Sunday, December 21, 2014

பிசாசு

பிசாசு என் பார்வையில் கதை பற்றி அல்லநான் உணர்ந்ததை பற்றி

இரவின் மடியில் குற்றவியல் பின்னணியில்எடுக்க பட்ட படங்களை தந்த மிஷ்கினின்மற்றுமொரு பரிமாண படைப்பு இந்த பிசாசு.அழகிய பெண்ணின் கண்களில் இருந்துஆரம்பித்து ஆக்ரோஷ பிசாசு ஆட்டம் வரை,அனைத்தும் யாருக்கும் பிடிக்காது என்ற கூறமுடியாதுஇது பேய் படம் என ஆரம்பித்துமுடிவில் இது மக்கள் பேசும் படமாய்மாறிப்போவது எத்தனை அளவு நாம் அதில்உள்ளே போகின்றோம் என்பதை காட்டுகிறது.

இசையில் வயொலினின் இசை முக்கியம்என்பது ஆரம்பத்திலே உணர முடிந்தது,அதற்க்கேற்றார் போல் காட்சிகளின் தொகுப்புநாம் மிஷ்கின் படம் தான் பார்த்துகொண்டிருக்கிறோம் என்று ஆங்காங்கேஉணர்த்துகிறதுஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம்நான் பார்த்த திரைஅரங்கில் என்னை போலேசினிமா விரும்பிகள் தான் கைதட்டி படத்தைபாராட்டினர். அதை திரைஅரங்கில்பார்த்தவர்களை விட தொலைக்காட்சியிலும்dvd யிலும் பார்த்தவர்கள் தான் அதிகம்.ஆனால் இந்த படம்! அதிக திரையரங்குகள்! முழுவதும் அரங்கு நிறைந்த காட்சிகளாய்!முதல் இரண்டு நாளில் பார்த்ததில் எனக்குமிகவும் மகிழ்ச்சி!

மிஷ்கின் உலக சினிமாவில் இருந்து கதையைதிருடுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம்படம் பார்க்கும் போது தெரிந்தால் பேசலாம்.இன்று உலக சினிமாக்கள் எல்லாருக்கும்எல்லா வடிவத்திலும் பார்க்க முடிகிறது.ஆனால் தமிழ் மொழியில் இருண்டவிஷயங்களை இருளில் நமக்கேத்த வடிவில்கொடுக்க மிஷ்கின் போன்ற ஒரு சில கலைபடைப்பாளர்களே கொடுக்க முடியும்அது இந்தபடத்திலும் நிருபித்து உள்ளார்.

நடிப்பிற்கு புதிய முகங்கள் என்று கூற முடியாதஅளவு அனைத்து கதையின் நாயகர்களும்வாழ்ந்து காட்டி உள்ளனர்இங்கே நாயகர்கள்என அனைத்து கதாபாத்திரங்களையும் தான்கூறுகிறேன்இதில் காதல்,பாசம்,சமுக கோவம்என பல விஷயங்களை பதிவுசெய்திருக்கிறார்இசை ஆங்காங்கேமெல்லியதாய் ஒலித்து! ஒரு கட்டத்தில் என்இதய துடிப்பும்… அந்த ஓசையும்!! ஒன்றே!! எனஉணர்ந்தேன்ஒளி ஓவியம் என்று தான்ஒளிப்பதிவாளரை பதிய வேண்டும்அவருக்கென கலை இயக்குனரின் உழைப்பும்பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இங்கே கதையை பற்றியும்! கதையில்சுவாரசியம் பற்றியும் பேசினால்! எங்கே நான்படம் பார்த்து அடைந்த திருப்தி… இதைபடிப்பவர்களுக்கு அமையக்கூடாது என்றுஎதுவும் கூறாமல் என்னை கவர்ந்த அந்தநாயகியின் கண்களை நினைத்து இந்தமிஷ்கினின் உழைப்பை ஒரு துளி ஆனந்தகண்ணீரில் முடிக்கிறேன்.

என்றும் அன்புடன்,
இரசல்

No comments:

Post a Comment