Sunday, December 14, 2014

லிங்கா - இது தலைவர் படம்



பிறந்தநாள் கொண்டாடும் தலைவர் தன் ரசிகர்களுக்கு கொடுத்த விருந்து தான் லிங்கா. கண்ணா இது ரஜினி படம் மத்த நடிகர்கள் படம் இல்ல. அதுனால இந்த படம் ரஜினி திரைப்படங்களில்  சிறந்த படமா இருக்குமா கேட்டா அத பத்தி உண்மையான ரஜினி ரசிகனுக்கு கவலை இல்ல. ஏன்னா கிட்டத்தட்ட இதுக்கப்புறம் அவர் படம் வருமான்னு நெனச்ச ரசிகனுக்கு நன்றி கடனா நடிச்ச படம் லிங்கான்னு தான் சொல்லணும். அத கூட வியாபார விமர்சகர்கள் ஈரோஸ்க்கு கோச்சடையான்ல ஏற்பட்ட நஷ்டத்துக்கு எடுத்த படம்ன்னு சொல்லி புறம் பேசறத கேள்வி பட்டேன். 

விமர்சனமே தேவையில்லாத ரஜினி படத்துக்கு எதுக்கு விமர்சனம். இது ரசிகனுக்கும் தலைவருக்கும் நடந்த ஒரு புரிதலுக்கான படமா தான் பாக்குறேன். ஒன்னு புரியல! ரஜினியை வைத்து அனிமேஷன் காமெடீஸ் சர்தார் காமெடிகளை விட அதிகம். அதே விஷயத்த தலைவர் ஸ்க்ரீன்ல பண்ணா! ஒத்துக்க முடியலன்னா? நீ உண்மையான ரஜினி ரசிகனே இல்ல. 

லிங்கால அற்புதமான கலை இருக்கு, அதுக்கு பின்னாடி வேலை செய்த சாபு சிரில் உண்மையிலே பாராட்ட பட வேண்டியவர். குறுகிய காலத்துல எடுத்த படத்துக்கு இப்படி ஒரு செட்! கண்டிப்பா இது தமிழ் திரைப்பட உலகம் பெருமை பட கூடிய விஷயம். தலைவர் வயச குறைத்து காட்டி படத்தை முழுமையாய் ஒட்டாமல் முக்கால்வாசி பிளாஷ் பாக்கள கதை கூறிய விதமும் பாராட்ட கூடியது. பெரிய நடிகர்கள் புகை மற்றும் சரக்கு அடிபதைபோல் நடிப்பதால் தான் இளைய சமுதாயம் கெட்டு போகிறது என்கிற விஷயத்தை ஏற்று கொண்டு சந்திரமுகியில் இருந்து இந்த படம் வரை அது போன்ற காட்சிகள் இல்லாமல் எடுதமைக்கும் பாராட்டலாம். மூணு மணி நேரம் தலைவர் குறும்பு,விவேகம்,வேகம்,சண்டை,கண்ணீர் மற்றும் முக்கியமாய் ஸ்டைலோட மொத்த படத்தையும் தோளில் சுமக்கிறார் அதில் இசை,எடிட்டிங் பற்றி யோசிக்க மறந்து போகிறது. ஆனால் ரத்தினவேலுவின் ஒளிபதிவு ஈர்க்கிறது.

இதெல்லாம் விட பின்னால் வரும் தலைவர் கூறிய வசனங்கள் யாவும் பொன்மொழியாய் பொன்குமரன் மற்றும் ரவிக்குமார் எழுத்துக்களில்.

> நான் எந்த வேலை செஞ்சாலும் அது புடிச்சா தான் செய்வேன் அதுல என் வேலை இருந்தா தான் காசே வாங்குவேன்.


>நாங்கெல்லாம் விடுதலை வீரர்கள் - ஹா.. எதிரிய அடிக்கறவன் தான் வீரன் கொள்ளை அடிக்கறவன் இல்ல

>என்னை ராஜாவா பாத்தீங்க,engineer அஹ பாத்தீங்க இப்போ சமைக்காரனா பாக்கிறீங்க... நாம எந்த வேல செய்யரோம்ன்னு முக்கியமில்ல அத புடிச்சி செய்றமா என்றது தான் முக்கியம்.

>எதிர் பாக்காதது நடந்தா தான் சுவாரசியம்..

>I havent failed i have postponed my success

>உன்ன நம் முன்னோர்கள் வைக்க வேண்டிய எடத்துல வைக்கல அதுனால நான் நிக்குறேன் 

>மன்னருக்கு தேவை மக்கள் துணை அந்த ஆண்டவன் அருளால அது என்னைக்குமே இருக்கு 

>ஒரு வேளை சாப்படலன்னா பரவலா.. ஒரு வேளை கூட சாப்படலன்னா

>ஒரு நாட்டுக்காக போராடுனா தான் விடுதலை உன் வீட்டுக்காக இல்ல 

>அரண்மனைல இருந்தா தான் ராஜாவா எங்க இருந்தாலும் சந்தோஷமா இருந்து இல்லாதவங்களுக்கு இருக்கறதா கொடுக்கறவங்க எல்லாமே ராஜ தான்

>எவ்ளோ உயரத்துல வாழ்ந்தாலும் நாம தூங்கற இடம் நம்ம உயரம் தான

இன்னும் பல இருக்கு இந்த ரஜினி படத்துல ரெண்டாவது தடவை பாக்க கூட. அடுத்த படம் எல்லா ரசிகனுக்குமான படமா இருந்தா இந்த படத்த மறந்துடுவாங்க, ஆனா இன்னிக்கி ரஜினி ரசிகனா அடுத்த ஷோவ்க்கு டிக்கெட் பாக்க ஆரம்பிக்கிறேன்.

என்றும் அன்புடன்,
ரசல்

No comments:

Post a Comment