Thursday, May 30, 2013

குட்டிப்புலி வேட்டை முடிவுகள்




மதுரையை அக்குவேர் ஆணிவேர் என கடைந்திருக்கும் இன்னுமொரு திரைப்படம் குட்டிப்புலி. அதாவது அடிதடி அருவாள் என பின்னணி. உறவுக்காக ஊருக்காக உயிர் கொடுக்கும் கடவுள்களின் அடித்தளம் அற்புதமாய் ஆரம்பம் பெயர் போடுவதற்க்கு முன்பு. பார்த்து சலித்த பல காட்சிகளின் ஒன்றுகூடலே இந்த திரைப்படம்.

சசிகுமார்க்கு இந்த திரைப்படம் சறுக்கள் தான். மாறுபட்ட கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருந்தாலும் கதை சொல்லிய விதத்தில் பெரிய ஏமாற்றம். முதல் ஆரம்பத்தில் இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல் காட்சிகள் நன்றாக இருக்கிறதே என்று நினைப்பதற்க்குள் அடுத்து அடுத்து இளையராஜா பாடல்கள் போட்டு இயக்குனர் நிறைய திட்டுக்கு ஆளாகிறார்.

சசிகுமார் டீமின் அதே பார்முலா இடைவேளையில் பதரவைத்து முடிவில் இன்னும் பதரவைப்பது இந்த படத்திலும் தொடர்கிறது. ஒரு வித்தியாசம் படத்தின் ஆரம்பமும் இடைவேளையும் முடிவும் பதறல்கள். இடையில் திரைக்கதை நீண்ட நேரம் வருவதால் தொய்வும் சலிப்புமே மிஞ்சுகிறது.

சரண்யா,சசிகுமார் மற்றும் சிலர்க்கு சபாஷ் என்று சொல்லும் அளவு நடிப்பு போட்டி. லக்ஷ்மி மேனன் மேக் அப் ஜாஸ்தி. காமெடிக்காக வரும் கனா காணும் காலங்கள் நாடகத்தில் வரும் கூட்டணி கிச்சு கிச்சு.

எப்படி தாய்குல தெய்வங்கள் உருவாகினர் என்று கூற ரெண்டரை மணி நேர படத்தை எப்படியும் திரையரங்கில் அல்லது திரைப்பட குழுவினரே இன்னும் சில நாளில் வெட்ட நேரிடும் அப்பொழுது படம் பார்க்க சிறப்பாகவும் அமையலாம். 

என்றும் அன்புடன்,
ரசல் 

No comments:

Post a Comment