Wednesday, June 19, 2013

தொழிற்சாலை

ஒரு கொத்தடிமைகளின் தொழிற்சாலை
முக்கால்வாசி தொழிலாளர்கள் சிகப்பு உடையில் 
மீதம் உள்ளவர்கள் வெள்ளை,பச்சை,மஞ்சள் என பகுதிவாரியாக 
வேலைக்கேற்ப உடை!



தொழிற்சாலையின் ஒவ்வொரு பகுதியும் 
அனைத்து நாள் அனைத்து நேரங்களிலும் 
இயங்கி கொண்டே இருக்க வேண்டும் 
சிலர் தூங்கும் நேரம் பலர் முழித்திருப்பர்!

தொழிற்சாலையின் ஒரு பகுதி காற்று சுத்திகரிப்பு நிலையம் 
வெள்ளை உடை அணிந்த அடிமைகள் மாசுபடர்ந்த காற்றில் இருந்து 
தூய்மையான உபயோகமுள்ள காற்றை மட்டும் 
பிரித்தெடுத்து மாசு காற்றை வெளியேற்ற வேண்டும்!

இன்னொரு பகுதி உணவு கட்டுப்பாடு மற்றும் மேம்பாடு 
சிகப்பு நிற அடிமைகள் வருகின்ற சரக்கில் இருந்து 
பிரித்தெடுத்து ஒவ்வொரு ஊட்டச்சத்தையும் கணக்கெடுத்து 
அதன் பின் ஏற்றுமதி செய்ய வேண்டும்!

சரக்குகள் ஒவ்வொரு நாளும் பல விதம் வந்தடையும்
ஏன் சில நாள் வராமலே போகலாம் 
வருவெதென்ன போவெதென்ன கணக்கிட்டு 
ஒவ்வொரு நாளும் ஓடிவிடும்!

தினம் உயரும் வியாபாரம் அதற்கேற்றார் போல் 
விஸ்தரிக்க படும் தொழிற்சாலை இது
பல அடிமைகள் மாண்டு போய் 
அதே இடத்தில் சமாதிகள் ஆன கதைகள் ஏராளம்!

நிர்வாகத்தின் பொறுப்பின்மை அள்ள அள்ள குறையாமல் 
கிடைத்த வருவாய்கள் போதாமல் 
நாளுக்கு நாள் குன்றி போக 
ஒரு நாள் சரக்குகளின் வரவு நின்று போனது!

சளைக்காத தொழிலாளர்கள் மீதம் உள்ளதை 
உட்கொண்டு மேலும் பல நாள் நிர்வாகத்தை 
நம்பிக்கையுடன் செயல் பட வைத்தாலும் 
அடிமைகளின் உயிர் பறிபோய் கொண்டேயிருந்தது!

இந்நிலையில் காற்று தொழிற்ச்சாலையில் 
புதிதாய் வந்த ஒரு கிருமி தாக்கி 
ஒட்டுமொத்த அடிமைகளையும் உயிர் வாங்க 
நிர்வாகமும் சேர்ந்தே மாண்டு போனது! 

நம் உடலின் பெரும்பகுதியே இந்த தொழிற்ச்சாலை 
கண்ணுக்கு தெரியாத அடிமைகளின் உணர்வுகள் இவை..
சிகப்பு நிற அடிமைகள் நம் ரத்த குழாய்களின் மூலம் ரத்தத்தை ஓட செய்து 
வெள்ளை நிற அடிமைகள் மூச்சுக்காற்றின் மாசு தீர்த்து 
தினம் உன்னை வாழ வைக்கும் மனித நிர்வாகமே!

இயற்கையின் மாசுபாட்டால் ஒரு நாள் உயிர் இழக்கும் நம் சமுகமே!

என்றும் அன்புடன்,
ரசல் 

No comments:

Post a Comment