நான் கவிஞன் ஆனேன் என் முழு பொருள் அறிந்த பின்! தோல்விக்கு உரமிட்டேன் எழுத ஆரம்பித்தேன் என் எழுத்துக்கள் தோரணம் இட்டு படைப்புகள் உங்கள் முன்னால்!
Friday, April 17, 2026
தாய்க்கிழவி
உணர்வுபூர்வமான திருப்திகரமான படம். படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் நமக்கு செய்தி சொல்கிறார்கள்.
சிரிப்பு வரும் அழுகை வரும் அதை தாண்டி படம் நம்மை ஆட்கொள்ளும் விதமாக நான்கு காட்சிகள்.
ஆக்சிஜன் நிறுத்தும் காட்சியில் மொத்த கதையும் மாறி போகிறது. பாலா சரவணன் நடிப்பு அந்த இடத்தில் மற்றவரை காட்டிலும் ஒரு படி மேலே செல்கிறது.
டாக்டர் பேசும் வசனங்கள் செதுக்கியிருக்கிறார்கள்.
நாலு நாலா என்னப்பா போயிருச்சா கேட்ட குடிகாரன் இறந்து போய்விட்டான் என்ற குபீர். இறந்த கணவனின் புகைப்படம் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது இடத்திற்கு ஏற்றார் போல் ஒலிக்கும் கமல் பாடல்கள் பொருத்தம் ரசனை ரகம்.
ஒருவன் ஏன் திருமணத்திற்கு ஏங்குகிறான் என்ற பதிவு திருமணம் ஆகாத ஒவ்வொரு ஆணுக்கு மட்டுமே பொருந்தி போவதை தாண்டி அதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி கூறிய விதம் அழகு.
பத்து தலைமுறை தாண்டி தான் பெண்பிள்ளை படிக்க வருகிறாள் என்ற கருத்து கனகச்சிதம். பெண் யாரை சார்ந்தும் இருக்க கூடாது என்ற கருத்தை பல்லாங்குழியை வைத்து கூறிய விதம் படத்தை தூக்கி நிறுத்தியது.
மொத்தத்தில் மிக நீண்ட காலங்களுக்கு பிறகு ஒரு திருப்தியான படம்.
நன்றி சிவகுமார். முருகன் உங்களிடமே துணை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment