Monday, December 31, 2012

புத்தாண்டே பொலிவ்வாண்டே ரெண்டாயிரத்து பதிமூணாம் ஆண்டே!


புத்தாண்டே பொலிவ்வாண்டே ரெண்டாயிரத்து பதிமூணாம் ஆண்டே!

முதல் தவறு:
நல்ல வேலை நான் பள்ளியில் படிக்கவில்லை இல்லையென்றால் 
இன்னும் ஒரு மாதம் 2012 என்றே எழுதி,திருத்தி  2013 எழுதவேண்டும்.. 
ஆனால் காசோலை பூர்த்தி செய்யும் போது தவறானால் 
ஒரு காசோலை நஷ்டமெனக்கு....

முதல் சந்தோஷம்:
கோவிலுக்கு போய் திருநீறும் குங்குமமும் எடுத்து வர 
2012 தின நாள்காட்டிக்கு பஞ்சம் இருக்காது..
மத்த நாட்களில் கோவில் தூன்களில்யே கொட்டி விட்டு 
வரவேண்டியதாய் இருக்கும்..

முதல் முயற்சி:
போன வருஷம் செய்ய நெனச்சதை இந்த வருஷம் 
செய்ய நினைப்போம் இல்லாட்டி?? 
அதுக்கும் முன்னாடி வருஷம் செய்ய நெனச்சதயாவது 
செஞ்சு முடிப்போம் எப்புடியும் அது முதல் முயற்சிதான்!!

முதல் எதிர்பார்ப்பு:
போன வருஷம் 8 சதவிகிதம் 
இந்த வருஷம் ஒரு 16 சதவிகிதமா? இல்ல அதே 8? இல்ல 4?
ஹ்ம்ம் எது வருதோ அத வச்சி இந்த கம்பனியில் இருக்கலாமா வேணாமான்னு 
முடிவு பண்ண வேண்டியது தான்...

இப்படி கொஞ்சமும் போன ஆண்டை மறக்க முடியா முதல் விஷயங்கள்!

2012 நினைவிலே 2013 ஆண்டு நம் வாழ்விலே!
எடுத்துவைப்போம் வருவன எதிர்த்து நிற்ப்போம் நம் காலடியை!
சண்டை இல்லா? சச்சரவு இல்லா? 
உணர்வுகள் களங்கமில்லா? 
துயரங்கள் நூலில்லா? 
தூரங்கள் கணக்கில்லா? 
தீண்டாமை வன்கொடுமையில்லா?
பெண் கொடுமை செயல்களில்லா?
நட்பில் துரோகமில்லா?
காதலில் தோல்வியில்லா?

புதியதொரு ஆண்டு மகிழ்ச்சியுடன் மலரட்டும்!!!

வாழ்த்துக்களுடன்,
ரசல் 

No comments:

Post a Comment