ஊரடங்கி..ஊரடங்கி.. இரண்டு ஆண்டாக நல்லது! கெட்டது! உற்றார்! உறவினர்! நண்பர்களை கூட பார்க்காமல் கடந்து சென்ற காலம் இப்போது மாறிவிட்டது. பிப்ரவரி இரண்டாம் வாரம் முதல் மார்ச் முதல் வாரம் வரை தொடர் விழாக்களும் விசேஷங்களும் வந்து மனதினை புத்துணர்வாகியது.
நான் கவிஞன் ஆனேன் என் முழு பொருள் அறிந்த பின்! தோல்விக்கு உரமிட்டேன் எழுத ஆரம்பித்தேன் என் எழுத்துக்கள் தோரணம் இட்டு படைப்புகள் உங்கள் முன்னால்!
Friday, April 1, 2022
ஊரடங்கி..ஊரடங்கி..
நிகழ்வு 1:
அன்பு தம்பியாகவும் நண்பராகவும் இருந்த விக்னேஷ் திருமணம் காரைக்குடியில் இருந்து 20கிமீ தொலைவில் உள்ள கீழாநிலக்கோட்டையில் திருமணம் மற்றும் வரவேற்பு.கல்யாணமாம் கல்யாணம் தடபுடலா கல்யாணம் அற்புதமான உணவு மற்றும் பரிமாறும் அன்புள்ளம் கொண்டவர்கள். முதல் முறையாக பழக்கம் இல்லாத ரோடுகளில் கார் ஒட்டி சென்ற அனுபவமும் புதுமை.
நிகழ்வு 2:
அன்பு மகள் ஸ்பூர்த்திக்கு முதல் பிறந்தநாள் கொண்டாட்டம். சென்ற வருடம் புது மனை புகு விழாவை போல் அதிக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லாமல் கொண்டாடினாலும் அன்பும் மகிழ்ச்சியும் அது அளவிட முடியாது.
நிகழ்வு 3:
விருதுநகர் சென்று குல தெய்வ வழிபாட்டில் மகள் ஸ்பூர்த்திக்கு காதுகுத்தும் மொட்டை அடித்தலும் ஒன்று சேர கிடா சோறும் இரண்டு வருடம் சந்திக்காமல் இருந்த உறவினர்கள் உரையாடல்கள் என ஏக போகமாய் இனிதே முடிவடைந்தது.
விருதுநகர் வந்து மாரியம்மன் தரிசனம், சித்தி சித்தப்பா அண்ணன் மதனி தம்பி மாமா பெரியம்மா அக்கா குழந்தைகள் என அனைவரையும் கண்டு உரையாடியதே உள்ளத்தில் புது சந்தோஷத்தையும் அன்பையும் துளிர செய்தது.
ரெண்டு வருடம் சுவைக்காத பண்டங்கள் அட டா ஒவ்வொன்றும் ஒரு ரகம். மகேஷ் பேக்கரி பிளம் கேக்கும் மில்க் ரோல், இருட்டு கடை அல்வா,சேவு காரம்.
எங்கும் இன்பமயம்...
ஆன்மீகம்
மார்ச் மாதம் #ஆன்மீக மாதமாய் மாறியது. முதலில் இரண்டு வருடமாக வெளி ஊருக்கு செல்லாமல் இருந்து சிவராத்திரி அன்று எங்கள் #குராயூர் #திருவேட்டை #அய்யனார் குலதெய்வத்திற்க்கு அங்காளி பங்காளி கிடா வெட்டு சாமி கும்பிடும் அழைப்பு வந்தது. அதோடு என் மகளுக்கு காதுகுத்தி மொட்டை போட்டு கும்பிட்டு வந்தோம். #விருதுநகர் #மாரியம்மனையும் கும்பிட்டு வந்தோம் அந்த பயணத்தில். இடையில் மகள் நட்சத்திர பிறந்த நாளுக்கு #திருச்சி #கருமண்டபம் #ராஜராஜேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தோம்.
இன்று காலை மூன்று நான்கு ஆண்டுகளுக்கு பிறகு #கருடனை பார்தேன்....
தொடரும்!!
--
Yours,
Rasal
Rasal
Wednesday, February 3, 2016
இறுதிச்சுற்று
ஒரு கதை எழுதப்படும் போதே அதன் கிளைமாக்ஸ் எல்லா விதமான கதையின் போக்கிற்கும் கதாபாத்திரங்களின் நிகழ்வுகளுக்கும் முடிவாய் கூறி நிறைவு படுத்தவேண்டும். அதுபோல் இந்த படத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு குத்துச்சண்டை இறுதிச்சுற்று விடையளித்தால் எப்படி இருக்கும் அது இந்த திரைபடத்தின் வெற்றியே. அதனால் தான் தலைப்பும் இறுதிச்சுற்று என்று வைத்து விருந்து படைத்திருக்கிறார் சுதா கோங்கரா.
பெண்கள் குத்துச்சண்டை கதை என்பதால் மட்டுமல்லாமல் எல்லா விளையாட்டு துறையிலும் நடக்கும் உட்கட்ட உச்சகட்ட அரசியலை தோலுரித்து தான் காட்டுகிறது அதுவும் கதை நகரும் வேகத்திலயே. குத்துச்சண்டை தெரிந்த பெண்ணையே நடிகையாக்கியத்தில் இருந்தே இயக்குனரின் வெற்றி ஆரம்பித்து விட்டது. புதுமுக நடிகை ரித்திகா சிங்க் நடிப்பு பல படங்கள் நடித்தும் பலருக்கு வராத நடிப்பு. எந்த ஒரு இடத்திலும் மதி கதாபாத்திரத்தை விட்டு விலகவே இல்லை. சிறப்பான எதிர்காலம் இருக்கிறது நடிகைக்கு.
சந்தோஷ் நாராயணன் இசை பல இடங்களில் ஒரு ஹாலிவுட் தரத்தில் நடக்கும் பின்னணி இசையென ஒலித்தது. அதிலும் எய் சண்டைகாரா பாடல் இடையில் வரும் புல்லாங்குழல் ஓசை அல்ல இசை அதன் புல்லங்குழல் ஓட்டை வழியே வரும் இசையை ஸ்லோ மோஷனில் இசையே வெளிவருவதாய் உணரமுடிகிறது. எந்த ஒரு பாடலும் கதையை தாண்டி செல்லவில்லை.
ஒரு திரைபடத்தில் எத்தனை துனைக்கதைகள் இருக்கவேண்டும் அவை எல்லாம் படத்தில் ஒன்றாகி இருந்ததால் தான் திரைக்கதை சிறப்பாக அமைந்துள்ளது. இதில் மாதவன் மற்றும் ராஜ்குமார் ஹிரானி உதவி திரைக்கதை எத்தனை பலம் சேர்த்திருக்கவேண்டுமோ அனைத்தையும் செய்து முடிக்கிறது. உதாரணமாக தாய் தந்தை மகள்கள் கதை,ஜூனியர் கோச் கதை,ஹீரோ வில்லன் கதை,ஹீரோ முன் கதை,ஹீரோ ராதாரவிக் கதை, ஹீரோ கோச் கதை, ஹீரோ கெட்டவன் கதை இப்படி படம் முழுக்க குட்டி குட்டி கதைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தது தான் இந்த திரைப்படம்.
மாதவன் தோளில் சுமந்து இந்த படத்தை தந்தார் என்பதற்கு ஒரே ஒரு காட்சியில் தான் சட்டையை கழற்றி குத்துசண்டை செய்வது போல் வரும் ஆனால் அந்த காட்சிக்கான அழுத்தம் அதிகம். அதற்கே ரெண்டு வருடம் குத்துசண்டை பயின்று உடம்பை ஏற்றி வைத்திருக்கிறார். படம் முழுக்க ஒரு கோச் என்பதை கோவம் கண்ணீர் இறக்கம் விட்டுகொடுத்தல் போன்ற காட்சிகளை அனாசியமாக நடித்து மனதில் நிறைகிறார்.
படத்தில் முக்கியமான இடத்தில் மாஸ்டர் உங்களுக்கு inspiration யார் என்ற கேள்விக்கு ஜெங்கிஸ் கான் என்ற சாம்ராட்டை கூறுவார் மாதவன். அதற்க்கு அவர் குத்துச்சண்டை வீரர் இல்லையே என கேள்வி எழுப்புவர் அதற்க்கு மாதவன் இது புரிஞ்ச அன்னிக்கி நீ முழு நேர குத்துச்சண்டை வீரராக மாறிடுவ என்பார். அது புரிஞ்சா இந்த படமும் புரியும்.
இறுதிச்சுற்று முடிவின் நிறைவோடு,
ப.இரசல்
Wednesday, December 30, 2015
பசங்க 2 - ஹைக்கூ
குழந்தைகள் படம் எடுக்க இப்போதைக்கு பாண்டியராஜ் தவிர்த்து யாரும் இல்லை. தமிழில் ஒரு தாரே சமீன் பர் இந்த பசங்க அதற்காக ரீமேக் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் ஆயிரம் வித்தியாசங்களாவது உண்டு.பல இடங்களில் வரும் வசனங்கள் எதார்த்தமானது. சூர்யா - அமலா பால் நடிப்பும் இயல்பானது. ஆனால் மனதில் தோன்றியது சூர்யா-ஜோதிகா நடித்திருந்தால் எதார்த்தமான ஒரு ஜோடியாக இருந்திருக்கும்.
குழ்ந்தைகள் அற்புதமானவர்கள் அவர்களின் திரைப்படங்களும் சுவாரசியமானது அதை நாம் தான் ஆதரிக்க வேண்டும். மெல்லிய பொழுதுபோக்கு மற்றும் வலுவான கருத்து இதை விமர்சனமாய் எழுதுவதை விட பார்த்து புரிந்து கொள்வதே மேல். பாண்டியராஜ்க்கும் சூர்யாவுக்கும் 2015 ஆம் ஆண்டை இனிதே முடித்து வைத்ததற்கு நன்றி.
படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது சில சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் கண்ணீர் விட்டவாரே சென்றனர், அவர்கள் ஒரு கடவுளின் குழந்தைகள் ஆசிரமத்தில் இருந்து ஒரு தொண்டு நிறுவனத்தால் படத்திற்கு அழைத்து வரபட்டிருக்கின்றனர். படத்தின் உருக்கத்தின் இருந்த எங்களை நெகிழ்ச்சி அடைய செய்தது அந்த காட்சி. இது அனைவருக்குமான படம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்.
நன்றியுடன்,
ப.இரசல்
Sunday, December 27, 2015
பூலோகம்
இந்த வருடம் கடைசியில் வந்தாலும் வரவேற்ப்பு சும்மா அள்ளுது. ஒரே காரணம் ஜனநாதன் அவர்களின் வசனம் என்ற காரணத்தோடு உள்ளே சென்றால். ஜெயம் ரவி ஆளே மாறி இருக்கார் படத்துக்கு. வெறும் உடல் பருமனை ஏற்றுவது மட்டுமல்லாமல் டான்சிங் பூலோகம் என்ற பேருக்கு ஏற்றார் போல் ஆங்கங்கே நடனம் ஆடுவதும், படம் நெடுக குத்து சண்டை வீரராக வருவது உண்மையில் அவரின் மென கெடல் புரிகிறது.
படம் பார்த்துவிட்டு தான் தெரிந்தது இதில் ஸ்ரீகாந்த் தேவா இசை என்று. இசையும் பின்னணியும் படத்திற்கு பலம். முதல் பாதி விறுவிறுப்பு என்றால் இரண்டாம் பாதி கருத்துக்களம். முதல் பட இயக்குனர் என்ற அடையாளமே இல்லாமல் உள்ளார் இயக்குனர் கல்யாணகிருஷ்ணன். மிக விறுவிறுப்பான கதைக்களம் கொண்டு நேர்த்தியான நெறியாடல். பாராட்டுக்கள்.
மக்களுக்கு இதை தான் கொண்டு சேர்க்க வேண்டுமென்று ஊடங்கங்கள் நினைத்தால் நமக்கு கிடைக்கும் செய்தி என்றுமே அரை வேக்காடு இல்லை ஒன்றுமே அப்படி நடக்கவில்லை என்பது தான். இந்த வருடம் தனிஒருவன் படமும் சரி பூலோகம் படமும் சரி ஒரே கருத்தை வெவ்வேறு கோணத்தில் கூறுகிறது. சபாஷ் என்று சொல்ல தெரிந்த நமக்கே ஊடங்கங்களை எதிர்த்து போரிட தெரியவில்லை.
உதாரணம் கூறவே முடியாத ம(றை)றக்கப்பட்ட செய்திகளை காட்டி தினம் நம்மை வீணடிக்கும் ஊடகத்திற்கு எதிராக மாற வேண்டியம் தருணம் இது என்பதை ஒருக்கணம் படம் பார்க்கும் போது ஏற்ப்பட்ட பாதிப்பு தான் படத்தின் வெற்றி.
வாழ்க பாரதம்,
ப. இரசல்
Saturday, July 11, 2015
பாகுபலி
பாகுபலி
அனைவருக்கும் தெரிந்த ராஜா கதை தான் ஆனால் 2015 ல் அதை பார்க்க ஏன் இந்த கூட்டம் அதான் ஒரு இயக்குனரின் வெற்றி. ராஜமௌளியின் பல திரைபடங்கள் ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்த நேரம், மகதீரா போன்ற ஒரு படம் மீண்டும் மறுபதிப்பு செய்யமுடியாமல் டப்பிங் மட்டும் செய்யப்பட்டு வெற்றி அடைந்த தைரியம் தான், நான் ஈ திரைப்படம் தமிழில் தெலுகு மற்றும் பிற மொழிகளில் வெற்றி பெற்றது.
அப்படி இருக்க பாகுபலி எப்படி இருக்கிறது என்று கூற அனைவருமே இரண்டாம் பகுதி வரும் வரை காத்திருக்க வேண்டும். ஏனென்றால் முதல் பகுதி கதையின் துவக்கம் மட்டுமே. சரி முதல் பகுதி எப்படி இருக்கிறது என்றால் இடைவேளைக்கு பிறகு வரும் அழுத்தமான கதையின் நெறியாடல் பார்த்த அனைவரையும் அடுத்த பகுதிக்காக காத்திருக்க வைத்துவிட்டது.
இப்படி ஒரு போர்கள காட்சி இப்படி பிரமாண்டமான கோட்டை இப்படி பிரமாண்டமான அழுத்தமான கதாபாத்திரங்கள் எல்லாம் சபாஷ் பேஷ் பலே.
சத்யராஜ் என்னை பொறுத்தவரை இந்த பகுதியின் கைதட்டல்களை வெகுவாரியாக பெறுகிறார். என்ன ஒரு நடிப்பு திறமை அந்த நடிகனுக்குள். அடுத்து ரம்யா கிருஷ்ணன் அலட்டல் இல்லா நடிப்பு மிகவும் ஈர்க்கிறது. நாசர் போர்கள காட்சியில் கொடுக்கும் விதவிதமான முக பாவங்கள் அடடே அற்புதம்.
முக்கிய கதாபத்திரங்களை பற்றி திரையில் கண்டு கொள்ளுங்கள். அடுத்த பகுதி மிகவும் அழுத்தமாகவும் அற்புதமாகவும் இருக்க போகிறது, அப்பொழுது முன் பகுதியை விட்டுவிட்டோமே என்று தோன்ற கூடாது என்றால் திரையரங்கில் இந்த திரைபடத்தை கண்டுகளியுங்கள்.
பாகுபலி - தொடக்கம் - தொடரும்
என்றும் அன்புடன்,
ப.இரசல்
Sunday, June 7, 2015
காக்காமுட்டை - தேசியவிருது பெற்ற படம்
காக்காமுட்டை - தேசியவிருது பெற்ற படம்
இவ்ளோ தான் நமக்கு தெரிஞ்சதுன்னு படத்த போய் பார்த்தா குப்பத்தில் இருக்கும் மக்களின் வாழ்க்கையை எட்டிப் பார்த்தது போல படம் நகர்கிறது.
என்னடா குப்பத்து வாழ்க்கைய இது வரைக்கும் காட்டாத ஒன்னையா காட்டிடாங்க அப்படின்னு கேட்டா? ஆமா உண்மைதான் அப்படிதான் மொத்த படமும் இருக்கு. வெறும் பாஷையை மட்டும் அல்ல உடல் மொழியும்.
கடைசிவரைக்கும் குட்டிபசங்களை சின்ன காக்காமுட்டை பெரிய காக்காமுட்டைன்னு தான் ஞாபகம் இருக்கு. எதார்த்தம் மாறாத அம்மா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா , பொண்ணுகிட்ட விஷயம் இருக்கு. ஆனா இந்த குட்டி பசங்களுக்கு இது தான் முதல் படம், எப்படிப்பா நீங்க நடிசீங்கன்னு சொல்றது. அப்படியே இருக்கீங்களே தம்பிகளா. உங்ககிட்ட கத்துக்கணும்னு நினைக்கிறேன்.
ஊரே படத்த கொண்டாடுது அதான் தமிழ் ரசிகர்கள். புடிச்சா கொண்டாடுவாங்க. இயக்குனர் மணிகண்டன் சிகரம் தொடுவார் என்ற அச்சமில்லை. இடியென இறங்கும் உண்மையின் வலி நெஞ்சத்தை கேள்வி கேட்க வைக்கிறது அதான் உண்மை சினிமா. பாலுமகேந்திராவும் பாலச்சந்தரும் இருந்திருந்தால் என்ன கூறி இருப்பார்கள் என்று யோசிக்கிறேன். நிச்சயம் கட்டிப்புடித்து பாராட்டி இருப்பார்கள் இயக்குனரை. அதனால் தான் என்னவோ பாரதிராஜா தேசியவிருது தேர்வாளர்களில் ஒருவராய் இருந்துள்ளார்.
pizza சாப்பிடனும்னு தோனுச்சினா இந்த படம் கண்டிப்பா ஞாபகம் வரும் ஒவ்வொரு தடவையும்.
என்றும் அன்புடன்,
ப.இரசல்
Subscribe to:
Posts (Atom)


