக்கேன்"

(cab la வரும் போது இன்னைக்கு கீர்த்தி கிட்ட என்ன செய்ய சொல்லலாம்னு யோசிச்சிட்டு வந்தான். உதித்தது புது ஐடியா! வண்டியை விட்டு ஆபீஸ் வெளியிலேயே இறங்கினான், நேற்று சென்ற அதே fancy shop ல் அவன் நினைத்ததை வாங்கி கொண்டு ஆபீஸ் க்கு சென்றான்)

அவன் வருவதற்கு முன்னாலே அவனுக்கு செய்ய வேண்டிய task வந்துவிட்டது. saai கூட வந்துட்டான் அவன் cab இன்னிக்கி சீக்கிரம் போல.

ராஜேஷ்: saai whats up dude? என்ன இது என் deskboard ல யாரோ எழுதி இருக்காங்க? 
"You are a good child. Please wear this kitchen cap from 7 to 8PM and invite them to our cafeteria 'வாங்க சாப்பிடலாம் வாங்கன்னு' சொல்லுங்க. Urs Christ Ma"
ha ha ha... டேய் kitchen cap முடி கொட்டாம சாப்பாடு போட use பண்ணுவாங்களே அதான! ஹ்ம்ம் எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாங்களோ!

Saai: அட அந்த கொடுமைய விட இத பாருங்க என் desk la?

"Mr.Saai இத நடிகர் சூர்யா குரலில் படிக்கவும்(நிச்சியமா இது பெருமை பட கூடிய விஷயம்). சரி இன்னைக்கு நீங்க முழுக்க விஜயகாந்த் டோன்லயே பேசணும். எங்களுக்கு தெரியும் நீங்க நல்லா மிமிக்ரி பண்ணுவீங்கன்னு. நம்ம HR கிட்ட போய் 'ஆத்தா எனக்கு மட்டும் சம்பளம் ஜாஸ்தியா கொடுங்க.. எனக்கு உங்ககிட்ட பிடிக்காத வார்த்த  appraisal' nu சொல்லுங்க. உங்கள் கிறிஸ்து தாய்"

ராஜேஷ்: பரவாலைங்க உங்களுக்கு வராததையா சொல்லிருக்காங்க! பண்ணுங்க. ஆனா HR வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி சொல்லிடுங்க. ஆத்தா ன்னு சொல்லும் போது கண்ணுல தண்ணி வச்சிக்கனும்ங்க!! 

Saai: சரி இன்னைக்கு என்ன ஸ்பெஷல் உங்கள் கீர்த்திக்கு! 

ராஜேஷ்: சொல்றேன் வாங்க! இது chirstmas flag. இன்னைக்கு கொடி ஏத்தி சாக்லேட் கொடுக்க சொல்ல போறேன். வாங்க நம்ம முருகன(ICARE boy) போய் பாப்போம். . எல்லாரும் பாக்குற மாறி இருக்கணும்.
(walking towards cafeteria)

முருகன்: சார் என்ன இன்னைக்கு! 

ராஜேஷ்: (விவரித்தான் என்ன செய்ய வேண்டுமென) சரி இதுக்கு ஒரு நல்லா இடம் வேணும் அதே போல இதுல இந்த eclairs சாக்லேட் போட்டு முடிச்சிடு!
கயுற இழுத்தா சாக்லேட் கொட்டனும்! 

முருகன்: விடுங்க சார் நான் பாத்துக்குறேன்! நம்ம reception ல இருந்து உள்ள வந்த உடனே தான் கலர் கலரா கொடி தொங்க விட்டுருக்காங்களே!

ராஜேஷ்: சபாஷ் டா முருகா! சரி நான் போய் அந்த receptionist கீட்ட சொல்லிடறேன்!  
(ராஜேஷ் receptionist மற்றும் security கிட்ட சொல்லிட்டு அப்படியே கீர்த்தி desk call பண்ணி வரசொல்ல சொன்னான். வந்தவுடன் இந்த சீட்டை கொடுத்திருங்க. நான் யார்ன்னு சொல்ல கூடாது என்று கூறிவிட்டு சென்றான்)

Note to Kirti from ur chirst ma
"எத்தனையோ சந்தோஷங்கள் அதில் கொடி ஏற்றும் போது நமக்கு சாக்லேட் கெடைக்குமான்னு தான் நாம அண்ணாந்து பார்த்தது உண்டு!! ஆனால் நாம் கொடி எற்றுவோமா என்று நமக்கு தெரியாது? இன்று நீ கொடியேற்றி உனக்கு கிடைக்கும் சாக்லேட் ஐ உன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்"

கீர்த்தி இன்று சிகப்பு வெள்ளை நிற சுடிதார். பெண்கள் என்றுமே சிகப்பு வெள்ளை ஆடையில் அழகுதான்!! அவளும் விதி விலக்கல்ல. அவள் புன்னகை,நடை,பாவனை எல்லா அழகான பெண்களை போல் தான். கொஞ்சம் maintenance charges ஜாஸ்தி ஆகும் போலன்னு ராஜேஷ் நினைத்து கொண்டான்.

கீர்த்திக்கு receptionla இருந்து அழைப்பு வந்தது. அங்கே அவர்கள் கொடுத்த சீட்டினை வாங்கினாள். அவளை அக்கணம் பார்த்தவனுக்கு தோன்றும் சில வார்த்தை கோர்வைகள் இங்கே....

பூரிக்கும் பெண்கள் ஆயிரம் மின்னலுக்கு சமமா! 
என்ன அவளும் சாதாரண பெண் தானே!
அவள் வெட்கமும் புருவ படபடப்புகளும்
கொஞ்சல் சிரிப்பும் கெஞ்சல் கேள்வியும்!
அடடா யாரையும் சிலிர்படையுமோ!

அவள் கொடி ஏற்றத்திற்கு தயார் ஆனால். சற்று விழி பிதுங்கி நின்றாள்! எங்கே அந்த கொடி என்று?. முருகன் உதவி புரிந்தான். மேடம் அங்கே உள்ளதென்று அப்படியே அனைவரையும் கூவி அழைத்தான் கொடி ஏற்றத்திற்கு தயார் ஆகுங்கள் என்று. ராஜேஷ் ஒரு ஓரத்தில் Kitchen Cap அணிந்து கொண்டு நின்றிந்தான். கீர்த்தி கொடி ஏற்ற ராஜேஷ் முதல் ஆளாய் கை தட்டி அனைவரையும் தட்ட வைத்தான். 

ஐயோ!! ஒரு இழுவையில் கொடி ஏற்ற படவில்லை.. ராஜேஷ் முருகனை முறைத்தான். முருகன் உடனே முதல்வருக்கு உதவி செய்யும் காவல் அதிகாரி போல் அவள் கயுரை தொட இவன் ஏற்றினான். சாக்லேட் மழை பொழிந்தது. அவள் ரசித்து முடித்து ஒவ்வொரு சாக்லேட் ஐ எடுத்து அருகில் இருந்தவர்களுடன் பகிர்ந்தாள். அப்பொழுது saai விஜயகாந்த் குரலில் "ஹே புள்ள எங்களுக்கு சாக்லேட் கெடையாதா!" என்றான்.அனைவரும் நகை ஆடினர். கீர்த்தி ஒரு சாக்லேட் சாய்க்கும் கொடுத்தாள் ராஜேஷை பார்த்து இளித்து விட்டு போனாள். ஏன் என்றால்? சாக்லேட் அவனுக்கு கொடுக்கலயே!!!(அது ஒரு விஷயமே இல்ல அவனுக்கு! ஆனா அவனுக்கு ஒரு சந்தேகம் ஒரு வேலை kitchen cap போட்டதுனால சிரிச்சி இருப்பாளோ!! பொண்ணுங்க எதுக்கு சிரிக்கிரங்கன்னு தெரியுமா என்ன????)

சில பல சிரிப்பு சத்தங்களுக்கு பிறகு அனைவரும் மீண்டும் தங்கள் பணியினை தொடர்ந்தனர்!! 

(சாய் ராஜேஷ் கிட்ட விஜயகாந்த் குரலில் "நமக்கு இன்னைக்கு வந்த டிக்கெட் கவுன்ட் ஆறு அதுல நான் பார்த்தது ரெண்டு நீ நாலு" என்றான். அப்படியே HR கிட்ட போய் அப்பரைசல் பத்தியும் பேசிட்டு வந்தான் வரவழில நேத்து கழுதையா கத்துன பொண்ணு இன்னைக்கு "யார் தச்ச சட்ட தாத்தா தச்ச சட்டன்னு" அவுங்க டீம்ல இருகரவுங்க கிட்ட தொடர்ச்சியா சொல்லி "யார் தத்த தட்ட தாத்தா சட்ச சட்டன்னு" ஒளரிட்டு இருந்துச்சு)

என்றும் போல் அவனின் வேலை சற்று அதிகமாய் இருந்தது. இதில் இந்த வாரம் சனி அன்று ஒரு நியூ installation அதற்க்கு தேவையான document preparation ல் ஈடுபட்டான்.

உறங்க மறுக்கும் கண்களை!
உளற மறுக்கும் வார்த்தைகளோடு
இரவே கடந்திடுவாய்!
உன்னை மீண்டும் நாளை சந்திக்கிறேன்!

தொடரும்....

2 comments:

  1. keerti ku azhagan(rajesh) yaarunu theriyuma? ...

    ReplyDelete
  2. ithu varaikkum theriyathu.. inimae therinjippa

    ReplyDelete