Thursday, February 26, 2015

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்


வித்தியாசமான முயற்சிகள் பாராட்டப்படவேண்டும். இன்ஜினியரிங் படிக்கறப்ப மொபைல் communication பாடத்துல வராத ஈர்ப்பு இந்த படத்த பாக்கறப்போ வந்திச்சி. நாலு கதையா இல்ல மூணு கதையான்னு சொல்லத் தெரியவில்லை. ஆனா எல்லாத்தையும் சேர்க்கற ஒரே விஷயம் மொபைல். ஒவ்வொரு கதையமைப்பும் அதன் சுவாரசியமும் வித்தியாச பட்டிருக்கு. அதன் மூலம் படம் விரைவாக உள்ளது போலவே உணரப்படுகிறது.

நகுல் கதாபாத்திரம் தான் முழுக்க முழுக்க ஒரு பொறியியல் மாணவனாக என்னை ஈர்த்தது. முழுக்க முழுக்க தொழில்துறையை பற்றிய சிம்போசியம் பார்த்த மாத்ரி இருந்தது. நகுலின் அம்மாவாக ஊர்வசி அதே ஊர்வசி தான். அதிலும் கடைசியில் அவருக்கும் எப்படி இதெல்லாம் தெரியும் என்று கூறும்போது நம்மையும் மீறி சிரிக்க தவறமாட்டோம்.

தினேஷ் பிந்து மாதவி காதல் இன்னுமொரு பரிமாணம் காதல் வந்த இடம் புதுமை. சதீஷின் காதல் கொஞ்சம் நெருடலாய் இருந்தாலும் அறிமுக காட்சியும் மொபைல் திருடனிடம் பேசும் வசனங்கள் காமெடி ரகம்.

ராம் பிரகாஷ் ராயப்பா தமிழ் திரையுலகில் நல்லதொரு ஆரம்பத்தோடு வந்திருக்கிறார். வரவேற்க்கிறோம் வாழ்த்துக்களுடன்.

என்றும் அன்புடன்,
ரசல் 

Thursday, January 29, 2015

பிரிவில் காதல் - கவிதை



உன் பிறந்தநாளுக்கு நாம்...
காதலிக்கும் பொழுது
நீ ஓர் இடத்தில் நான் ஓர் இடத்தில்!
நினைத்தாலும் பார்க்க முடியாது?
பிரிந்த பின்
நினைத்தும் பார்க்க முடியாது..
நாம் ஓர் இடத்தில்..
இப்படிக்கு,
நீயும் நானும்

Tuesday, January 20, 2015

உருவமில்லை உணரமுடியும் - சிறுகதை - Short Story

இது ஒரு போட்டிக்கான பதிவு. இதில் ஆறுதல் பரிசு கிடைத்தது இந்த கடவுளை பற்றிய தலைப்பில் எழுதிய கதைக்கு. நன்றி கதை தேர்வாளர்களுக்கும் என் நண்பர்களுக்கும்.

http://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/3822-uruvamillai-unaramudiyum-2015-potti-sirukathai-60

"உலகின் நிலை மாறுபாட்டால் ஒவ்வொரு முறையும் பஞ்சபூதங்களின் ஒன்றால் பேரழிவை நாம் கண்டு கொண்டிருக்கிறோம் ஆகையால் நம்முடைய ஒவ்வொரு செயலும் அழிவை நோக்கி தான் போய்கொண்டிருக்கிறது. கடவுள் காப்பாற்றி விடுவார் என்ற கால பேச்சு மாறி உன்னை நீயே தான் காப்பாற்றிகொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் சிந்தனை கொள்ள வேண்டும்" என்று சுற்றுபூர சூழல் மாசுபாட்டை பற்றிய பேச்சை முடித்தார் சமுக ஆர்வலர் திரு.அருணகிரி அய்யா அவர்கள். கைதட்டல்கள் பலமாய் ஒலித்திட மேடையில் இருந்து இறங்கி தன்னுடைய இரு சக்கர வாகனம் நோக்கி நடந்து சென்றார்.
 
அவர் பின்னரே கூட்டத்தில் இருந்து ஓடிவந்த பெருமாள் அவரிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று தன்னை ஒரு பகுதி நேர அர்ச்சகர் என்று அறிமுகம் செய்து கொண்டான். பார்க்க படித்த பட்டதாரி ஆனால் பகுதி நேர ஊழியம் அர்ச்சகராய் என்ற மனதில் ஓடிய கேள்வியால் "ஹ்ம்ம் சொல்லுப்பா என்ன கேள்வி?" என்று வினவினார்.
 
பெருமாள்  அவரிடம் "உங்களுக்கு கடவுள் பக்தி இருப்பது போல் தெரிகிறது.. ஆனால் உங்கள் பேச்சு முற்போக்கு சிந்தனையாளரை போல தோன்றுகிறது".
 
அருணகிரி பதிலளித்தார் "உண்மை தான் எனக்கும் கடவுள் பக்தி இருக்கிறது ஆனால் என் பேச்சு மக்கள்சுற்றுபூரத்தை பாதுகாக்க வேண்டும் என்பது தான் அதனால் அந்த உதாரணம் கொடுத்தேன்" என்றார்.
 
பெருமாள் அமைதியாக "உங்களிடம் நான் கேட்க விரும்பிய கேள்வி இதுதான்.. கடவுளாலும் காப்பற்ற முடியாது இப்பொழுது இருக்கும் கால மாற்றங்களால்  அதை தானே கூறினீர்"
 
"ஆமாம்!", என்றார்
 
"உருவாக்கியவருக்கு அதை அழிக்கவும் தெரியும் காக்கவும் தெரியும் அல்லவே உங்கள் கடவுள் பக்தி உண்மையென்றால்?" பெருமாள் வினவினான்.
 
சற்றே சிந்தித்தார் அருணகிரி, மெல்லிய புன்னகையோடு "இந்த தலைப்பு பல ஆண்டுகளாகவே நிருபித்தும் நிருபிக்க படாமலும் இருக்கிறது. ஆனால் மனிதனாய் பிறந்த அனைவருக்கும் சுய புத்தியை தன்னையும் தன் சுற்றத்தையும் பாத்துக்க தான் என்பதை மறந்துவிடுகிறார்கள். நாம் மேலும் பேசலாம் மீண்டும் சந்திக்கும் பொழுது" என்று தனது வண்டியை கட்ட ஆயுத்தம் ஆனார்.
 
பெருமாள் "நன்றி ஐயா! நான் இதே கட்டிடத்தில் மேற்பார்வையாளராகவும் மாலையில் அந்த கோயிலில் தான் அர்ச்சகராய் இருக்கிறேன். மீண்டும் நீங்கள் வரும் போது சந்திக்கிறேன் " என்று விடைகொடுத்தான்.
 
அருணகிரி தன் வண்டியில் செல்லும் போது நடந்த உரையாடலே கேட்டு கொண்டிருந்தது. இடையில் போக்குவரத்து சிக்னல் விழவே வண்டியை நிறுத்தி எதிர் திசைகளில் இருந்து வரும் வண்டிகளை பார்த்து யோசித்து கொண்டிருந்தார். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று யோசித்து கொண்டிருக்கும் போதே தன் அருகில் இருக்கும் இடங்களில்  ஓட்ட பட்டிருக்கும் படங்களை ஒரு நோட்டம் விட்டார். விநாயகர்,முருகன்,சிவன்,பெருமாள்,அம்மன்,இயேசு,முஸ்லிம் எழுத்துக்கள் என பார்க்கும் இடமெல்லாம் எதாவது ஒட்டி இருப்பதை கண்டார்.
 
மெதுவாக பச்சை விளக்கு எரிந்தவுடன் யோசித்து கொண்டே தன் வீட்டிற்க்கு வந்தடைந்தார். தன் மனைவியும் குழந்தைகளும் ஊரில் இல்லாததால் தானே கதவை திறந்தவருக்கு பளிச் வெளிச்சம் அவரையும் அவர் முகத்தையும் மறைத்தது. வெறும் வெளிச்சம் மட்டும் தான் நடக்க தொடங்கினார், புரிந்துகொள்ளவே முடியாத அமைதி, தன் ரத்தத்தின் ஓட்டம் என எல்லாம் அவருக்கே கேட்டுக் கொண்டிருந்தது. கண்களை மூடி கசக்கி நன்றாக விழித்தவர்க்கு எல்லாம் மாயமாய் மறைந்தது.
 
தன் நாட்குறிப்பில் கண்ட காட்சியையும் உரையாடலையும் பதிவு செய்தார். முடிவில் கடவுளால் உலகத்தை படைத்தல்,காத்தல், அழித்தல் என மூன்றுமே முடியும் ஆனால் அவருக்கு உருவமில்லை உணரமுடியும். ஆனால் அதை உணர  மனிதனின் உயிரோட்டம் மிக முக்கியம் சுற்றுபூரத்தை சுத்தமாய்வைத்தால் தான் நோய்நொடி இல்லாமல் வாழமுடியும். உன்னை காப்பாற்ற மருத்துவர்கள் இதுவரை கண்டுபிடித்ததை வைத்து தான் முயற்சி செய்ய முடியும் ஆனால் மாசுபாட்டால் மனிதனையே காப்பாற்ற முடியாமல் போகலாம் என்று எழுதி முடித்தார்.

கோயிலில் அர்ச்சகர் பெருமாள் அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். கல்லாய் கடவுள் அருள் கூர்ந்த வண்ணம் மக்களுக்கு தரிசனம் கொடுத்துக்கொண்டிருந்தார்.
 
இப்படிக்கு
ப.இரசல்

Sunday, December 21, 2014

பிசாசு

பிசாசு என் பார்வையில் கதை பற்றி அல்லநான் உணர்ந்ததை பற்றி

இரவின் மடியில் குற்றவியல் பின்னணியில்எடுக்க பட்ட படங்களை தந்த மிஷ்கினின்மற்றுமொரு பரிமாண படைப்பு இந்த பிசாசு.அழகிய பெண்ணின் கண்களில் இருந்துஆரம்பித்து ஆக்ரோஷ பிசாசு ஆட்டம் வரை,அனைத்தும் யாருக்கும் பிடிக்காது என்ற கூறமுடியாது. இது பேய் படம் என ஆரம்பித்துமுடிவில் இது மக்கள் பேசும் படமாய்மாறிப்போவது எத்தனை அளவு நாம் அதில்உள்ளே போகின்றோம் என்பதை காட்டுகிறது.

இசையில் வயொலினின் இசை முக்கியம்என்பது ஆரம்பத்திலே உணர முடிந்தது,அதற்க்கேற்றார் போல் காட்சிகளின் தொகுப்புநாம் மிஷ்கின் படம் தான் பார்த்துகொண்டிருக்கிறோம் என்று ஆங்காங்கேஉணர்த்துகிறது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம்நான் பார்த்த திரைஅரங்கில் என்னை போலேசினிமா விரும்பிகள் தான் கைதட்டி படத்தைபாராட்டினர். அதை திரைஅரங்கில்பார்த்தவர்களை விட தொலைக்காட்சியிலும்dvd யிலும் பார்த்தவர்கள் தான் அதிகம்.ஆனால் இந்த படம்! அதிக திரையரங்குகள்! முழுவதும் அரங்கு நிறைந்த காட்சிகளாய்!முதல் இரண்டு நாளில் பார்த்ததில் எனக்குமிகவும் மகிழ்ச்சி!

மிஷ்கின் உலக சினிமாவில் இருந்து கதையைதிருடுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம்படம் பார்க்கும் போது தெரிந்தால் பேசலாம்.இன்று உலக சினிமாக்கள் எல்லாருக்கும்எல்லா வடிவத்திலும் பார்க்க முடிகிறது.ஆனால் தமிழ் மொழியில் இருண்டவிஷயங்களை இருளில் நமக்கேத்த வடிவில்கொடுக்க மிஷ்கின் போன்ற ஒரு சில கலைபடைப்பாளர்களே கொடுக்க முடியும். அது இந்தபடத்திலும் நிருபித்து உள்ளார்.

நடிப்பிற்கு புதிய முகங்கள் என்று கூற முடியாதஅளவு அனைத்து கதையின் நாயகர்களும்வாழ்ந்து காட்டி உள்ளனர். இங்கே நாயகர்கள்என அனைத்து கதாபாத்திரங்களையும் தான்கூறுகிறேன். இதில் காதல்,பாசம்,சமுக கோவம்என பல விஷயங்களை பதிவுசெய்திருக்கிறார். இசை ஆங்காங்கேமெல்லியதாய் ஒலித்து! ஒரு கட்டத்தில் என்இதய துடிப்பும்… அந்த ஓசையும்!! ஒன்றே!! எனஉணர்ந்தேன். ஒளி ஓவியம் என்று தான்ஒளிப்பதிவாளரை பதிய வேண்டும்அவருக்கென கலை இயக்குனரின் உழைப்பும்பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இங்கே கதையை பற்றியும்! கதையில்சுவாரசியம் பற்றியும் பேசினால்! எங்கே நான்படம் பார்த்து அடைந்த திருப்தி… இதைபடிப்பவர்களுக்கு அமையக்கூடாது என்றுஎதுவும் கூறாமல் என்னை கவர்ந்த அந்தநாயகியின் கண்களை நினைத்து இந்தமிஷ்கினின் உழைப்பை ஒரு துளி ஆனந்தகண்ணீரில் முடிக்கிறேன்.

என்றும் அன்புடன்,
ப. இரசல்

Sunday, December 14, 2014

லிங்கா - இது தலைவர் படம்



பிறந்தநாள் கொண்டாடும் தலைவர் தன் ரசிகர்களுக்கு கொடுத்த விருந்து தான் லிங்கா. கண்ணா இது ரஜினி படம் மத்த நடிகர்கள் படம் இல்ல. அதுனால இந்த படம் ரஜினி திரைப்படங்களில்  சிறந்த படமா இருக்குமா கேட்டா அத பத்தி உண்மையான ரஜினி ரசிகனுக்கு கவலை இல்ல. ஏன்னா கிட்டத்தட்ட இதுக்கப்புறம் அவர் படம் வருமான்னு நெனச்ச ரசிகனுக்கு நன்றி கடனா நடிச்ச படம் லிங்கான்னு தான் சொல்லணும். அத கூட வியாபார விமர்சகர்கள் ஈரோஸ்க்கு கோச்சடையான்ல ஏற்பட்ட நஷ்டத்துக்கு எடுத்த படம்ன்னு சொல்லி புறம் பேசறத கேள்வி பட்டேன். 

விமர்சனமே தேவையில்லாத ரஜினி படத்துக்கு எதுக்கு விமர்சனம். இது ரசிகனுக்கும் தலைவருக்கும் நடந்த ஒரு புரிதலுக்கான படமா தான் பாக்குறேன். ஒன்னு புரியல! ரஜினியை வைத்து அனிமேஷன் காமெடீஸ் சர்தார் காமெடிகளை விட அதிகம். அதே விஷயத்த தலைவர் ஸ்க்ரீன்ல பண்ணா! ஒத்துக்க முடியலன்னா? நீ உண்மையான ரஜினி ரசிகனே இல்ல. 

லிங்கால அற்புதமான கலை இருக்கு, அதுக்கு பின்னாடி வேலை செய்த சாபு சிரில் உண்மையிலே பாராட்ட பட வேண்டியவர். குறுகிய காலத்துல எடுத்த படத்துக்கு இப்படி ஒரு செட்! கண்டிப்பா இது தமிழ் திரைப்பட உலகம் பெருமை பட கூடிய விஷயம். தலைவர் வயச குறைத்து காட்டி படத்தை முழுமையாய் ஒட்டாமல் முக்கால்வாசி பிளாஷ் பாக்கள கதை கூறிய விதமும் பாராட்ட கூடியது. பெரிய நடிகர்கள் புகை மற்றும் சரக்கு அடிபதைபோல் நடிப்பதால் தான் இளைய சமுதாயம் கெட்டு போகிறது என்கிற விஷயத்தை ஏற்று கொண்டு சந்திரமுகியில் இருந்து இந்த படம் வரை அது போன்ற காட்சிகள் இல்லாமல் எடுதமைக்கும் பாராட்டலாம். மூணு மணி நேரம் தலைவர் குறும்பு,விவேகம்,வேகம்,சண்டை,கண்ணீர் மற்றும் முக்கியமாய் ஸ்டைலோட மொத்த படத்தையும் தோளில் சுமக்கிறார் அதில் இசை,எடிட்டிங் பற்றி யோசிக்க மறந்து போகிறது. ஆனால் ரத்தினவேலுவின் ஒளிபதிவு ஈர்க்கிறது.

இதெல்லாம் விட பின்னால் வரும் தலைவர் கூறிய வசனங்கள் யாவும் பொன்மொழியாய் பொன்குமரன் மற்றும் ரவிக்குமார் எழுத்துக்களில்.

> நான் எந்த வேலை செஞ்சாலும் அது புடிச்சா தான் செய்வேன் அதுல என் வேலை இருந்தா தான் காசே வாங்குவேன்.


>நாங்கெல்லாம் விடுதலை வீரர்கள் - ஹா.. எதிரிய அடிக்கறவன் தான் வீரன் கொள்ளை அடிக்கறவன் இல்ல

>என்னை ராஜாவா பாத்தீங்க,engineer அஹ பாத்தீங்க இப்போ சமைக்காரனா பாக்கிறீங்க... நாம எந்த வேல செய்யரோம்ன்னு முக்கியமில்ல அத புடிச்சி செய்றமா என்றது தான் முக்கியம்.

>எதிர் பாக்காதது நடந்தா தான் சுவாரசியம்..

>I havent failed i have postponed my success

>உன்ன நம் முன்னோர்கள் வைக்க வேண்டிய எடத்துல வைக்கல அதுனால நான் நிக்குறேன் 

>மன்னருக்கு தேவை மக்கள் துணை அந்த ஆண்டவன் அருளால அது என்னைக்குமே இருக்கு 

>ஒரு வேளை சாப்படலன்னா பரவலா.. ஒரு வேளை கூட சாப்படலன்னா

>ஒரு நாட்டுக்காக போராடுனா தான் விடுதலை உன் வீட்டுக்காக இல்ல 

>அரண்மனைல இருந்தா தான் ராஜாவா எங்க இருந்தாலும் சந்தோஷமா இருந்து இல்லாதவங்களுக்கு இருக்கறதா கொடுக்கறவங்க எல்லாமே ராஜ தான்

>எவ்ளோ உயரத்துல வாழ்ந்தாலும் நாம தூங்கற இடம் நம்ம உயரம் தான

இன்னும் பல இருக்கு இந்த ரஜினி படத்துல ரெண்டாவது தடவை பாக்க கூட. அடுத்த படம் எல்லா ரசிகனுக்குமான படமா இருந்தா இந்த படத்த மறந்துடுவாங்க, ஆனா இன்னிக்கி ரஜினி ரசிகனா அடுத்த ஷோவ்க்கு டிக்கெட் பாக்க ஆரம்பிக்கிறேன்.

என்றும் அன்புடன்,
ரசல்

Friday, December 12, 2014

தலைவர் இருக்கிறார் மறவாதே!


நினைவு தெரிந்த நாள் முதல் ஒருவருக்கு தான் அந்த புகழாரம் சூட்டினோம். தலைவன் என்றால் MGR- தலைவர் என்றால் ரஜினி. மூன்றெழுத்து மந்திரம் தமிழகத்தின் தலை எழுத்து. இன்னும் ஏன் தமிழ் திரைப்பட வரலாற்றில் இடம் பிடிக்கவே இன்றும் பல நடிகர்களின் பெயர் மூன்றெழுத்து தான். மக்கள் மனதில் இடம் பிடிக்க! மக்கள் தங்கள் படங்களை பார்க்க வர! எத்தனையோ உக்திகளை கையாண்டாலும்,  கடைசியில் இல்லை முதலில் இருந்தே மக்களின் மனதில் தோன்ற வேண்டும் இவன் நாளை தலைவன் என்று.

அது தான் இன்றைய தலைமுறைகளின் நாயகன் எங்களின் தலைவர் ரஜினிகாந்த். அன்று கதவை திறந்து வந்த முதல் காட்சியை மறக்கவில்லை நாங்கள் ஏன் என்றால் எங்கள் மனதின் கதவை திறந்து உக்கார்ந்த நாளாகவே நினைக்கிறோம்.

உன்னுடைய பிறந்தநாளுக்கு இதை விட பெரிய விருந்து எதுவும் கொடுக்க முடியாது,உனது லிங்காவை பார்க்க காத்திருக்கும் ரசிகர்களில் ஒருவனாய்... 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவரே!!

Art by Bala
Written by Rasal

Sunday, November 30, 2014

காவியத்தலைவன் என் பார்வையில்

காவியத்தலைவன் யார்? என்று முன்னோட்டம்(trailer) பார்த்த போதே கேள்வி எழுந்தது, அது நிச்சயமாக ரஹ்மான் இசையாக தான் இருக்கும் என நினைத்திருந்தேன். பாடல்கள் அனைத்தும் ஒரு கதை கூறின. அதிலும் அல்லி  அர்ஜுனாவும் கர்னமோட்சமும் விரும்பியும் கனவில் உருவக படுத்தியும் என்னை நாடக உலகிற்கு கொண்டு சென்றன. படமும் வெளிவந்து விட்டது நானும் கண்டு விட்டேன்.



நிஜ கதாபாத்திரங்களின் நிழல்கள்:

நிஜம் : கிட்டப்பா பாகவதர் 
நிழல்: சிதார்த் "காலிப்பா பாகவதர்"

நிஜம்: சங்கரதாஸ் சுவாமிகள் 
நிழல்: நாசர் "சிவதாஸ் சுவாமிகள்"

நிஜம்: கே.பி.சுந்தராம்பாள் (அவ்வையாராய் நடித்தவர்)
நிழல்: வேதிகா "வடிவாம்பாள்"

நிழல்: ப்ரித்திவிராஜ் "கோமதி நாயகம் பிள்ளை"  நிஜம் யாரென்று தெரியவில்லை.

இது சரித்தர படமாய் இருப்பதால் தான் இத்தனை நிஜ கதாபாத்திரங்கள் போன்று நிழல் கதாபாத்திரங்களை 
உருவாக்கி உள்ளாரோ இயக்குனர் வசந்தபாலனும் எழுத்தாளர் ஜெயமோஹனும் என்று தோன்றியது.

கதையின் உயிரோட்டம் நடிப்பு தான்:

சிதார்தும் ப்ரிதிவியும் இங்கே நடிப்பு போட்டி நடத்தியுள்ளனர். ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர் இல்லை, ஆனால் திரைகதையில் ஒருவர்க்கு மேல் ஒருவர் எப்போதும் வென்று கொண்டுதான் இருக்கிறார்கள். வார்த்தையோடு ஏற்ற இரக்க நடிப்புக்கும் வார்த்தையோடு வாஞ்சையான நடிப்புக்கும் இவர்கள் வித்தியாசம் காட்டுவது நடிப்பின் உச்சக்கட்டம். வேதிகாவும் அழகென பதுமையாய் இல்லாமல் ஆங்காங்கே வீரிய நடிப்பும் நடனமும் காண மனம் விரும்பும், அதிலும் அவருடைய முதல் காட்சியில். நாசர் சொல்லத்தேவை இல்லை வாழ்த்திருக்கிறார் அதே புருவம் உயர்த்திய கண்ணும் கடுமை பேசிய உதட்டசைவும்.

அலங்காரமும் ஒளிப்பதிவும்:
கால திரைப்படத்திற்கு தேவையான அனைத்தும் எல்லா காட்சிகளிலும் தெரிந்தது. பழமையான பொருட்கள்,நாடக மேடை அலங்காரம் என காவியம் பேசின ஒவ்வொரு காட்சியும். அதை எல்லாம் நமக்கு படம் பிடித்து ஒளிப்பதிவு செய்தவர் நிரவ் ஷா. இவருக்கு இது ஒன்றும் புதிதல்ல ஏற்கனவே மதராசபட்டினம் படம் இவர் புகழ் கூறும். இரவு காட்சிகளிலும் நாடக காட்சிகளிலும்  கண்கள் எதை பார்க்குமோ அதை தான் படமெடுத்துள்ளார். 

திரையாடலும் வசனமும்:
பழமையின் கதையை தேர்ந்தெடுத்து அதற்க்கான ஆராய்ச்சிகள் செய்து திரைக்கதையை ஜெயமோஹனும் வசந்தபாலனும் உருவாக்கி இருந்தாலும் திரைப்படமாய் எடுக்க சில சிரமங்களை சந்தித்திருக்க வேண்டும். அல்லது முழுமையாய் கொடுக்க முடியாமல் போயிருக்கலாம். ஏனென்றால் முழுமையாய் திரைப்படம், ஆங்கங்கே ஏதோ விடுபட்டதை போல் உணர்தேன். நாடக நடிகர்களின் சுதந்திர போராட்டத்தில் பங்கு பற்றியும் பேசிவிட்டு நலிந்த நாடக சபாக்கள் பற்றியும் கூறியும்  திரைக்கதைக்கு வலிமை சேர்க்க வில்லை. வசனங்கள் நாடகத்தின் உள்ளே மட்டும் செந்தமிழை பேசி மற்ற நேரங்களில் நிகழ்கால பேச்சு வழக்கை கொண்டுள்ளது. 

இயக்குனராய் வசந்தபாலன்:
என்றும் வசந்தபாலனின் திரைப்படங்கள் வாழ்க்கையை ஒட்டி தான் இருக்கும். அந்த வகையில் இந்த நூற்றாண்டில் இருக்கும் நமக்கு போன நூற்றாண்டின் பொக்கிஷத்தை இன்றைய காலம் ரசிப்பதற்காக எடுத்தமைக்கு பாராட்டுகள்.  இன்னும் நாம் இழந்த பல காவியத்தலைவர்களை உருவாக்கி தர வேண்டுகிறோம்.

மீண்டும் காவியத்தலைவன் யாரென்று கேள்வி எழுந்துள்ளது காரணம் இங்கே அவரவர் அவருடைய தொழிலில் மேலோங்கி இருக்கின்றனர் இசையில்,நடிப்பில்,எழுத்தில்,இயக்கத்தில்,திரைக்கதையில்,ஒளிப்பதிவில். ஆக அனைவரும் காவியத்தலைவர்களே. 

என்றும் அன்புடன்,
ரசல்