Monday, January 18, 2010

கல்மரங்கள்(Fossil Wood)

கல்மரங்கள் தேசிய பூங்கா - திருவக்கரை, தமிழ்நாடு




இங்கு தான் இரண்டு கோடி ஆண்டுகள் முன் திருவக்கரையில் இந்த கல்மரங்கள் கொண்டு வரப்பட்டதாக அறியப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்த திருவக்கரை இது தமிழ்நாட்டின் பகுதியாகும். இங்கு சந்திரசேகரர் ஆலயம் பிரசித்தி பெற்றது. ஆலயம் வழிபடும் மக்களே பெரும்பாலும் கல்மரங்கள் பூங்காவிற்கு வருகை தருகிறார்கள். இதன் சிறப்பை சில மாதங்கள் முன்னர் National Geography channel தொகுபாலர்களால் மக்களின் பார்வைக்கு நேரம் ஒதுக்க பட்டிருக்கிறது.


ஒரு சில உறுத்தல்கள்:
* பராமரிக்க படவேண்டும் பூங்காவை சுற்றி காடுகள் இருக்கலாம் பூங்காவே காடை காட்சி அளிக்கிறது.
* ஏன் கல்மரங்கள் இங்கே பூங்காவாக மாற்றப்பட்டன, அறிவியல் கூற ஆட்களும் இல்லை வரலாறு கூற அறிவிப்பு பலகைகளும் இல்லை.
* பாதுகாப்பு இந்த அறிய கல்மரங்களுக்கு இல்லை வருபவர்கள் எல்லாம் கல்லை உடைத்து எடுத்து சென்றால் இன்னும் சில ஆண்டுகளில் அறிவிப்பு பலகை மட்டும் தான் மிஞ்சும்.
உங்கள் பார்வைக்கு கல்மரங்களின் புகைப்படங்கள்:







3 comments:

  1. தோழா தமிழன் உணர்வு மற்றும் உணர்ச்சி என்றோ இறந்து விட்டது . என்று அவன் பணத்திற்கு அவனை விலை பேசி அவன் உரிமையை விற்றானோ அன்றே எல்லாம் முடிந்தது. இதில் எங்கு அவனுக்கு சமுதாயத்தை பற்றி கவலை பட நேரம் இருக்கும். . அவன் வீடு மற்றும் அவன் உறவினர் தான் அவனுக்கு எல்லாமே சக மனிதரை நேசிக்க அவனுக்கு நேரம் இல்லை பாவம் . மக்கள் அனைவரும் சுயநலம் பார்க்க தொடங்கி விட்டார்கள்

    ReplyDelete
  2. unmaithaan thoza makkal makkalai nesikum kaalam sendru vittadhu..

    ReplyDelete
  3. நல்ல சிந்தனை ரசல்... இது போன்ற கல் மரங்கள் பெங்களூர்-இல் உள்ள லால் பாக் பூங்காவிலும், மைசூர்-இல் உள்ள ஜூவிலும் காண முடியும்...
    ஆனால், அங்கே அவை நல்ல முறையில் பராமரிக்க படுகின்றன... இங்கும் அது போல பராமரிக்க படலாம்...

    ReplyDelete