Monday, January 18, 2010

கல்மரங்கள்(Fossil Wood)

கல்மரங்கள் தேசிய பூங்கா - திருவக்கரை, தமிழ்நாடு




இங்கு தான் இரண்டு கோடி ஆண்டுகள் முன் திருவக்கரையில் இந்த கல்மரங்கள் கொண்டு வரப்பட்டதாக அறியப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்த திருவக்கரை இது தமிழ்நாட்டின் பகுதியாகும். இங்கு சந்திரசேகரர் ஆலயம் பிரசித்தி பெற்றது. ஆலயம் வழிபடும் மக்களே பெரும்பாலும் கல்மரங்கள் பூங்காவிற்கு வருகை தருகிறார்கள். இதன் சிறப்பை சில மாதங்கள் முன்னர் National Geography channel தொகுபாலர்களால் மக்களின் பார்வைக்கு நேரம் ஒதுக்க பட்டிருக்கிறது.


ஒரு சில உறுத்தல்கள்:
* பராமரிக்க படவேண்டும் பூங்காவை சுற்றி காடுகள் இருக்கலாம் பூங்காவே காடை காட்சி அளிக்கிறது.
* ஏன் கல்மரங்கள் இங்கே பூங்காவாக மாற்றப்பட்டன, அறிவியல் கூற ஆட்களும் இல்லை வரலாறு கூற அறிவிப்பு பலகைகளும் இல்லை.
* பாதுகாப்பு இந்த அறிய கல்மரங்களுக்கு இல்லை வருபவர்கள் எல்லாம் கல்லை உடைத்து எடுத்து சென்றால் இன்னும் சில ஆண்டுகளில் அறிவிப்பு பலகை மட்டும் தான் மிஞ்சும்.
உங்கள் பார்வைக்கு கல்மரங்களின் புகைப்படங்கள்:







Monday, January 11, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்! கண்மணியே!

திக்கு திசை மாறி காற்றில் பறந்து வந்த வண்ணத்துபூச்சி நீ
உன்னுடய வண்ணங்கள் தான் எத்தனை
வண்ணங்கள் யாவும் உன்னுடைய எண்ணங்கள் தானே
திசை மாறி வந்தாலும் உன் இருப்பிடம் நோக்கி தானே வந்தாய்!

நானும் ஒரு வண்ணத்துபூச்சி தான் நிறம் ஒன்று தான்
எண்ணங்கள் வேறு காற்றோடும் திசையில் எதிர் நோக்கி பயணங்கள்
கிடைக்கும் மரங்களில் இளைப்பாறி என் குறிக்கோளை நோக்கி
என் குறிகோளும் நீ இருக்கும் இடத்தை தேடி தான்!

திக்கு முக்காடி போனேன் உன் இடம் அடைந்த பின்
உன் குரல் மட்டும் அறிந்து உன்னை காணாமல்
நீ தான் என் தேடல் என்றும் உணராமல்
மரக்கிளையில் இருக்கும் வேறு வன்னதுபூச்சியை கண்டு!

உன் என்னனங்கள் உன் குரலில் பிரதிபலித்திட
உன் வண்ணங்கள் யாதென்று உணர்ந்தேன்
என் எண்ணங்களோடு உன் குரல் வண்ணங்களில் இணைந்தேன்
தேடல் நீஎன்றும் உணர்ந்தேன்!

சிறகடிக்கும் உன்னோடு ஒரு நாள் சந்திப்பு
மனம் துடிக்கும் அதை இன்றும் நினைத்து.........

வினா கேட்கும் உன் குரலை கேட்டு
கண்டேன் கனவுகள் உன் குழலை தொட்டு!

குரலும் இனிமையானது என் கவிதையும் அழகானது
நீயே பொருளான போது!
உன் பிறந்த நாளை கொண்டாட நானில்லை உன்னோடு இன்று
ஆனால் என் எண்ணங்கள் உன் கருத்தோடு
உயிர் பொருளாய் நான் இல்லை உன்னருகில் ஆனால் உணர்பொருளாய் உன்னுள்ளே!!

உயிர் கொடு இந்த கவிதைக்கு
நீ முத்தமிட்டால் உணர்ச்சிபெரும்!
அரவணைத்தால் உயிர்பெறும் கண்மணியே!!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Sunday, November 15, 2009

இயற்கை அன்னை


இயற்கை அன்னை என்னை அழைக்கிறாள் தன்னுடனே இருந்து விடவே!
என்ன ஒரு சுயநலம் அவளுக்கு!
என்னை யாரும் அழைக்கவும் கூடாது என்று!!
என் கைபேசி அலைவரிசையை துண்டித்து விட்டால்!!
ஆனால் என்னக்காக என் உறவுகள் காத்திருக்கின்றனர்!
உன்னோடு ஒரு நாள் இருந்த நினைவுகள் புகைப்படங்களாய் என்னிடத்தில்!
அதை என் உறவுகளும் ரசித்திடுவர் நீயோ சுயநலவாதி!
நான் நினைத்து பார்க்க முடியாத அழகை எனகளித்து!!
வீடு திரும்பும் போது அவர்கள் அழைத்தாள் உன்னை மறந்திடுவேன்
என் கைபேசி அலைவரிசை கிடைத்த உடன்!!

முடிவு என்றுமே சுபமே


எழுத்துக்கள் தோரணம் கட்டின
உன் மனம் தேறும் என்றே!!

சுற்றம் நம்மை இகழ்திடுமோ உன் செயல் என்னை
பாதித்திடுமோ இன்றுன்னை தந்தை இகழ்ந்தாலும்....
சேர்ந்திடுவோம் நாமே பல இன்னல்களை கடந்து.....

பாச போராட்டம் நாளும் உனக்குள்ளே
நேசம் பெருகிடும் நமக்குள்ளே
இந்த இன்னலிலே....

கணம் பெருகிடும் உன் கண்ணீர் துளியும் உரமானது
என் நெஞ்சும் சற்றே ஈரமானது!!

உளம் நிறைய ஆசைகள் பெருக்கி தொண்டை குழியில்
சிக்கி தவிக்கும் வார்த்தைகள் கூட தண்ணீர் மறுக்கும்
நீ என்னை ஏங்கி அழுதாளே!!

கவலை நிறைந்த வாழ்க்கை இல்லை என்றும்
ஆவலை கூட்டிய சூழ்நிலைகள் தான் இன்றும்
உனக்குள்ளே நீ பூட்டிய வார்த்தைகள் சிலிர்படையும்
என்னிடம் பகிர்ந்தாலே!!

தட்டுதடுமாறி முடிவுகள் எடுப்பவர்கள் இல்லை நாம்
விட்டு போகும் என்றும் நாம் ஆரம்பிக்கவில்லை
சேர்ந்து வாழ்வோம் என்ற உணர்வை மட்டும் நம்பி
நம் காதலில் முதற் படி தாண்டினோம்!!

நடந்தவை யாவும் ஆரம்பமே நினைவுகொள் நாளும்
முடிவு என்றுமே சுபமே!!

Wednesday, September 23, 2009

கனவுகள் என் முன்னே கானல் நீராய்!!

ஒரு மஞ்சள் வெயில் ஆளம் விழும் மரத்தடியில்!
இளைப்பாற நின்றிருந்தேன் ஒரு பூங்குயில் குரல் கேட்டது!
தேடினேன்.... கனவை கலைத்து.... தேடினேன்.....
அது என் கைபேசியின் அழைப்பு இசை என்று சற்றுனர்தேன்!

குரலெடுத்து பேசுவதற்குள் வந்தது தேனிசை இல்லை?
உறவானவளின்...
இதழ் மடிப்பில் என் பெயர் உச்சரிப்பை அலை வரிசை தாண்டி வந்ததென்ன இதழிசை தானே!

பேசும் வார்த்தைகள் உதட்டளவில் பிம்பங்கள் மனதலையில்!
உறங்கிய போதும் சிலிர்ப்படையும் நுண்ணுயிர்கள்!
தடுமாறியும் வார்த்தைகள் அழகானது உன் கேள்விக்கு பதிலானது!

விடியலாய் இருந்தால் அதிகாலை தேநீர் என்றிர்க்கலாம்!!
மின்மினி பூச்சும் உறங்கிடும் நாம் உறங்கவில்லையே!!
அழைப்பை துண்டித்த பின்!

புரண்டேன் பின்பங்கள் மீண்டும் மனதில் கணவாய்!
குழந்தையாய் சிரித்தே உறங்கினேன்!
விடியலுக்காக.. காத்திருந்தேன்...

தேனிர்க்காக அல்ல உனக்கு விடியல் வணக்கம் கூற மீண்டும் கனவு காண!அதிகாலை கனவும் பலிக்குமே அன்று உன்னை சந்தித்தால்!!

கனவுகள் என் முன்னே கானல் நீராய்!!
வெகுதொலைவில் நீயும் நானும்....
அழைப்பு மணியை எதிர் பார்த்தே இன்னும் சில காலம்!
சந்திப்போம் இன்னும் சில மாதங்களில் என்ற நம்பிக்கையில்!
நாட்பொழுதை கடக்கும் காதலனாய்!
நொடிபொழுதை கடக்கும் காதலியாய்!
வென்றிடுவோம் நம் காதலை!

Monday, May 18, 2009

சுதந்திரமே எழுந்து வா முள்வேலிக்குள் இருந்து!!!

நாட்களை எண்ணி பயன் என்ன உன் நலமரியா வினாடிகள் எத்தனை?

முள்வேலிக்குள் அமர்ந்து சுற்றி வரும் செய்தி அறியாமல் உன் கால் படும் நாள் எண்ணி நிலமும் அழதொடுங்கும்!

உள்ளுணர்வு உனக்காக தான் வாடுகிறது உன் ஆர்வமான பேச்சை கேட்க!

என் செய் சந்தர்ப்ப சூழல்களே இறையாண்மை வெற்றி பெரும் ஜனநாயகம் தோல்வி யுறும்!

தமிழுணர்வு பணத்திற்கு வாக்களிக்க அங்கே ஒரு தமிழன் அழிகிறான்!

சுதந்திரமே எழுந்து வா முள்வேலிக்குள் இருந்து!

உணர்வுள்ள கடைசி தமிழன் இருக்கும் வரை பொறுத்திருந்தால்!

பண நாயக இந்தியாவில் நீ வகுப்பு பாடமாய் அதிலும் தேர்வுக்கு கேட்கப்படாத கேள்வியாய் உனக்கான போராட்டங்கள்!!

Monday, April 27, 2009

கனவாகிய பொழுதுகள் உறவாடிய நெஞ்சங்கள்

கனவாகிய பொழுதுகள் உறவாடிய நெஞ்சங்கள் !
உணர்வுகள் ஒன்றுபட உரிமைகள் பறிக்கப்பட்டனவே!
புரட்சிகள் வெடித்எழவே சுதந்திரம் அருகாமையில்!
இனவெறிகள் பற்றி எழவே துப்பாக்கிகுண்டுகள் தீ அனைதனவே!
பேச்சுவார்த்தைகள் சுமுக தீர்வு கானல் முயற்சிகள் தோல்வி பெற!
இனபோராளிகள் துரோகியாக நயவஞ்சகர்கள் கூடதிள்ளே கொல்லப்பட்டும் தேதி அறியா ஆடுகளாய்!
மொழிபோர் வேந்தர்கள் அரசியலுக்கு தீனியிட்டு பல அரசாங்கத்தின் கூட்டு முயற்சியில் சிதையும் தமிழீழமே?
குடும்ப அரசியலில் பக்சே கலைஞர் மற்றும் காந்தி வெற்றி பெரும் போது!
சார்லஸ் அண்டோநீயின் சீற்றதிர்காக காத்திரும் உலகமே!!!!
அபாய மணிகள் உங்களால் அடிக்கப்பட்டது அழிவுகள் இனி உங்களுக்கே!
அன்று கனவாகிய பொழுதுகள் நனவாகி உறவாடிய நெஞ்சங்கள் கண்ணீர் துடைக்கப்படும்!!

வெல்க தமிழீழம்!!!