Tuesday, January 15, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா


கரும்பு தின்ன கூலி வேணுமா. 
சந்தானம்: ஆனா கரும்பு நீங்க காசு கொடுத்துதான் வாங்கணும்

வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்
சந்தானம்: பாத்துடா ரொம்ப வாய் விட்டு சிரிச்ச கொசு உள்ள போய்டும் 

ஆட தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்
பவர் ஸ்டார்: ஆட தெரியாதவனும் ஆடி பழகலாம். அதுக்கு பேரு பவர் டான்ஸ்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல 
பவர் ஸ்டார்: பவர்(மின்சாரம்) இல்லாத ஊருக்கு நிலா தான் வெளிச்சம். இந்த பவர் ஆல  ஊருக்கே வெளிச்சம்.

என்ன ஒரே பழமொழியும் பஞ்ச்யும். ஒன்னுமில்லைங்க பவர் ஸ்டார்ன்னு ஒருத்தர?? கேலி கூத்தா பாத்தவங்க கூட!! இப்போ கூட்டம் கூட்டமா "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படம் பாக்க போறாங்க. 

படம் ஆரம்பிக்கும் போதே பாக்கியராஜ்க்கு "இன்று போய் நாளை வா" படத்தின் மூல கருவுக்கு நன்றி என்று, அமைதியாய் கதை பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்து விட்டார்கள். ஆக  கதை பழையது ஆனாலும், படம் உங்களை சிரிக்க வைக்க இல்லை சிந்திக்கவே  விடாமல் சிரிக்க வைக்க மட்டுமே எடுக்க பட்டுள்ளது.

காட்சிகளும் கலோபரங்களும் கன்றாவிகளும்:
மூணு ஹீரோ  அறிமுக காட்சி ராவடி! அதிலும் பவர் ஸ்டார் மிரட்டல் அடி!!!
சந்தானம் பவர் ஸ்டார் ஜோடி பொருத்தம்- கவுண்டமணி செந்தில் சொப்பன சுந்தரி காமெடி போல
ஹீரோ ஹீரோயன் ஜோடி பொருத்தம் - இதுக்கு சந்தானமே ஹீரோவாகி இருக்கலாம் 
பாட்டு - திரைஅரங்கம்  அமைதியாய் இருந்த நிமிடங்கள் 
ஸ்டுண்ட் - பவர் ஸ்டார் மர்ம அடி! ஐயோ அம்மா முடியலடா(சிரிக்கிரேங்க)
சிம்பு- தேவையே இல்லாத நட்புக்காக காட்சிகள்- (குறுஞ்செய்தி- பவர் வர காட்சில இருக்குற கைதட்டல் கூட கேக்கல)

பெஸ்ட் காமெடி- 
பவர் டு சந்தானம்: நீ எப்பவுமே காமெடியன் தாண்டா...
சந்தானம் டு பவர் : நானாவது காமெடியன் தெரிஞ்சி காமெடி பண்றேன்,ஆனா நீ காமெடியன்நே  தெரியாம ஹீரோவா நடிச்சிட்டு இருக்க.......

வாழ்த்துக்கள் : சந்தானம் தயாரிப்பாளராக இருந்தாலும் மற்ற படத்தில் வரும் அதே சந்தானம் தான். கரிட்டு கரிட்டு(correct correct)  மிரட்டு மிரட்டு
.
ரெண்டு மணிநேரம் காசு கொடுத்து சிரிச்சிட்டு வாங்க. அதுக்கு தான் இந்த புது மொழியே "கண்ணா லட்டு தின்ன ஆசையா"




--
Yours,
Rasal

Monday, December 31, 2012

புத்தாண்டே பொலிவ்வாண்டே ரெண்டாயிரத்து பதிமூணாம் ஆண்டே!


புத்தாண்டே பொலிவ்வாண்டே ரெண்டாயிரத்து பதிமூணாம் ஆண்டே!

முதல் தவறு:
நல்ல வேலை நான் பள்ளியில் படிக்கவில்லை இல்லையென்றால் 
இன்னும் ஒரு மாதம் 2012 என்றே எழுதி,திருத்தி  2013 எழுதவேண்டும்.. 
ஆனால் காசோலை பூர்த்தி செய்யும் போது தவறானால் 
ஒரு காசோலை நஷ்டமெனக்கு....

முதல் சந்தோஷம்:
கோவிலுக்கு போய் திருநீறும் குங்குமமும் எடுத்து வர 
2012 தின நாள்காட்டிக்கு பஞ்சம் இருக்காது..
மத்த நாட்களில் கோவில் தூன்களில்யே கொட்டி விட்டு 
வரவேண்டியதாய் இருக்கும்..

முதல் முயற்சி:
போன வருஷம் செய்ய நெனச்சதை இந்த வருஷம் 
செய்ய நினைப்போம் இல்லாட்டி?? 
அதுக்கும் முன்னாடி வருஷம் செய்ய நெனச்சதயாவது 
செஞ்சு முடிப்போம் எப்புடியும் அது முதல் முயற்சிதான்!!

முதல் எதிர்பார்ப்பு:
போன வருஷம் 8 சதவிகிதம் 
இந்த வருஷம் ஒரு 16 சதவிகிதமா? இல்ல அதே 8? இல்ல 4?
ஹ்ம்ம் எது வருதோ அத வச்சி இந்த கம்பனியில் இருக்கலாமா வேணாமான்னு 
முடிவு பண்ண வேண்டியது தான்...

இப்படி கொஞ்சமும் போன ஆண்டை மறக்க முடியா முதல் விஷயங்கள்!

2012 நினைவிலே 2013 ஆண்டு நம் வாழ்விலே!
எடுத்துவைப்போம் வருவன எதிர்த்து நிற்ப்போம் நம் காலடியை!
சண்டை இல்லா? சச்சரவு இல்லா? 
உணர்வுகள் களங்கமில்லா? 
துயரங்கள் நூலில்லா? 
தூரங்கள் கணக்கில்லா? 
தீண்டாமை வன்கொடுமையில்லா?
பெண் கொடுமை செயல்களில்லா?
நட்பில் துரோகமில்லா?
காதலில் தோல்வியில்லா?

புதியதொரு ஆண்டு மகிழ்ச்சியுடன் மலரட்டும்!!!

வாழ்த்துக்களுடன்,
ரசல் 

Monday, December 17, 2012

மாற்றான்

இரண்டு மூன்று காட்சிகள் முடிந்த பின் மாற்றான் படத்தினை சூரியாவிர்க்காக பார்க்கணும், KV Anand technical treatment க்காக பார்க்கணும், ஒளிபதிவிர்க்காக பார்க்கணும்,இசை தான் சுமாராக இருக்கிறது,இரண்டாம் பாதி இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம், என விமர்சனங்களை கேட்டு உள்ளே போய் அமர்ந்தேன்.
First Half:
முதல் பதினைந்து நிமிடத்திற்குள் என் இரண்டு வரிசைகள் காலியாக இருந்தது,பிறகு ஒரு பெரிய குடும்பம் அந்த இருக்கைகளில் அமர்ந்தனர். ஒரு குழ்ந்தை சிணுங்கியது உடனே,அங்க பார்.. அங்க பார்... சூர்யா பார்... அந்த குழந்தையும் அமைதி காத்தது. சரி நான் என்ன செய்தேனா? முதல் பாதி என்னை எழுந்திருக்க விடவில்லை.. அத்தனை சுவாரசியம்.. அத்தனை மிகை படுத்தாத சூர்யாவின் நடிப்பு...அத்தனை கோணங்களில் ஒளிப்பதிவு..கதையின் மூலக்கரு.. உண்மையில் சூர்யா தன்னுடைய நான்கு தோள்பட்டையில் படத்தை தாங்கி நிற்கிறார்.
Interval:
ஒருவன்: என்ன மச்சி இப்படி ஆயிடிச்சி.. செம சீன் இல்ல அந்த roller coaster fight... இப்போ என்ன ஆகும் சொல்லு 
இன்னொருவன்: இப்போ கொஞ்சம் கொஞ்சமா எது உண்மைன்னு இந்த சூர்யா கண்டு பிடிப்பாரு.. 
டீ காரர்: டீ வேணுங்கிறவங்க இங்க வாங்க.. டீ சார்... டீ சார்..
(நான்:அவசரப்பட்டு கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிட்டனோ.. டீ வாங்கி இருக்கலாம்)
Second Half:
என் இருக்கை நன்றாக தான் இருந்தது.. ஆனால் இரண்டாம் பாதி ஆரம்பித்ததில் இருந்து, ஏதோ சரிக்கி கொண்டே போய் கொண்டிருந்தது. நான் எவ்ளோ நிமிர்ந்து உட்கார்ந்து இருந்தேனோ?படத்தில் இருந்த அணைத்து சுவாரசியமும் இழந்து... ஒரு வித சலிப்பு தன்மை வந்தது.. சரி ஆனது ஆச்சி கிளைமாக்ஸ் வரை பார்த்திட்டு போகலாம் என்று மேலும் சறுக்கி விளையாடும் விளையாட்டை விளையாடியே படத்தை கவனித்தேன். வாங்கி வந்த கூல் ட்ரிங்க்ஸ் குளிர்ச்சி தந்தது நல்ல வேலை டீ வாங்கல? ஒரு பாட்டு வந்திச்சி "கால் முளைத்து" அப்பாஆஆஆஆஆ ரஷ்யன் பாடல்....அட அட அட ஹரிஸ் ஜெயராஜ் சரக்கு தீந்து போச்சு போல..செதுக்கிட்டார், பாடல் முடிவில் சண்டை எதிர் பார்த்தது தான். அடுத்தது பர பர கிளைமாக்ஸ் படம் முடிந்தது. 
மக்கள் செய்தி:
தம்பி சூர்யா நல்லா நடிச்சிருந்திச்சி.. ஆனா போன படம் மாறி பாட்டெல்லாம் அவ்ளோ நல்லா இல்லை. சூர்யா காமெடி பண்ணவே இல்ல. எல்லாமே சூரியான்னு ஆனதுக்கு காரணம் ஒன்னே ஒன்னு சூர்யா ஒரு நல்ல கலைஞன் என்று பெயர் பெற்று விட்டதால்.இது வரிசையாய் மூன்றாவது படம் என்பது நினைவிருக்கட்டும்.

ரசல்: முடிவா என்ன சொல்ல?
படத்தில் வரும் இரண்டு சூர்யாக்களை வெட்டி எடுக்க தெரிந்த இயக்குனர்,இரண்டாம் பாதியை வெட்டி எடுக்க மறந்து விட்டார். 

பில்லா

பில்லா முதல் பாகத்தில் ராஜ்கண்ணன் எழுதிய வரிகளில் ஆரம்பிக்கிறது பில்லா இரண்டாம் பாகம். 
"டேய் என் வாழ்க்கையல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கனுதுடா..."
முதல் பாகத்திருக்கு எந்தவகையிலும் பங்கம் விளைவிக்காத இரண்டாம் பாகம் என்றே சொல்லலாம். இயக்குனர் சக்ரி மற்றும் உதவி கதை ஆசிரியர் எரிக் எழுதிய முழுக்க முழுக்க தமிழில் எடுக்க பட்ட ஆங்கில திரைக்கதை. படத்தில் லாஜிக் பார்த்தால் நான் தல ரசிகன் இல்லை. ஆனால் ஒரு ஆங்கில படமென்று பார்க்கும் போது முக்கால் வாசி இப்படி நடந்திருக்கும் என்று நினைப்போம் ,அதே பக்கத்தில் அமரும் நண்பர்கள் "டேய் அவனுக்கு என்ன டா ஆச்சி" என கேட்க்கும் போது "அவன காலி பண்ணிட்டான் டா" அப்படி நமக்கு புரிந்ததை சொல்லுவோம். இங்கும் அதே தான் நிகழ்வு தான். நீண்ட நாட்கள் பிறகு ஒரு முறையாவது படத்தின் வசனகர்த்தா ஈரா முருகன் மற்றும் ஜாபர் முருகன் வசனத்திற்காக பார்க்க வேண்டிய படம்.
"அகதிங்க தான அனாதைகள் இல்லையே"
"மத்தவங்க பயம் நமக்கு பலம்"
"கீழ ஒக்கந்திருபவனுக்கு தெரியாது எறங்கி வேல செய்றவனுக்கு தான் தெரியும்"
மற்ற வசனங்கள் முன்னோட்டதிலயே பார்த்துட்டு இருக்கோம். வில்லன் அறிமுக சடுன்ட் மிரள வைக்குது.  இப்போ வர படத்தில எதுல கதை இருக்கு ஒரு வரி கதையை எப்படி படமா எடுக்கிறாங்க என்பதை தான் தலை படத்தில் தலையை முன்னிறுத்தி 129 நிமிட படம். பாட்டெல்லாம் மூணு நிமிஷத்தில முடிஞ்சிருது. முக்கியமா பெயர் போடும் போது கூட வெறும் நிழற்படத்திலயே பில்லா ஏன் முரண் பாடனவன் என்று கூறியதை எத்தனை பேர் உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருந்தது ஆனால் அடுத்த காட்சிக்கு ஒட்டவில்லை என்ற குறை தான் மற்றவர்களுக்கு ஏனோ மொக்கை என்று தோனுகிறது என்று நினைக்கிறேன்.
என்னை பொறுத்த வரை தலை ரசிகனை தலைக்கு தலை வணங்குகிறேன் ஏன் என்றால் மிகவும் அழுத்தமான வசனங்களை அதற்கேற்ற உணர்ச்சியோடும் உச்சரிபோடும் பேசியதற்க்கு. மற்ற ரசிகர்கள் என்ன கூறினாலும் இந்த படமும் தலைக்கு மகுடம் தான்.

ரசிகனாய்
--
Yours,
Rasal

துப்பாக்கி விமர்சனம்

துப்பாக்கி விமர்சனம்

தீபாவளி சிறப்பு செய்திகள்:

ஏரியா முழுசா விடாம சரவெடி சத்தம்
அங்க ஒன்னு இங்க ஒண்ணுன்னு யானை வெடி சத்தம் 
அது வெடி சத்தமா இல்ல விசில் சத்தமான்னு தெரியல ஓயின்னு சத்தம்
இப்படி சத்தத்துக்கு நடுவுல...

திரை அரங்கம் இருக்கும் சாலைகளில் வீரிட்டு பறக்கும் வண்டி சத்தம்..... அட துப்பாக்கி படம் ஓடுற திரை அரங்கம் பக்கங்க...
கூட்ட நெரிசலை தடுக்க, ஆங்காங்கே காவல்துறை சிறப்பு முன்னேற்பாடுகளை செய்துள்ளனர்..

இனி என் சரவெடி:

இளைய தளபதி, டாக்டர் இன்னும் பல செல்ல பெயர்கள் இருந்தாலும், விஜய் என்னும் ஒருவரை சினிமாத்துறை ஒரு வளர்ந்த நடிகராய் தான் பார்க்க வேண்டும் என்று, இந்த வருடத்தில் இரண்டாவது படத்தை பதிவு செய்திருப்பதன் மூலம் மீண்டும் வெற்றி கண்டுள்ளார். ஆர்பாட்டம் இல்லாத தன்னுடைய இயல்பான நடிப்பில் என்னை போல் அஜித் ரசிகர்களையும் கவர வைக்கும் ஒரு கதாபாத்திரமா இல்லை கனவுப்பாத்திரமா என்பதை விஜய் தான் சொல்லவேண்டும். 52 படங்களில் இல்லாத ஒரு புதிய விஜய் திரை அரங்கம் சென்று பார்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

விஜயை ஆங்கிலம் ஹிந்தி தமிழ் மூன்று மொழிகளில் பேசுவதன் மூலமும், உடம்பை முறுக்கேற்றி காட்டுவது மட்டும் இல்லாமல், larger than life hero வாக காட்டாமல், intelligent wing army man என்று சாதாரணமாய் ஒரே காட்சியில் இந்த படம் வேற மாறி என்று ஆச்சரிய படுத்தி உள்ளார்  AR MURGADASS. ஏழாம் அறிவில் சொதப்பிய திரைகதையை இந்த துப்பாக்கியில் (ARM Reloaded) ஒவ்வொரு குண்டாய் படம் பார்பவர்களை சுடுகிறார். அதுக்காக படத்தில் இப்படி தான் துப்பாக்கி எடுத்துட்டு சுடுவாரான்னு கேட்டா? அதுவும் இல்ல!!! முழுக்க முழுக்க ஹீரோ என்பவர் மற்றவர்கள் இல்லாமல் ஜொலிக்க முடியாது  அவர்கள் உதவியுடன் தான் படத்தின் இறுதியில் வெல்கிறார். இதுக்காக டைரக்டர் க்கு பாராட்டுகள்.

இந்த படத்தின் ரியல் ஹீரோ திரைக்கு பின்னால் நமக்காக ஒளிபதிவு செய்த சந்தோஷ் சிவன். இந்த படத்த DVD ல பாக்கறதா இருந்தா கூட தயவு செஞ்சு ஒரிஜினல் சிடி வந்தப்புறம் பாருங்க. இந்த அளவுக்கு எந்த ஒரு மசாலா(CLASS) படத்தோட originality பார்க்க முடியாது.பாடல்கள் எடுத்த விதம் இல்ல முழு படத்த எடுத்த விதமும் நம் தமிழ்க்கு புதுசு. (One Standing Ovation for Santhosh Sivan)

படத்துல இன்னொரு முக்கிய நபர் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். சும்மா மாஸ் ரசிகர்களுக்கு தேவையான அத்தனை ஓட்டிங் அண்ட் கட்டிங். சபாஷ் ஸ்ரீகர் பிரசாத்.

சில புஸ் ஆன வெடிகள்:
* ஹரிஸ் ஜெயராஜ் வீட்ல சீக்கிரமே ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து கல் அடிக்க போவாங்கன்னு நெனக்கிறேன். அந்த அளவுக்கு trailer ல வந்த மியூசிக் மட்டும் வச்சிக்கிட்டு வண்டி ஓட்டலம்ன்னு பார்கறார். 

* பாட்டு போன படத்தோட இந்த படத்துல  நல்லா இருந்துச்சி, ஆனா படத்தோட சுவாரசியத்த கெடுக்கறதும் அதுதான். டைரக்டர்!!! பாட்டு இல்லாம படம் கொடுக்கற trend வந்திருச்சி கொஞ்சம் நீங்களும் திருந்துங்க.

* காஜல் அகர்வால் ஸ்வீட் தான் ஆனா என்னவோ சுகமா இல்ல.

புதுசா ஒரு வெடி:
* வெண்ணிலவை பாட்டு மொத்தம் அஞ்சு நிமிஷம் ஆனா படத்துல ஒன்ற நிமிஷம் அந்த அளவுக்கு சிறப்பான எடிட்டிங். அந்த பாட்டு தேவையே இல்ல இருந்தாலும் சந்தோஷ் சிவனுக்காக பாட்ட சுருக்க சொன்ன டைரக்டர்க்கு பாராட்டுகள்.


அப்புறம் இந்த தீபாவளி எப்படி போச்சு?
ஆக மொத்தம் படம் நல்லா இருந்துச்சி கொஞ்சம் புஸ்சான வெடிகளை தவிர்த்து. லாஜிக் பாக்கறவங்க கொஞ்சம் தள்ளி நின்னு வெடியை வேடிக்க பாருங்க. சில நேரம் தூரத்துல வெடிக்கற அவுட் மாறி அழகா இருக்கும்.

சாட்டை

சாட்டை 
பிரபு சாலமன் தயாரிப்பில் எம்.அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனியின் நடிப்பில் வசனம் எனும் சாட்டையால் அரசு பள்ளிகளின் ஆசிரியர்களை அடி விளாசி இருக்கும் படைப்பு. 
பராசக்திக்கு பின் மிக நீண்ட வசனமான 
"கடைகோடியில இருக்குற ஆதிவாசி மகன்ல  இருந்து பணக்கார பசங்க வரைக்கும் ஏற்ற தாழ்வு இருக்க கூடாதுன்னு schools la uniform கொடுத்திருக்காங்க அவங்கள rank படி ஒக்கராம பிடிச்ச இடத்துல உக்கார சொன்னேன் அது தப்பா...
வீட்டுக்குள் ஒரு பள்ளி வேணும் பள்ளிக்குள் ஒரு வீடு வேனும்னுன்றதுக்காக வாத்தியார் வர வர வரைக்கும் நிக்க வேணாம் ஒக்கார சொன்னேன்...
கடவுள் மனுஷனுக்கு கொடுத்த வாரம் பேச்சு பேசாம இருந்தா கெட்டு போயடுவீங்கன்னு பசங்களும் பொண்ணுகளும் பேசுங்கன்னு சொன்னேன் ஏன் அத விட jail பெருசுன்னு நெனக்க கூடாதுன்னு..."
அது ஒரு ரெண்டு நிமிஷ வசனம் அதுக்கே இயக்குனரை ஆற தழுவி வாழ்த்தனும். இப்படி படம் நெடுக்க கைதட்டல் வசனங்கள் திரை அரங்கில். கடைசியாய் "ஏணியை கூரை மீது போடாதீர்கள் வானத்தை நோக்கி போடுங்கள்" என்று முடியும் போது சமீப காலங்களில் சண்டை காட்சிகளில் வராத மயிர் கூச்செறியும் சம்பவமும் நடந்தது. 
சினிமாத்தனம் இல்லாமல் படத்தை ரெண்டு மணிநேரம் கொண்டு போக முடியாது அதற்க்கு இந்த படமும் விதி விலக்கல்ல. ஆனால் அதையும் மீறி படத்தை ஒரு மாணவனாய் பார்த்தால் ஒரு ரகம் ஆசிரியராய் பார்த்தால் பல ரகம். சமுத்திரகனி தயாளன் ஆசிரியராய் வாழ்ந்து என் பல முன் மாதிரி ஆசிரியர்களை நினைவு கூர்ந்தார். 
அன்பழகன் நீங்க நல்லா வளரனும்....ஆல் தி பெஸ்ட்.....

ரொட்டி!! (ஒரு திகில் கதை)


ரொட்டி!! (ஒரு திகில் கதை)
இதை நான் ஒரு திகிலுடன் தான் எழுதுகிறேன்.
இரு சிறுவர்கள் பேசி கொண்டிருந்தார்கள்! அதில் ஒருவன் மட்டுமே அந்த சம்பவத்தை விவரிக்க! இன்னொருவன் உற்று கேட்டு கொண்டிருந்தான். அதாவது முந்தைய நாள்.....................................................................................

தன் தந்தையுடன் அருகில் இருக்கும் ரொட்டி கடைக்கு சென்றிருந்தான்.அங்கு வித விதமான ரொட்டிகளின் வடிவங்களை பார்த்த அவனுக்கு ஒரு ரொட்டி தோற்றம் சற்று வித்தியாசமாக இருந்திருக்கிறது.அதை வாங்குமாறு தந்தையிடமும், கடைக்காரனிடம் எடுத்து தருமாறு கேட்டான். அப்போது அந்த கடைகாருக்கு வேர்த்திருக்கிறது சற்றும் பதறிய வார்த்தைகளோடு உளற ஆரம்பித்திருக்கிறான். தன் தந்தை தன்னை அங்கு இருக்கும் உட்காரும் இடத்தில அமர்ந்திருக்குமாறு சொல்லி இருக்கிறார்...........................

தன் தந்தையும் அந்த கடைகாரரும் கடைக்கு வெளியில் சென்று பேசி இருக்கிறார்கள். அதை பார்த்தால் அது ஒரு ஏதோ  குலைநடுங்கும் சம்பவம் போல பேசிகொண்டிருந்தார்கள். சற்று நேரம் கழித்து உள்ளே வந்த அவன் தந்தை, அவனை வேக வேகமாய் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். தன்னிடமும் அவன் தாயிடமும் இனி அந்த கடைக்கு போக வேண்டாம் என்றார். அவனுக்குள் இருந்த அச்சம் களைந்து அவன் தந்தையிடம் ஏன் என்று வினவி இருக்கிறான். அதற்க்கு அவன் தந்தையும் சற்று குழம்பிய வார்த்தைகளோடு...................

அங்கு பேய் இருக்கிறது நீ பார்த்த அந்த ரொட்டி, அந்த வடிவில் இல்லை போலும் செய்யும் போது . ஆனால் அது தினமும் ஒவ்வொரு இடத்தில கடித்து வைக்க பட்டது போல் காட்சி அளிக்கிறது. அதனால் தான் அந்த கடைக்காரர் தனியே என்னை வெளியே கொண்டு சென்று விளக்கினார். நாம் இனிமே அந்த கடைக்கு போக கூடாது  சரியா என்று கூறி இருக்கிறார்..............................

அடுத்த நாள் ஸ்கூல் பஸ் போகும் வழியில் கடையை எட்டி பார்த்திருக்கிறான் அங்கு கடை மூட பட்டிருக்கிறது. வெளியே மந்திரித்து கட்டிய எலுமிச்சை பச்சை மிளகாய் தெரிந்தது என்று அந்த சிறுவன் கூறி முடித்தான். அந்த இன்னொரு சிறுவன் உண்மையாவா டா!! டேய் பயமா இருக்கு டா..............

PIZZA(A thrilling Food without need of seasoning(Brand Actors) and appetizers(Brand Producers & Distributors))
மேலே கூறியவையும்  இந்த pizza படத்திற்கும் ஒரே ஒரு சம்மந்தம் உண்டு அது திகில்!! திகில்!! திகில்!!  திகில்லை தவிர்த்து வேர் எதுவும் இல்லை.  இதில் முக்கிய பாராட்டுக்கள் cameraman  தோளில் தன்னுடைய கனவுகளை திரைக்கதை எனும்  திறனால் ஒரு இரண்டு மணி நேர திகிலை ஏற்படுத்திய கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தின் இரண்டாம் நாயகன் இசை,திகில்லிர்க்கு தேவையான அத்தனை நுண்ணிய பயமுர்த்தும் இசை அது.முதல் முறையாக காட்சிகளையும் வசனத்தையும் தெரிவிக்காமல் எழுத வேண்டிய விமர்சனம் இது. அப்படி எழுதி விட்டால் அதுவே படத்திற்கு spoils-pot ஆகி விடும். அதனால் இந்த படத்தில் தெரிவிக்க மறந்த ஒரு  கருத்தை மட்டும் எழுதுகிறேன் "தயவு செய்து இந்த படத்தின் முடிவை யாரிடமும் கூற வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்"

Climax of ரொட்டி(ஒரு திகில் கதை)
மனைவி : ஏங்க பையன் கிட்ட சொன்னீங்க? அவனுக்கு என்ன புரியும்.
கணவன்: நான் அவனிடம் உண்மையை கூறவில்லை. அங்கு பேய் இருப்பதாய் அவனை மிரட்டி இருக்கிறேன். அதனால் அவனாக அங்கு செல்ல மாட்டான். அதனால் தான் எலி கடித்த அந்த ரொட்டியை வேண்டும் என்று அடம் பிடிக்கவில்லை. நாளை அந்த கடை சீல் வைக்க பட்டிருக்கும் சுகாதார துறையால்.
மனைவி: நல்ல வேலை என்கிட்ட  நீங்க சொல்லல அந்த கதையை!!! இல்லாவிட்டால் இந்த ஏரியாவே அந்த கடைக்கு போகும் போது பயந்திருக்கும். நான் ஒரு ஓட்ட வாய் பாருங்க.....