Saturday, May 4, 2013

உழைப்பாளர்கள் தின தமிழ் திரைப்பட வரவு செலவு




என் கணிப்பு தப்பாமல் நான் பார்த்த மூணு நாள் மூணு படத்தோட வரிசையே எது நல்லா இருக்குன்னு தெரிஞ்சிடும்.

சூது கவ்வும் ல ஆரம்பிச்சி 
எதிர் நீச்சல் அடுத்ததா பார்த்து 
கடைசியா மூணு பேர் மூணு காதல் ல முடிஞ்சது.

சூது கவ்வும் - வரவு - இதுக்கு பேர் நல்வரவுன்னு கூட சொல்லலாம் 
-------------------------------------------------------------------------------------------------------------------
டைரக்டர் நலன் குறும்படங்கள் பார்த்த மக்களுக்கு எல்லாருக்கும் தெரியும், இது ஒரு காமெடி படமா தான் இருக்கும்னு. ஆனா எப்படி பட்ட காமெடி படம்ன்னு தெரியாதவங்க தயவு செய்து படத்த பார்த்துட்டு தெரிஞ்சிக்குங்க. படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதலாம்னு இரவே உக்கார்ந்தேன்,ஆனா சிரிச்சி சிரிச்சி தொண்டைல கீச் கீச் அப்புறம்  இருமல் மருந்து குடித்ததில் உறக்கம் வந்ததா? இல்லை இந்த குறும்பட இயக்குனரும் வெற்றி பெற்று விட்டார் என்ற சந்தோஷத்தில் உறக்கம் வந்ததா? என்று தெரியவில்லை உறங்கிவிட்டேன்.

திரைப்படங்களின் மசாலா பார்வைக்கு தேவை ஒரு பாவை அதாங்க ஒரு கதாநாயகி.அவங்களுக்கு என்ன வேலை சும்மா வந்து சும்மா போறது.அது தான் இங்க பிளஸ், சும்மா தான் வராங்க சும்மா தான் போறாங்க ஆனா போரடிக்கல. அப்புறம் வில்லனுக்கு என்ன வேலை டாய்............. ஒய்........ வரேண்டா... வெட்டுவண்டா.... அப்படிபட்ட வில்லன் கடைசி வரைக்கும் ஒரு வார்த்த பேசலைங்க, மொதல்ல அவர் வில்லனும் இல்லை போலீஸ் காரரா வர டெரர். அப்புறம் ஹீரோ யாருங்க? சத்தியமா சொல்றேன் இதுல விஜய் சேதுபதியும் நடிச்சிருக்கார் அவ்ளோதான் ஆனா ஹீரோ அவர் இல்லைங்க.  

இப்படி யாருமே இல்லாம ஒரு படம் பண்ண முடியுமா அதுவும் ரெண்டு மணிநேரத்துக்கு. அதுனால டைரக்டர் நலனை நல்வரவாய் திரையுலக கொண்டாட்டம் ஆரம்பிக்கட்டும்.

இங்க சந்தோஷ் நாராயணன் என்னமோ பண்றாப்ல.

எக்கு தப்பா 
தகரு டப்பா 
உருட்டி எடுப்பா 
எல்லாம் சேர்தடிப்பா 
டமுக்கடிக்கும் டியாலோ

மேலே கூறியவையும் அவரின் இசை அறிவிற்கும் சம்பந்தம் இல்லை ஆனால் இவை மகிழ்ச்சியில் எழுதிய வார்த்தைகள் அவ்வளவே. படம் முழுக்க உயிரோட்டம் பெறுவதும் பாடல்கள் என தெரியாமல் காட்சியை ரசிக்க வைக்கவும் உதவும் இவரின் இசை மிகவும் பாரட்ட பட வேண்டியவை. 

பத்திக்களின் மிகுதியால் சூது கவ்வும் திரைப்படத்திற்கு உழைத்த ஒளிபதிவாளர்,வசனகர்த்தா,எடிட்டர்,ஆர்ட் டைரக்டர் மற்றும் எல்லாரையும் வாழ்த்துகிறேன்.


எதிர்நீச்சல் - வரவு - கொஞ்சமா
-----------------------------------------------------
எதிர் பார்ப்புகள் எகிற வைத்த  திரைப்படம். தனுஷ் செலவு பண்ணி சிவகார்த்திகேயனுக்கு பேனர் அடிச்ச படம் இது. ஒரு படத்துல ரெண்டு கதை ஒன்னு ஹீரோக்கு வேற ஒன்னு சமுதாயத்துக்கு. ஒன்னு களாய்க்க இன்னொன்னு கழுவி ஊத்த(சமுதாயத்த மட்டும்). ரெண்டும் முடிச்சி போட்ட இடம் சுவாரசியம் இல்லாததால சலிப்பு தட்ட ஆரம்பிக்குது ரெண்டாம் பகுதியில. ஒலிம்பிக் தங்க மெடல் வாங்க தகுதி வாய்ந்தவர்கள் இருந்தும் அரசியல் பண்ணி உலக அரங்கில் ஏன் அவமான படுகிறோம் என்பதை சின்னதா பத்த வச்சிருக்கார் டைரக்டர் அதுக்கு ஒரு சபாஷ் ,ஆனா மொத்தத்தையும் சுமக்கற அளவுக்கு சிவகார்த்திகேயன் இன்னும் மக்களுக்கு பழக்கப்படல. அதுனால வலுவா நெனைச்ச ஸ்க்ரீன்ப்ளே அண்டர்ப்ளே பண்ணிடுச்சி.

ஆச்சர்யமா பார்த்தது அனிருத் இசை பாடல்கள் இனிமை கேட்பதற்கு மட்டுமே. படத்தில் பாடல்கள் திரையாக்கிய விதம் ஒன்லி சினிமாத்தனம் மற்றபடி ஒன்னும் இல்லை. மற்றபடி படத்தை ஒருமுறை பார்க்கலாம் சில சிரிப்புடனும் சில கைதட்டலுடன்.


மூணு பேர் மூணு காதல் - செலவு - அதுவும் தெண்ட செலவு  
------------------------------------------------------------------------------------------------------
மூணு பேர் - விமல்,சேரன்,அர்ஜுன் 
மூணு காதல் - மலையும் மலை சார்ந்த இடத்தில ஒன்னு, கடலும் கடல் சார்ந்த இடத்தில ஒன்னு,நிலமும் நிலம் சார்ந்த இடத்துல ஒன்னு.

கவிதையா இருக்க வேண்டிய இடத்தில் காதல் அடடா செம லைன். ஒன்னுத்துக்கும் ஒன்னுத்துக்கும் சம்பந்தம் இல்லை. கடசில ஒன்னுமே இல்லை. மூணு கதையில் சேரனின் கதை மட்டும் ஆறுதல் அதிலும் சேரன் நடிக்காமல் நம்ம  பானு(தாமிரபரணி நாயகி) உடம்பு மெலிதாகி படத்தில் கதாபாத்திரமாய் தெரிகிறார். மற்ற யாரும் சோபிக்க வில்லை. 

யுவனின் பாடல்கள் ரெண்டு அருமை மற்றவை ஜஸ்ட் லைக் தட் ஒண்ணுமில்லை. ஒளிபதிவாளர் போஜன் தினேஷ் சிறப்பாய் செய்திருந்தும் அதை ஒழுங்காய் இல்லாத கதை அமைப்பால் தெரியாமல் போய் விடுவார்.



என்றும் அன்புடன்,
ரசல் 

No comments:

Post a Comment